செய்திகள்

தமிழகம்

கொரோனா நிவாரண நிதியாக ரூ 2,000 வழங்கும் திட்டம் : இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்

ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாகரூ 2,000 வழங்கும் திட்டத்தை இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக 159 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சிய மைத்தது. கடந்த 7ம் தேதி முதல்வராகப்பதவி யேற்ற ஸ்டாலின், முக்கியமாக 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். கொரோனா காலத்தில் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படுவதால், அதைச்சரிப்படுத்த கொரோனா நிவாரண நிதியை அரசு அறிவித்துள்ளது. ரூ 4000 நிவாரண நிதியாக...
தமிழகம்

ராஜீவ் கொலை வழக்கு ஏழுபேர் விடுதலை. திமுகவுக்கு வைகோ கோரிக்கை!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஏழுபேரை விடுதலை செய்ய வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர்வை கோதிமுக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார். இது சமம்ந்தமாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:- தவறு செய்யாமலே ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகின்ற ஏழுபேரில், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரும் மரண தண்டனை கைதிகளாக வேமனதளவில் சித்ரவதை அனுபவித்து...
தமிழகம்

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட இரு வார முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்தது. தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று 28 ஆயிரத்தை கடந்துள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், மே 10 முதல் 24-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என அறிவித்தார். அதன் படி இன்று அதிகாலை...
இந்தியா

மிசோரமில் மிதமான நிலநடுக்கம்

மிசோரத்தின் லுங்லேய் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.03 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து தேசிய நில ஆய்வு மையம் கூறியது: மிசோரத்தின் லுங்லேய் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.03 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 3.7 அலகுகளாக பதிவானது. லுங்லேய் மற்றும் அதனையொட்டிய பகுதிகளிலும் நில அதிா்வு உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் ஏதுமில்லை என்று தெரிவித்துள்ளது....
இந்தியா

வீட்டுக்கு மதுபானம் விநியோகம், இந்த மாநிலத்தில் புதிய ஆப் அறிமுகம்!

கொரோனா வைரஸின் (Coronavirus) இரண்டாவது அலை காரணமாக, பல மாநிலங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய சேவைகளைத் தவிர மற்ற வணிக நடவடிக்கைகள் மூடப்பட்டுள்ளன. சத்தீஸ்கரில் (Chhattisgarh) இதே நிலைதான், மே 15 முதல் 17 வரை இங்குள்ள பல மாவட்டங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், மது அருந்துபவர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படாத வகையில், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரு புதிய நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. வீட்டில் மதுபானம் (Alcohol)...
தமிழகம்

முழு முடக்கத்தால் இருசக்கர வாகனத்திலேயே சொந்த ஊர் செல்லும் மக்கள்!

நாளை முதல் முழு முடக்கம் அமலுக்கு வருவதால் சென்னையில் இருந்து மக்கள் இருசக்கர வாகனங்களில் சொந்த ஊர் நோக்கி செல்கின்றனர். கொரோனா 2ஆவது அலையின் தீவிரம் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை முதல் வரும் 24ஆம் தேதி வரை முழுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறு முடக்கங்ளுடன் பேருந்து, ஆட்டோ, டாக்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்து செயல்பாடுகளும் நிறுத்தப்படுகின்றன. தனியாக செயல்படுகிற மளிகை, பலசரக்கு...
தமிழகம்

ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையை நிறுத்தி, பழைய முறையில் பொருட்கள் வழங்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழகத்தில் சுமார் 2,11,87,625 ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த கார்டுகளுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்டவை ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படுகின்றன. மக்களுக்கு ரேஷனில் வழங்கப்படும் பொருட்கள் வெளிச் சந்தையில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் குடும்ப தலைவர் அல்லது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் மட்டும் ரேஷன் கடைகளுக்கு சென்று வாங்கும்...
இந்தியா

மேற்கு வங்க வன்முறை தொடர்பாக மத்திய குழு நேரில் விசாரணை

சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் மேற்கு வங்க வன்முறை தலைவிரித்தாடியது. இந்த சம்பவங்களில் 16 பேர் கொல்லப்பட்டனர். இதுகுறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள, மத்திய உள்துறை அமைச்சகம் 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இந்த மத்திய அரசு குழு நேற்று முன்தினம் மேற்கு வங்கம் வந்தடைந்தது.வன்முறை சம்பவங்கள் நடந்த தெற்கு 24 பர்கானஸ் மற்றும் வடக்கு 24 பர்கானஸ் மாவட்டங்களில் நேரில் ஆய்வை மேற்கொண்டனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தார் மற்றும்...
இந்தியா

மத்திய பிரதேச கைதி ஒருவர் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்கிறார் -மனிதம்

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை சிறைக்கைதி ஒருவர் தானாக முன்வந்து அடக்கம் செய்யும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.. இந்தியாவில் பரவி வரும் கொரோனா இரண்டாவது அலை நாட்டில் கோரத்தாண்டவம் நிகழ்த்தி வருகிறது, இந்நிலையில் உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இன்று மட்டும் 3,915 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஷ்யாம் பாபா என்பவர் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை குற்றம் ஒன்றில்...
தமிழகம்

பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக் காலமானார் !!

தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன், நாகேஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து பிரபலமான பழம்பெரும் நடிகர் கல்தூண் திலக் (78) கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆர்மபக் கால கட்டத்தில் மறைந்த நடிகர் மேஜர் சுந்தர்ராஜனின் நாடக்குழுவில் சேர்ந்து மேடை நாடகங்களில் நடித்து வாழ்க்கையை துவங்கினார் திலக். அதை தொடர்ந்து 1981-ம் ஆண்டு வெளியான 'கல்தூண்' என்கிற படத்தில் சிவாஜியின் மகனாக நடித்து தன்னுடைய திரைவாழ்க்கையை துவங்கினார். அன்று முதல்...
1 569 570 571 572 573 583
Page 571 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!