செய்திகள்

தமிழகம்

எழுத்தாளர் கி.ரா.வின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்: உறவினர்கள் தகவல்

எழுத்தாளர் கி.ரா.வின் உடல் புதுச்சேரியில் இருந்து இன்று மதியம் 1 மணிக்கு சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. கி.ரா.வின் சொந்த ஊரான கோவில்பட்டி அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தில் இறுதிச்சடங்கு நடைபெற இருக்கிறது கி.ரா. என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் கோவில்பட்டி அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். 1922ம் செப்டம்பர் 19ம் தேதி பிறந்த இவர் கரிசல் இலக்கியத்தின் முன்னோடி என போற்றப்படுகிறார். 1958 ம் ஆண்டு...
தமிழகம்

கொரோனாவிற்கு இனிமேல் பிளாஸ்மா சிகிச்சை தேவை இல்லை…!

இனிமேல் கொரோனாவிற்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க தேவையில்லை என மத்திய அரசு அறிவிப்பு. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு முறைகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா சிகிச்சை முறைகளில் ஒன்றாக பிளாஸ்மா சிகிச்சை இருந்து வந்தது. பிளாஸ்மா சிகிச்சை என்பது கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களிடம் இருந்து, பிளாஸ்மாவை தானமாகப் பெற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு செலுத்தப்படுவதாகும்....
இந்தியா

டெல்லி சர்தார் படேல் சிகிச்சை மையத்தில் கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி!: மன அழுத்தத்தை போக்க நடவடிக்கை..!!

டெல்லியில் உள்ள சர்தார் படேல் சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பின் வேகம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் பாதிப்பு குறைந்த பாடில்லை. பல இடங்களில் படுக்கைகள் இன்றி நோயாளிகள் திண்டாடி வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்கும்...
இந்தியா

குஜராத்தில் இன்றிரவு கரையைக் கடக்கிறது அதி தீவிர புயலான டவ்-தே

அதி தீவிர புயலான டவ்-தே மேலும் வலுவடைந்து இன்றிரவு குஜராத்தில் கரையை கடக்க உள்ளது. அரபிக்கடலில் மாலத்தீவு மற்றும் லட்சத்தீவுகள் அருகே உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறி தற்போது அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. கேரளா, கர்நாடகாவுக்கு மேற்குப் பகுதியில் நகர்ந்து சென்ற இந்த புயலால் அம்மாநிலங்களில் கனமழை பெய்துள்ளது. நள்ளிரவு நிலவரப்படி, டவ்-தே புயல் மணிக்கு 18 கிலோமீட்டர் வேகத்தில் அரபிக்கடலில் வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில்...
தமிழகம்

இன்று முதல் ‘இ-பதிவு’ கட்டாயம்.. எதற்கெல்லாம் அனுமதி..? எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..? வெளியான முழு விவரம்..!

தமிழகத்தில் மாவட்டங்களுக்கு உள்ளே மற்றும் வெளியே பயணம் செய்வதற்கு இ-பதிவு இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை தளர்வுகள் இல்லாத ஊடங்ககும், மற்ற நாட்களில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும் நடைமுறையில் உள்ளது. ஆனாலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தற்போது ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. அதன்படி, காலை 10 மணி வரை மட்டுமே அத்தியாவசிய பொருட்கள் விற்பனை...
தமிழகம்

தஞ்சை முன்னாள் எம்.பி. துளசி அய்யா வாண்டையார் காலமானார்!

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி துளசி அய்யா வாண்டையார் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 93. காங்கிரஸின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக விளங்கியவர் தஞ்சை மக்களவை தொகுதி முன்னாள் எம்.பி. துளசி அய்யா வாண்டையார். 1991 முதல் 1996ஆம் ஆண்டு வரை தஞ்சை மக்களவை தொகுதி எம்பி-யாக இருந்தவர் இவர். சென்னை சாலிகிராமம் வீட்டில் உயிரிழந்த துளசி அய்யா உடல் சொந்த ஊரான பூண்டிக்கு கொண்டு...
தமிழகம்

ஸ்டெர்லைட்டில் பாதிக்கப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி: கோளாறை சரி செய்ய இஸ்ரோ நிபுணர்கள் வருகை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தொழில்நுட்பக் கோளாறால் ஆக்சிஜன் உற்பத்தி தடைபட்டுள்ள நிலையில் அதை சரி செய்ய இஸ்ரோ நிபுணர் குழு அங்கு விரைந்துள்ளது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஸ்டெர்லைட் நிர்வாகம், தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளதாகவும் இதை சரி செய்ய வந்துள்ள இஸ்ரோ நிபுணர் குழு சில ஆலோசனைகளை கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 3 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் அவசரத் தேவையை கருத்தில்...
தமிழகம்

கூட்டாக விண்ணப்பித்தால் வீட்டு வாசலில் தடுப்பூசி! – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

கூட்டாக விண்ணப்பித்தால் வீட்டு வாசலில் தடுப்பூசி! - சென்னை மாநகராட்சி அறிவிப்பு! சென்னையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள ஒரே நிறுவனம், வளாகத்தில் உள்ளவர்கள் விண்ணப்பித்தால் நேரடியாக முகாம் அமைத்து தடுப்பூசி போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை நாடி வருகின்றனர். இநிந்லையில் தற்போது...
உலகம்

செவ்வாய்கிரகத்தில் சீனாவின் தியான்வென்-1 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது!

செவ்வாய்கிரகம் தொடர்பான ஆராய்ச்சிக்காக அனுப்பி வைக்கப்பட்ட தியான்வென்-1 விண்கலம் வெற்றிகரமாக தரை இறங்கியதாக சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உலக நாடுகள் செவ்வாய் கிரகம் தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. அமெரிக்காவின் எலன் மாஸ்க், செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேற்றம் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இதில் சீனாவும் இணைந்துள்ளது. செவ்வாய்கிரகம் தொடர்பான ஆய்வுக்காக தியான்வென்-1 விண்கலத்தை கடந்த ஆண்டு அனுப்பியது சீனா. லாங் மார்ச் 5 என்ற பெயருடன் ஹெனன்...
இந்தியா

அரபிக்கடலில் உருவானது சூறாவளி புயலான டவ்-தே புயல் !

டவ்-தே புயல் மே 18 ஆம் தேதி காலைக்குள் குஜராத் கடற்கரை பகுதியில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் கேரளா, தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதியில் உருவான காற்றழுத்த...
1 565 566 567 568 569 583
Page 567 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!