செய்திகள்

செய்திகள்விளையாட்டு

சர்ச்சையை கிளப்பிய சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் பதிவு… மீம் போட்டு முற்றுப்புள்ளி வைத்த அஸ்வின்

தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஸ்வின் தொடர்பாக வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறிய கருத்து பல்வேறு விமர்சனங்களுக்கு வித்திட்ட நிலையில், அஸ்வின் பகிர்ந்த மீம் பதிவின் வாயிலாக மஞ்ச்ரேக்கர் விளக்கமளித்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் 37 டெஸ்ட் போட்டிகளிலும், 74 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக உள்ள மஞ்ச்ரேக்கர் அவ்வப்போது முன்வைக்கும் விமர்சனங்களும், கருத்துகளும் சர்ச்சைக்குள்ளாகும். இந்திய அணியின் ராக் ஸ்டார் ஆல்ரவுண்டர்...
செய்திகள்விளையாட்டு

சர்வதேச அளவில் அதிக கோல்கள் அடித்த லயோனல் மெஸ்ஸியின் சாதனை முறியடித்தார் சுனில் ஷேத்ரி

இந்திய கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான சுனில் ஷேத்ரி சர்வதேச அளவில் அதிக கோல்கள் அடித்த நடப்பு வீரர்களின் பட்டியலில் அர்ஜென்டினாவின் உலகளாவிய நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸியை பின்னுக்குத்தள்ளி 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 36 வயதான சுனில் ஷேத்ரி இந்த சாதனையை 2022-ம் ஆண்டுக்கான பிபா உலகக் கோப்பை மற்றும் 2023-ம் ஆண்டுக்கான ஏஎப்சி கோப்பை தொடர்களுக்கான ஆரம்பக்கட்ட தகுதி சுற்றில் வங்கதேச அணிக்கு எதிராக நேற்று முன்தினம்...
இந்தியாசெய்திகள்

இன்று முதல் மீண்டும் பஸ் போக்குவரது: கேரள அரசு அறிவிப்பு!

கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வந்த நிலையில் ஊரடங்கு மற்றும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து இன்று முதல் அங்கு பஸ் போக்குவரத்து தொடங்குவதாக கேரள போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றில் கூறியபோது தினசரி கொரோனா பாதிப்பு தற்போது கேரளாவில் 20 ஆயிரத்திற்கு குறைவாக...
இந்தியாசெய்திகள்

இந்தியா-அமீரகம் விமான போக்குவரத்து மேலும் 2 வாரங்கள் நீட்டிப்பு!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவியதை அடுத்து ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி தடை விதித்தது. இந்த தடையானது மே 4ஆம் தேதி வரை முதலில் நீக்கப்பட்ட நிலையில் அதன் பின் ஜூன் 24-ஆம் தேதி வரை தற்போது நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது இந்த நிலையில் அடுத்த மாதம் ஆறாம் தேதி வரை இந்தியாவில் இருந்து பயணிகள் விமான போக்குவரத்து...
இந்தியாசெய்திகள்

இந்திய தேர்தல் ஆணையராக அனூப் சந்திர பாண்டே நியமனம்!

உத்தரப் பிரதேசத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற அனூப் சந்திர பாண்டே இந்தியத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2019 பிப்ரவரியிலிருந்து தேர்தல் ஆணையராக பணியாற்றி வந்த சுசில் சந்திரா இந்தியத் தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் இவரது தலைமையில் நடத்தப்பட உள்ளன. இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே மாதத்தில் முடிவடையக்கூடிய...
செய்திகள்தமிழகம்

கோயில் நில ஆவணங்கள் இணையத்தில் வெளியீடு! தமிழக அரசு அதிரடி!!

இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களின் நிலங்களின் உரிமை ஆவணங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 3,44,647 ஏக்கர் கோவில் நிலம் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் சுமார் 36,000-க்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் உள்ளன. அவற்றுக்கு சொந்தமான நிலங்கள் 4,78,272 ஏக்கர். இந்நிலங்களின் உரிமை ஆவணங்களை சரிபார்க்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கோவில்களின் நில விவரங்கள்...
செய்திகள்தமிழகம்

கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்ப்பு!

மத்திய அரசின் கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது. கோவின் இணையதளத்தில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே இருந்த நிலையில், புதிதாக ஒன்பது மொழிகள் சேர்க்கப்பட்டபோது தமிழ் மொழிக்கு வாய்ப்பளிக்கப்படாதது சலசலப்பை ஏற்படுத்தியது. மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்திருந்தார். அவரைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஒன்றிய அரசின் கோவின் இணையதளத்தில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகள்...
செய்திகள்தமிழகம்

திரைப்பட இயக்குனர் சொர்ணம் மறைவு: மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

திரைப்பட இயக்குனர் சொர்ணம் நேற்று சென்னையில் காலமானார். அவரது உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். தமிழ் திரையுலகின் மூத்த இயக்குனர் கே.சொர்ணம் (வயது 88), சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் நேற்று காலை 8.35 மணியளவில் மாரடைப்பால் காலமானார். எம்.ஜி.ஆர் நடித்த 32 படங்கள் உள்பட 40 படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ள அவர், தமிழில் வெளியான தங்கத்திலே வைரம், சீர்வரிசை, நீ ஒரு மகாராணி, ஆசை...
செய்திகள்தமிழகம்

பொதுமக்கள் வீட்டில் இருந்தே மருத்துவரிடம் ஆலோசனை பெற புதிய செயலி அறிமுகம்: சேலம் மாநகராட்சி ஆணையர் தகவல்

சேலம் மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் வீட்டில் இருந்தே மருத்துவரிடம் ஆலோசனை பெற, 'சேலம் மாநகராட்சி வி - மெட்' செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் வீட்டில் இருந்தே மருத்துவரிடம் ஆலோசனை பெற சேலம் மாநகராட்சி சார்பில் செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொதுமக்கள் மருத்துவரிடம் மருத்துவ ஆலோசனை...
செய்திகள்விளையாட்டு

ட்விட்டரில் இனவெறி, பாலியல் தகவல் பதிவு இங்கிலாந்து வேகம் ராபின்சன் இடைநீக்கம்

இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஓல்லி ராபின்சன் இனவெறிக்கு ஆதரவாகவும், பெண்களுக்கு எதிராகவும் 8 ஆண்டுகளுக்கு முன்பு ட்விட்டரில் தகவல் பதிவு செய்ததற்காக அறிமுகமான முதல் தொடரிலேயே இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக லண்டன் லார்ட்ஸ் அரங்கில் நடந்த முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் விக்கெட் கீப்பர் ஜேம்ஸ் பிரேசி, வேகம் ஆலிவர் எட்வர்ட் ராபின்சன் (27 வயது) அறிமுகமாயினர். முதல் நாளிலேயே 2 விக்கெட் எடுத்து அசத்திய ராபின்சன்...
1 547 548 549 550 551 583
Page 549 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!