செய்திகள்

செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை: வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் திட்டவட்டம்

தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார். நீலகிரி மாவட்டம், உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில், தனியார் அமைப்பின் சார்பில் வழங்கப்பட்ட 30 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன்பெற்றுக்கொண்டார். அதன்பின்பு செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறும்போது ''தமிழகம் முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கிறது. தனியார் அமைப்பு வழங்கியுள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகள், மாவட்டத்தில் தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். கரோனா...
செய்திகள்தமிழகம்

இன்று புதிய தளர்வுகள் அறிவிப்பு… தமிழகம் வர இருக்கும் 3 லட்சம் தடுப்பூசிகள்!

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு அமலில் உள்ளது. இந்நிலையில் ஊரடங்கில் மேலும் தளர்வுகளை அறிவிப்பது குறித்து நேற்று முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெற்ற நிலையில் இன்று பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக கரோனா பாதிப்பு அதிகம் உள்ள எட்டு மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்படலாம் என...
உலகம்உலகம்செய்திகள்

ஐ.நா. பொதுச் செயலராக குட்டெரெஸ் மீண்டும் தேர்வு.

ஐ.நா. பொதுச் செயலராக அன்டோனியோ குட்டெரெஸ் வெள்ளிக்கிழமை மீண்டும் நியமிக்கப்பட்டாா். இதையடுத்து, அவா் அந்தப் பொறுப்பை மேலும் 5 ஆண்டுகளுக்கு வகிப்பாா். இதுகுறித்து 75-ஆவது ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தின் தலைவா் வோல்கான் போஸ்கிா் தெரிவித்துள்ளதாவது: ஐ.நா. பொதுச் செயலா் பதவிக்கு தற்போது அந்தப் பொறுப்பை வகித்து வரும் அன்டோனியோ குட்டெரெஸ் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளாா். அவரது இரண்டாவது பதவிக் காலம் வரும் 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் தேதி...
உலகம்உலகம்செய்திகள்

மாஸ்கோவில் ஜூன் 29 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. அரசு அதிரடி அறிவிப்பு..!!!!

உலகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஒரு சில நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதைத் தொடர்ந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான நாடுகளில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கிறது. கொரோனா பாதிப்பு முழுமையாகக் குறையும் வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று சில நாடுகள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் மாஸ்கோவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அமலில் உள்ள கட்டுப்பாடுகள் ஜூன்...
செய்திகள்விளையாட்டு

ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் மன்ப்ரீத் சிங் தலைமையிலான ஹாக்கி அணி

ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் அடுத்தமாதம் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 16 வீரர்கள் கொண்ட இந்திய ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு மன்ப்ரீத் சிங் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 8 ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் கலந்துக்கொள்ள இருக்கும் 16 பேர் கொண்ட இந்திய ஹாக்கி ஆடவர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது....
செய்திகள்விளையாட்டு

இந்தியாவின் பறக்கும் மனிதர் மில்கா சிங் கொரோனாவால் காலமானார்

இந்தியாவின் பறக்கும் மனிதர் மில்கா சிங்(91) கொரோனாவால் உயிரிழந்தார். பிரதமர் நரேந்திரமோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத்சிங் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மில்கா சிங்கின் மனைவி நிர்மல் கவுர், சில தினங்களுக்கு முன்னர்தான் கொரோனாவால் உயிரிழந்தார். முன்னாள் இந்திய தடகள வீரர் மில்கா சிங் கடந்த மாதம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல்நிலை சீராக இருந்ததால் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இம்மாதம் அவருக்கு ஆக்சிஜன்...
இந்தியாசெய்திகள்

உத்தராகண்ட்: ஊரடங்கை மீறிய பாஜக எம்.எல்.ஏ.வுக்கு அபராதம் விதித்த உதவி ஆய்வாளர் இடமாற்றம்

உத்தராகண்டில் ஊரடங்கை மீறிய பாஜக எம்.எல்.ஏ.வுக்கு அபராதம் விதித்த காவல் உதவி ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டார். உத்தராகண்ட் மாநிலத்தில் ரூர்கி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பிரதீப் பத்ரா. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, தனது குடும்பத்தினருடன் ஊரடங்கு விதிமுறைகளை மீறி முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றிக்கொண்டிருந்தார். அப்போது அவரை மறித்த காவல்துறையினர், அவர் எம்.எல்.ஏ. என்பதை அறியாமல் அபராதம் விதித்தனர். இதில் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ. அபராதத் தொகையை...
இந்தியாசெய்திகள்

புதுச்சேரி ஊரடங்கு தளர்வில் அனுமதி அளித்தும் இயங்காத தனியார் பேருந்துகள்: நகருக்குள் வேலைக்கு வருவோர் கடும் திண்டாட்டம்

ஊரடங்கு தளர்வில் அனுமதி அளித்தும் புதுச்சேரியில் இயங்காத தனியார் பேருந்துகளால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். கிராமங்களில் இருந்து புதுச்சேரி நகரப்பகுதிக்கு பணிக்கு வருவோர் இதனால் கடும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். புதுச்சேரியில் கரோனா பரவலைத் தடுக்க தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 8-ம் தேதி கூடுதல்தளர்வுகளை அரசு அறிவித்தது. இதில், அனைத்து தொழிற்கூடங்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகளை மாலை 5 மணி வரை திறக்கவும் பேருந்துகளை இயக்கவும் அனுமதிக்கப்பட்டது....
செய்திகள்தமிழகம்

கொடைக்கானல் பூங்காக்களில் பூத்துக்குலுங்கும் மலர்கள் யூடியூப் மூலம் ரசிக்க தோட்டக்கலைத்துறை ஏற்பாடு

கரோனா காரணமாக கொடைக் கானலில் 2-வது ஆண்டாக கோடைவிழா, மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து பூங்காக்களில் பூத்துக் குலுங்கும் மலர்களை கண்டு ரசிக்க தோட்டக்கலைத்துறை சிறப்பு ஏற்பாடு செய்து இதற்கென யூடியூப் சேனலை தொடங்கியுள்ளது. இதில் இந்த ஆண்டு பூங்காக்களில் பூத்துக் குலுங்கும் பூக்களை வீட்டி லிருந்தபடியே கண்டு ரசிக்கலாம். மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனில்...
செய்திகள்தமிழகம்

கல்வி தொலைக்காட்சியில் இன்று முதல் வகுப்புகள் தொடக்கம்!!

தமிழக அரசின் கல்வி டிவியில் புதிய பாடங்கள் அடங்கிய வீடியோ தொகுப்பை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார். இந்நிலையில் தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சியில் இன்று முதல் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க உள்ளன.தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசின் கல்வி தொலைக்காட்சி மூலம் நடப்பாண்டுக்கான வகுப்புகளை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். புதிய கல்வி ஆண்டுக்கான பாடங்களை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருந்து தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்,...
1 537 538 539 540 541 583
Page 539 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!