செய்திகள்

இந்தியாசெய்திகள்

பள்ளிகளைத் திறப்பதில் தீவிரம் தேவை: ஏனென்றால்?- எய்ம்ஸ் இயக்குநர் பேட்டி

பள்ளிகளைத் திறப்பதில் நாம் தீவிரத்துடன் செயல்பட வேண்டும் என்று எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கரோனா பெருந்தொற்று காரணமாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. கற்றல் பாதிப்பைக் குறைக்க ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றன. தொற்று பாதிப்பு குறைந்ததை அடுத்து, 2021 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகள் மட்டும்...
செய்திகள்தமிழகம்

இந்தியாவில் வரதட்சணைக் கொடுமைக்கு 1 மணி நேரத்திற்கு ஒரு பெண் பலியாகிறார்: கனிமொழி ஆதங்கம்

இந்தியாவில் வரதட்சணைக் கொடுமைக்கு 1 மணி நேரத்திற்கு, 1 பெண் பலியாகிறார் என்று திமுக மகளிரணி செயலாளரும் எம்பியும் ஆன கனிமொழி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக கனிமொழி எம்.பி வெளியிட்டிருக்கும் ட்வீட்டில், 'இந்தியாவில் வரதட்சணைக் கொடுமைக்கு 1 மணி நேரத்திற்கு, 1 பெண் பலியாகிறார். ஆனாலும் இந்தியக் குடும்பங்கள் இந்த வழக்கத்தை நிறுத்தியபாடில்லை. நம் மகள்களுக்கு திருமணம் செய்துவைக்கும் போது அவர்கள் சுயமரியாதையோடு பாதுகாப்பாய் இருப்பது முக்கியம் என்பதை உணரவேண்டும்'...
செய்திகள்தமிழகம்

ஜூன் 28 முதல் கல்லூரி தேர்வுகள் தொடக்கம் – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!!

தமிழகத்தில் பி.எட்., எம்.எட்., கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கான பருவத்தேர்வுகள் இணையம் வழியாக வருகிற ஜூன் 28ம் தேதி துவங்கி ஜூலை 15ம் தேதி வரை நடைபெறும் என பல்கலை நிர்வாகங்கள் தெரிவித்துள்ளது. தமிழக்தில் கொரோனா பரவல் காரணமாக கல்வி நிலையங்கள் ஏதும் திறக்கப்படவில்லை. பள்ளிகள் முதல் கல்லூரிகள் வரை வகுப்புகள் இணையம் வழியாகவே நடைபெற்று வருகிறது. அலகு தேர்வுகள், பருவத்தேர்வுகள், திருப்புதல் தேர்வுகள் போன்ற அனைத்து தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே...
செய்திகள்தமிழகம்

சென்னையில் மின்சார ரயில்களில் பயணம் செய்ய பொதுமக்களுக்கு இன்றுமுதல் கட்டுப்பாடுகளுடன் அனுமதி

சென்னையில் புறநகர் மின்சார ரயில்களில் இன்றுமுதல் சில கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்றின் 2-வது அலை குறைந்து வருவதால், மாநில அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அளித்துள்ளது. இந்நிலையில் பயணிகளின் தேவைக்கு ஏற்ப தொலைதூர மற்றும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. புறநகர் மின்சார ரயில்களில் அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். பொதுமக்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தனர். இதனால் ரயில் போக்குவரத்தை...
செய்திகள்விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது நியூஸிலாந்து

இந்தியா - நியூஸிலாந்து இடையே நடந்த உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன்ஷிப் பட்டதை வென்றது வில்லியம்ஸன் தலைமையிலான நியூஸிலாந்து அணி. இந்தியா- நியூஸிலாந்து அணிகள் மோதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி, இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடந்தது. மழை காரணமாக முதல் நாள் மற்றும் நான்காம் நாள் கைவிடப்பட்டது. மழை காரணமாக ஆறாம் நாள் வரை நடந்த இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் 217 ரன்களும்...
செய்திகள்விளையாட்டு

டெஸ்ட் ஆல் ரவுண்டர் தர வரிசை: முதலிடத்தில் ரவீந்திர ஜடேஜா

ஐசிசி டெஸ்ட் போட்டிகளின் ஆல் ரவுண்டர் தரவரிசையில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா முதலிடம் பிடித்துள்ளார். ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் 5 இடங்களில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், நியூசிலாந்தின் வில்லியம்சன், ஆஸ்திரேலியாவின் லபுஸ்சேன், இந்தியாவின் விராட் கோலி, இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகியோர் தொடர்கிறார்கள். பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதலிடத்தில் பாட் கம்மின்ஸ், 2-வது இடத்தில் அஸ்வின்,...
செய்திகள்தொழில்நுட்பம்

பிரபல McAfee AntiVirus ஓனர் ஜான் மெக்காஃபி சிறையில் தற்கொலை – அதிர்ச்சியில் டெக் உலகம்!

சாப்ட்வேர் ஜீனியஸான ஜான் மெக்காஃபி (75) சிறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவால் தேடப்படும் குற்றவாளியான மெக்காஃபி ஸ்பெயினிலுள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை அமெரிக்காவிற்கு நாடு கடத்த ஸ்பெயின் நீதிமன்றம் ஒப்புதல் அளித்த சிறிது நேரத்திலேயே தற்கொலை செய்துகொண்டதாக சிறைத் துறை அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். McAfee என்ற AntiVirus சாப்ட்வேரை கண்டுபிடித்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த மெக்காஃபி. அவரது பெயரிலே அந்த சாப்ட்வேரை வெளியிட்டார். இந்த ஆன்டிவரைஸை...
உலகம்உலகம்செய்திகள்

விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் 3 சீன வீரர்களுடன் பீஜிங்கில் இருந்து நேரடியாக பேசினார் அதிபர் ஜின்பிங்..!!

சீனா கட்டமைத்து வரும் விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ள வீரர்களுடன் சீன அதிபர் ஜின்பிங் நேரடியாக பேசியுள்ளார். அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் விண்வெளி நிலையங்களை அமைத்து ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதில் சீனாவும் சமீபத்தில் இணைந்திருக்கிறது. தற்போது விண்வெளி நிலையம் ஒன்றரை ஏற்படுத்தி வரும் சீனா கடந்த 17ம் தேதி 3 வீரர்களை விண்வெளிக்கு அனுப்பி வைத்திருந்தது. இந்நிலையில் விண்வெளி நிலையத்தை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள 3 வீரர்களுடனும்...
இந்தியாசெய்திகள்

யாருமே தப்பிக்க முடியாது..! ரகசிய கண்காணிப்பில் சிக்கியவர்கள். பிரபல நாட்டில் கடும் தண்டனை..!!

நாட்டில் உள்ள விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக வடகொரியாவில் 10 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. வடகொரியாவின் தலைவரான கிம் ஜாங் உன் நாட்டின் நடைமுறைகள் மற்றும் தனக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு மரண தண்டனையும் விதிக்க தயங்கமாட்டார். அதன்படி 10 பேருக்கு வடகொரியாவில் மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதாவது ரகசியமாக தொலைபேசியை பயன்படுத்தி வெளி உலகத்தை அழைக்க முயன்ற 10 பேருக்கு நாட்டில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் தடை...
இந்தியாசெய்திகள்

தடுப்பூசி செலுத்தியிருந்தால் 10% கட்டண சலுகை: ‘இண்டிகோ’ அறிவிப்பு

குறைந்தபட்சம் ஒரு தவணை கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ள பயணிகளுக்கு, கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்க இண்டிகோ விமான சேவை நிறுவனம் முன்வந்துள்ளது.அடிப்படை கட்டணத்தில் 10 சதவீத சலுகை என்பது ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்குத்தான் வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. இண்டிகோ விமான சேவை நிறுவனத்தின் தலைமை வருவாய்த் துறை அதிகாரி சஞ்சய் குமார் தெரிவித்துள்ளதாவது: குறைந்தபட்சம் ஒரு...
1 532 533 534 535 536 583
Page 534 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!