செய்திகள்

இந்தியாசெய்திகள்

3-வது அலை பாதிப்பு இரண்டாவது அலைபோல தீவிரமாக இருக்காது: ஐ.சி.எம்.ஆர். ஆய்வு

இந்தியாவில், கொரோனா மூன்றாவது அலை வந்தாலும்கூட, அது இரண்டாவது அலை கொரோனாபோல தீவிரமாக இருக்காது என ஐ.சி.எம்.ஆர். விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த சில மாதங்களில், கொரோனா மூன்றாவது அலை இந்தியாவில் ஏற்படும் எனக்கூறப்படும் நிலையில் ஐ.சி.எம்.ஆர். சார்பில் கணிதவியல் கோட்பாட்டின் கீழ், அதன் தாக்கம் எப்படியிருக்குமென ஆய்வுகள் செய்யப்பட்டன. அப்போதுதான், 'மூன்றாவது அலை ஏற்படுவதற்குள், இந்தியாவில் கணிசமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுவிடும். இதன் காரணமாக, கொரோனாவின் தாக்கம் ஓரளவு குறையும். இரண்டாவது...
இந்தியாசெய்திகள்

ஜம்மு விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு – பயங்கரவாதி கைது

ஜம்மு விமான நிலையத்தின் தொழில் நுட்ப பகுதியில் குண்டு வெடித்ததாக தகவல் வெளியானதை அடுத்து அந்த பகுதிக்கு வெடிகுண்டு செயல் இழப்பு நிபுணர்கள் விரைந்தனர். விமான நிலையத்திற்கு அருகே பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.   ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். அடிக்கடி பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறும் பகுதியாக உள்ளது ஜம்மு காஷ்மீர். ஜம்மு காஷ்மீர் தலைவர்களை சந்தித்த பிரதமர்...
செய்திகள்தமிழகம்

மீனவர்களுக்கு தனி வங்கி உருவாக்க நடவடிக்கை: கனிமொழி எம்.பி. உறுதி

மீனவர்களுக்கென தனி வங்கி உருவாக்குவதற்கு மத்திய அரசிடம் பேசி முயற்சி மேற் கொள்ளப்படும் என கனிமொழி எம்.பி. தெரிவித்தார். தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் கூடுதல் படகு அணையும் தளம் மற்றும் மீனவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மக்களவை உறுப்பினர் கனிமொழி தலைமை வகித்தார். மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், சமூக நலத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, ரூ.25 கோடி...
செய்திகள்தமிழகம்

கோவை மெட்ரோ ரயில் திட்டம் ஆளுநர் உரையில் இடம்பெறாதது ஏமாற்றம்: வானதி சீனிவாசன் எம்எல்ஏ கருத்து

கோவை மெட்ரோ ரயில் திட்டம் ஆளுநர் உரையில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது என,கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கோவை விமான நிலையத்தில் நேற்று அவர்செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து ஆளுநர் உரையில்குறிப்பிடவில்லை. இதுபற்றி எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி கேட்ட பின்பும், முதல்வர் ஸ்டாலின் கோவை மெட்ரோ ரயில் பற்றி எந்த வாக்குறுதியும் கொடுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு...
செய்திகள்தொழில்நுட்பம்

Mi டிவி 6 சீரிஸ் ஜூன் 28 அன்று சீனாவில் அறிமுகம் செய்யப்படும்.

Mi டிவி 6 சீரிஸ் ஜூன் 28 அன்று சீனாவில் அறிமுகம் செய்யப்படும். அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, சியோமி இந்த டிவி தொடர்பான பல அம்சங்களைப் பற்றிய தகவல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்தில், டிவியின் டிஸ்பிளே மற்றும் கேமிங் ஆதரவு அம்சங்கள் குறித்த தகவல்களை நிறுவனம் வழங்கியது. இப்போது இந்த டிவியின் கேமரா பற்றிய தகவல்களை நிறுவனம் பகிர்ந்துள்ளது. இந்த டிவியில் ஒன்று இல்லை ஆனால் இரண்டு கேமராக்கள் சேர்க்கப்படும் என்று நிறுவனம்...
செய்திகள்விளையாட்டு

இலங்கையுடன் டி20 தொடர்: இங்கிலாந்து வெற்றி

இலங்கைக்கு எதிரான 2வது டி20 ஆட்டத்தில் வென்ற இங்கிலாந்து அணி, 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, முதல் டி20 ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க, 2வது டி20 ஆட்டம் அதே கார்டிப் நகரில் நடந்தது. முதல் ஆட்டத்தைப் போலவே டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணி, 20 ஓவர்...
செய்திகள்விளையாட்டு

கோபா அமெரிக்கா கால்பந்து: கால் இறுதி சுற்றில் உருகுவே

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் பொலிவியாவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு உருகுவே முன்னேறியது. பிரேசிலின் குயாபா நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 11-வது நிமிடத்தில் பொலியாவுக்கு கோல் அடிக்க அருமையான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த அணியின் வீரர் ரோட்ரிகோ ரமல்லோ பந்தை கோல்கம்பத்துக்கு மேலே அடித்து ஏமாற்றம் அளித்தார். தொடர்ந்து 40-வது நிமிடத்தில் உருகுவேயின் லூயிஸ் சுவாரஸ் பாக்ஸ் பகுதிக்குள்...
உலகம்உலகம்செய்திகள்

சொந்த சிறுநீரகத்தையே புதுப்பித்து மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட நபர்..!

முதன்முறையாக ஐக்கிய அரபு நாடுகளில் சொந்த சிறுநீரகத்தையே புதுப்பித்து மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார் நோயாளி ஒருவர். ஐக்கிய அரபு நாட்டில் அலி ஷம்சி என்பவருக்கு சிறுநீரகத்தில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இவர் பிறக்கும் போதே ஒரு சிறுநீரகத்துடன் பிறந்துள்ளார். தற்போது இவருக்கு 60 வயதாகிறது. அதனால் சிறுநீரகத்தை மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். இவரது உடலிலிருந்து சிறுநீரகத்தை எடுத்து உடல் உறுப்புகளை பாதுகாக்கும் திரவத்தில் வைத்துள்ளனர். பின்னர், இவரது...
உலகம்உலகம்செய்திகள்

18 சிறுவர்கள் தீயில் உடல் கருகி பலி ! தற்காப்பு கலைகள் கற்று தரும் பள்ளியில் பயங்கரம் !

சீனாவில் தற்காப்பு கலைகள் கற்று தரும் பள்ளியில் பயங்கர தீ விபத்தில் 18 சிறுவர்கள் உடல் கருகி பலியாகினர். மத்திய சீனாவில் உள்ள ஹெனன் மாகாணத்தின் ஷுவாங்கியு நகரில் 'மார்ஷியல் ஆர்ட்ஸ்' எனப்படும் தற்காப்பு கலைகளை கற்று தரும் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு 7 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 34 பேர் வளாகத்திலேயே தங்கியிருந்து தற்காப்பு கலைகளை கற்று வந்தனர். இந்த நிலையில் நேற்று...
இந்தியாசெய்திகள்

Smart city 2020 விருதுகள்: முதலிடத்தில் உத்திர பிரதேசம், மூன்றாம் இடத்தில் தமிழகம்

2020 ஆம் ஆண்டிற்கான ஸ்மார்ட் சிட்டி விருதுகள் மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது, இதில் இந்தூர் (மத்தியப் பிரதேசம்) மற்றும் சூரத் (குஜராத்) ஆகியவை இணைந்து ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக விருதை வென்றன. மாநில அளவில் உத்தரபிரதேசம் முதலிடத்திலும், அதை அடுத்து மத்தியப் பிரதேசமும், தமிழ்நாடும் உள்ளன. ஸ்மார்ட் சிட்டி விருதுகள் சமூக அம்சங்கள், ஆளுமை, கலாச்சாரம், நகர்ப்புற சுற்றுச்சூழல், சுகாதாரம், பொருளாதாரம், சுற்றுச்சூழல் மேம்பாட்டு, நீர், நகர்ப்புற போக்குவரத்து ஆகிய...
1 530 531 532 533 534 583
Page 532 of 583

Right Click & View Source is disabled.

error: Content is protected !!