செய்திகள்

செய்திகள்தமிழகம்

27 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு முழு காரணமும் அதற்கான விதை போட்டதும் நாங்கள் தான் ..!!

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவுதினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார், பெஞ்சமின் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 27 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு முழு காரணம் அதிமுக தான் எனவும் அதற்கான விதை நாங்கள் போட்டது என்றார். இட ஒதுக்கீட்டிற்காக அனைத்து...
செய்திகள்தமிழகம்

தமிழக விவசாயிகளை காக்கவே உண்ணாவிரதம்: அண்ணாமலை விளக்கம்

''தமிழக விவசாயிகளை காக்கவே, தஞ்சையில் உண்ணாவிரதம் இருக்க உள்ளேன்,'' என, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.தீரன் சின்னமலை நினைவு தினத்தை ஒட்டி, ஈரோடு மாவட்டம், ஓடாநிலையில் அவரது சிலைக்கு, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்துக்காக பாடுபட்ட எந்த தலைவரின் வரலாறும், தமிழக பாடத் திட்டத்தில் இல்லை. தமிழக வரலாற்றில் தீரன் சின்னமலை, அவருடன் போராட்டத்தில் பங்கேற்ற...
செய்திகள்தமிழகம்

வருகிற 13-ந் தேதி பொது பட்ஜெட் தாக்கல் ?

தமிழ்நாடு சட்டசபை கூட்டம் கடந்த மாதம் 21-ந்தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதன் பிறகு 3 நாட்கள் சட்டசபை நடைபெற்றது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசினார்கள். இறுதி நாளன்று முதல்vர் மு.க.ஸ்டாலின் விரிவாக பதிலளித்து பேசினார். கடந்த மாதம் 24-ந்தேதியுடன் சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு பட்ஜெட் தயாரிப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் நிதித்துறை அதிகாரிகளுடன்...
உலகம்உலகம்செய்திகள்

“சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு!”.. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 302-ஆக அதிகரிப்பு..!!

சீன நாட்டில் சமீபத்தில் கனத்த மழை பொழிந்ததில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 302-ஆக அதிகரித்திருக்கிறது. சீனாவில் இருக்கும் ஹெனான் என்ற மாகாணத்தில் கடும் வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதியில் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்பு குழுவினர் மீட்ட வண்ணம் இருக்கிறார்கள். இந்நிலையில் பலியானவர்கள் எண்ணிக்கையும் 302 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இம்மாகாணத்தில் பொழிந்த கனத்த மழை கடந்த ஆயிரம் வருடங்களில் பொழியாத அளவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெள்ளத்தில் மாட்டி...
உலகம்உலகம்செய்திகள்

ஆப்கன் அகதிகள் மீள்குடியேற்ற திட்டம் விரிவாக்கம்: அமெரிக்கா

ஆப்கனில் தலிபான்களால் ஆபத்தை எதிா்கொள்ளும் வாய்ப்புள்ள அந்நாட்டு குடிமக்களை மீள்குடியேற்றம் செய்யும் திட்டத்தை அமெரிக்கா விரிவுபடுத்தியுள்ளது. ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கை கடந்த மே மாதம் தொடங்கியது. இம்மாத இறுதிக்குள் எஞ்சியிருக்கும் படையினா் அனைவரும் திரும்பப் பெறப்பட்டுவிடுவா் என அதிபா் பைடனின் நிா்வாகம் அறிவித்துள்ளது. அமெரிக்கப் படைகள் வெளியேற்றத்தைத் தொடா்ந்து ஆப்கனில் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல முக்கியமான பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றி வருகின்றனா்....
செய்திகள்விளையாட்டு

ஒரே ஒலிம்பிக்கில் 7 பதக்கம் வென்று அசத்திய வீராங்கனை – யார் இவர் ?

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கடந்த ஒரு வாரமாக பல ஆச்சரியமான மற்றும் சுவாராஸ்யமான விஷயங்கள் நடைபெற்று உள்ளன. குறிப்பாக வெறும் 34ஆயிரம் பேரை கொண்ட ஒரு நாடு பதக்கம் வென்றது. ஐரோப்பிய கண்டத்தில் உள்ள சான் மெரினோ என்ற நாடு தான் அது. அப்படி ஒரு நாடு சாதனைப் படைக்க மற்றொரு புறம் ஒரே வீராங்கனை 7 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். 130 கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட...
செய்திகள்விளையாட்டு

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலிருந்து மயங்க் அகர்வால் வெளியேறினார்

பயிற்சியின்போது தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கலந்துகொள்ளமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக தற்போது இங்கிலாந்தில் முகாமிட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்காக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அங்கு இந்திய அணி வீரர்கள் தங்கியுள்ளனர். டெஸ்ட் போட்டி இன்னும்...
இந்தியாசெய்திகள்

‘மாஜி’ அதிகாரிக்கு சலுகையா? மெஹபூபா முப்தி கேள்வி!

''பயங்கரவாதிகள் தப்பிக்க உதவிய முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு சலுகை காட்டப்பட்டுள்ளது ஏன்,'' என, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெஹபூபா முப்தி கேள்வி எழுப்பியுள்ளார்.ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகளை தன் காரில் பாதுகாப்பாக அழைத்துச் சென்றதாக, காஷ்மீரைச் சேர்ந்த முன்னாள் உதவி எஸ்.பி., தவிந்தர் சிங் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அரசியல் சாசனத்தின் 311வது பிரிவின் கீழ் அவரை பதவியில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்து...
இந்தியாசெய்திகள்

தென் மாநிலங்களில் கூடுதல் மழை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

'தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில், ஆக., - செப்., மாதங்களில் தென்மேற்கு பருவ மழை, வழக்கத்தை விட சற்று கூடுதலாக இருக்கும்' என்ற மகிழ்ச்சியான தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை வழக்கத்துக்கு மாறாக இரண்டு நாள் தாமதமாக, ஜூன் 3ல் கேரளாவில் துவங்கியது. ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் மற்றும் டில்லி தவிர, வட மாநிலங்களின் சில பகுதிகளிலும்,...
செய்திகள்தமிழகம்

பாடகி கல்யாணி மேனன் காலமானார்

பிரபல திரைப்பட பின்னணி பாடகி கல்யாணி மேனன். நல்லதொரு குடும்பம் படத்தில் செவ்வானமே பொன் மேகமே... என்ற பாடலின் மூலம் இளையராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டார். அதன்பிறகு காதலன், முத்து, அலைபாயுதே, பார்த்தாலே பரவசம், விண்ணைத் தாண்டி வருவாயா, 96 உள்பட பல படங்களில் பாடியுள்ளார். 80 வயதான கல்யாணி மேனன் முதுமை காரணமாக உடல்நல பிரச்னை ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் இன்றி...
1 509 510 511 512 513 584
Page 511 of 584

Right Click & View Source is disabled.

error: Content is protected !!