செய்திகள்

இந்தியாசெய்திகள்

இன்று ஓணம் பண்டிகை கொண்டாட்டம்- முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து

ஓணம் பண்டிகையை முன்னிட்டு,மலையாள மொழி பேசும் மக்களுக்கு தமிழக முதல்வர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் ஸ்டாலின்: சகோதரத்துவம், சமூக நல்லிணக்கத்தின் பெருமைமிகு அடையாளமாக ஓணம் பண்டிகை திகழ்கிறது. அன்புக்கும், ஈகைப் பண்புக்கும் மிகச் சிறந்த அடையாளமாக விளங்கும் ஓணம் திருநாளில், திராவிட மொழிகளில் ஒன்றான மலையாள மொழி பேசும் தமிழ்நாடு வாழ் மலையாள மக்களும், கேரள மக்களும் நலமிகு...
செய்திகள்தமிழகம்

நாமக்கல், தூத்துக்குடி மாவட்டங்களில் விடிய விடிய கனமழை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், அரியலூர், டெல்டா மாவட்டங்கள், மற்றும் புதுச்சேரி, காரைக்காலின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 24ம் தேதி வரையில் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு சென்று மீன்பிடிக்க வேண்டாம் என...
செய்திகள்தமிழகம்

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆர்டிபிசிஆர் கருவிகள் கையாள்வதில் முறைகேடு?- நடவடிக்கை மேற்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவு

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆர்டிபிசிஆர் கருவிகள் கையாளப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பதை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசின் மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி சி.முத்துக்குமார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ''செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனைக்காக ரூ.64 கோடி மதிப்பிலான ஆர்டிபிசிஆர் கருவிகள் வழங்கப்பட்டன. இவற்றின் மூலம் தினமும்...
செய்திகள்தொழில்நுட்பம்

Google Pixel 5a | கூகுள் வெளியிடும் 5ஜி போன்.. எல்லாம் இருக்கு.. ஆனால்…?

கூகுள் நிறுவனம் தனது Pixel 4a மாடலை கடந்த வருடம் அறிமுகம் செய்தது. உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்ற அந்த மாடல் பட்ஜெட் விலையால் வாடிக்கையாளர்களை கவர்ந்தது. கவர்ச்சிகரமான சார்ப்ட்வேரும் வாடிக்கையாளர்களை கவர முக்கிய காரணமாக இருந்தது. Pixel 4a இரு வகையான மாடல்களாக வெளியானது. ஒன்று 4ஜி மற்றொன்று 5ஜி. இந்த நிலையில் அடுத்த ஸ்மார்ட்போன் உலகம் 5ஜி என்ற நிலை வந்துவிட்டதால் கூகுள் தங்களுடைய போன்...
உலகம்உலகம்செய்திகள்

சீனாவுக்கு உதவும் உலக சுகாதார அமைப்பு : வெளியான அதிரவைக்கும் தகவல்!

உலக நாடுகள் பல கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் ஆய்வகத்திலிருந்துதான் வெளியேறியிருக்கவேண்டும் என சந்தேகப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், சீனா அந்தக் கூற்றை தொடர்ந்து மறுத்துவருகிறது. உண்மையை அறிவதற்காக உலக சுகாதார அமைப்பின் சார்பில் சீனாவுக்கு அனுப்பப்பட்டவர்களும், தெளிவான உண்மையைக் கூறாமல் ஏதேதோ கூறிவந்தார்கள். என்றாலும், புதிதாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் மட்டும் சீனா மீது கண்வைக்கும்படி தனது உளவுத்துறைக்கு கட்டளையிட்டார். இந்நிலையில், கொரோனா வைரஸ் வுஹானில் உருவானதை மறைப்பதற்காக,...
உலகம்உலகம்செய்திகள்

பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்போம்.. யாரும் பயப்பட வேண்டாம்.. தலிபான்கள் அறிவிப்பு.!!!

ஆப்கானிஸ்தான் நாடு முழுமையாக தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் பயத்தில் வெளிநாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தலிபான் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், "ஆப்கானில் உள்ள தூதரகங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். மக்களுக்கு சேவை செய்வதற்காக நாங்கள் இங்கே இருக்கிறோம். எங்களுடைய ஆட்சியில் பெண்களுடைய உரிமை பாதுகாக்கப்படும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஷரியத் சட்டப்படி உரிமைகள் வழங்கப்படும். பெண்களுக்கு எதிரான அடக்கு முறையில் நாங்கள்...
செய்திகள்விளையாட்டு

‘தங்க மகன்’ நீரஜ் சோப்ராவுக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி!

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் வீசி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். தன்னுடைய முதல் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள 23 வயதான இவர், இந்தியாவிற்காக தடகளத்தில் தனது முதல் தங்கத்தை வென்று அசத்தியுள்ளார். பெரிய போட்டிகளில் தங்கம் வெல்வது ஒன்றும் நீரஜ் சோப்ராவிற்கு புதிதல்ல. அவர் இதற்கு முன்பாக பல தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். உதாரணமாக, 2016 உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் தங்கம்,...
செய்திகள்விளையாட்டு

“ஆப்கனில் கால்பந்தாட்ட வீராங்கனைகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை” : முன்னாள் கேப்டன் கலிதா

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது தலிபான் அமைப்பு. இந்நிலையில் அந்நாட்டின் மகளிர் கால்பந்தாட்ட அணி வீராங்கனைகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என தெரிவித்துள்ளார் அந்த அணியின் முன்னாள் கேப்டன் கலிதா போபல் (Khalida Popal). 'எங்கள் நாட்டின் கால்பந்தாட்ட வீராங்கனைகள் எனக்கு போன் செய்து வருகின்றனர். நான் அவர்களுக்கு சொல்வதெல்லாம் இவை தான். உங்களது சமூக வலைத்தள கணக்குகளை முடக்குங்கள், உங்களது புகைப்படங்களை அழியுங்கள், எங்காவது தப்பி சென்று மறைந்துக்...
இந்தியாசெய்திகள்

பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம்: நாட்டின் பாதுகாப்பு தகவலை அரசு வெளியிடத் தேவையில்லை- உச்ச நீதிமன்றம் கருத்து

பெகாசஸ் மென்பொருள் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான எந்தத் தகவலையும் மத்திய அரசு வெளியிடத் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடங்கியது. இதனிடையே, பெகாசஸ் விவகாரம் தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்த உத்தரவிடக்...
இந்தியாசெய்திகள்

1 முதல் 10 கிலோவாட் வரை வீடுகளில் சூரியஒளி மின் நிலையம் அமைக்க மானியம்: தனி இணையதளத்தை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்

புதுச்சேரி மின்துறை தலைமை அலுவலகத்தில் சூரியஒளி மின்சக்தி திட்டம் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. வீடுகளில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிப்பது மற்றும் திட்ட விவரங்கள் தொடர்பாக தனி இணையதளத்தை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் கூறியதாவது: மத்திய அரசு சூரியஒளி மின்சாரம் தயாரிக்க வீடுகளில் மின்சாரம் பயன்படுத்தும் மின் நுகர்வோருக்கு மானியத்துடன் கூடிய திட்டம் அறிவித்துள்ளது. ஒரு கிலோவாட்டில் இருந்து 10 கிலோவாட் வரை...
1 497 498 499 500 501 584
Page 499 of 584

Right Click & View Source is disabled.

error: Content is protected !!