செய்திகள்

இந்தியா

ஆப்கானிஸ்தான் தீவிரவாத அச்சுறுத்தலை சமாளிக்க தயார்: ராணுவ தளபதி பிபின் ராவத் உறுதி

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில்,அதன் அண்டை நாடான இந்தியாவுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச அரசியல்பார்வையாளர்கள் கூறி வருகின்றனர். மேலும், தலிபான்களின் ஆதரவுடன் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் செயல்படும் தீவிரவாத அமைப்புகள் வலுவடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 'அப்சர்வர் ரிசர்ச்பவுண்டேஷன்' என்ற அறக்கட்டளை சார்பில் 'இந்திய - அமெரிக்கஉறவும் - 21-ம் நூற்றாண்டின் பாதுகாப்பும்' என்ற தலைப்பிலான சர்வதேச கருத்தரங்கம் காணொலிக் காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா...
தமிழகம்

பயிர் கடன் தள்ளுபடியில் திடீர் திருப்பம்.. அமைச்சர் ஐ பெரியசாமி தகவல்.!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கூட்டுறவு துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது. அப்போது அதற்கு பதிலளித்து பேசிய கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி, பயிர் கடன் தள்ளுபடி பொறுத்தவரை 81 சதவீதம் பேருக்கு ரசீது வழங்கப்பட்டுள்ளது. சாகுபடி பரப்பளவு, பயிருக்கு வாங்க வேண்டிய கடனை விட கடந்த அதிமுக ஆட்சியில் பல மடங்கு உயர்த்தி வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதன் மூலம் ரூ. 516 கோடி முறைகேடாக வழங்கப்பட்டு...
தமிழகம்

தமிழ்நாட்டில் இந்த 3 கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்கான தடை தொடரும்..!!

கொரோனா ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், வழிபாட்டுத் தலங்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை. இந்நிலையில், மருத்துவத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களுக்கான தடை தொடர்ந்து அமலில் இருக்கும். பள்ளிகள் திறந்து ஒருவாரம் கழித்து கொரோனா பாதிப்பு குறைந்திருந்தால் வழிபாட்டுத் தலங்களுக்கான கட்டுப்பாட்டை நீக்குவது குறித்து முடிவெடுக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது....
உலகம்

அமெரிக்கா ஆகஸ்ட் 31க்குள் வெளியேறாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும்: தலிபான் எச்சரிக்கை

அமெரிக்கா ஏற்கெனவே அறிவித்தபடி வரும் 31ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து தனது படைகளை விலக்கிக்கொள்ளாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் கூறியுள்ளார். அமெரிக்காவும், இங்கிலாந்தும் தங்களது படைகளை திரும்பப் பெறுவதற்கு கூடுதல் அவகாசம் கோரினால் அது தங்களிடையே அவநம்பிக்கையையே ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதே நேரம் 31ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற விரும்பும் அனைத்து அமெரிக்கர்களையும் 31ஆம் தேதிக்குள் வெளியேற்றுவதில் எந்த...
உலகம்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை சாதனம்: பாகிஸ்தான் வெற்றிகர சோதனை

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'ஃபதே-1' ஏவுகணை செலுத்தியின் சோதனையை செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக நடத்தியதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'எதிரி நாட்டின் பகுதிகளை ஃபதே-1 மூலம் துல்லியமாகத் தாக்கி அழிக்க முடியும். தரையிலிருந்து செலுத்தப்பட்டு தரையில் உள்ள இலக்கை இதன் ஏவுகணைகள் தாக்கும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. ஃபதே-1 ஏவுகணை செலுத்தும் தளவாடத்தை கடந்த ஜனவரியில் முதல்முறையாக பாகிஸ்தான் ராணுவம் பரிசோதித்தது. அப்போது...
இந்தியா

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப் பணிகள் மும்முரம்: 6 மாதங்களில் வளர்ச்சி தெரியும்: முதல்வர் ரங்கசாமி தகவல்

புதுச்சேரியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டப் பணிகளின் வளர்ச்சி 6 மாதங்களில் தெரியவரும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். புதுச்சேரி அண்ணா திடலை சுற்றி 250 நகராட்சி கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு நகராட்சி சார்பில் மாதம் ரூ.1,500 வாடகை வசூலிக்கப்பட்டு வந்தது. இப்போது அண்ணா திடலில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் ரூ.12 கோடியே 19 லட்சம் மதிப்பில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அண்ணா திடலை சுற்றியுள்ள குபேர்...
இந்தியா

மேகதாது அணை விவகாரம் : கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை டெல்லி பயணம்

மேகதாது அணை திட்டத்திற்கு உடனடியாக அனுமதி வழங்க கோரி மத்திய அமைச்சர்களை சந்தித்து பேச கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இன்று டெல்லி செல்கிறார். தமிழகத்தின் எதிர்ப்பை மீறி கர்நாடக அரசு, மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், மேகதாது அணை திட்டம், நதி நீர் பங்கீட்டு பிரச்சினைகள் குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை பெறவும், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர்...
தமிழகம்

சென்னையில் அடுத்த 25 ஆண்டுகளின் குடிநீர் தேவைக்காக 500 ஏரிகள் தூர்வாரப்பட்டு நீர் சேகரிக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னைக்கு அடுத்த 25 ஆண்டுகளில் தேவைப்படும் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு பல்வேறு பகுதிகளில் 500 ஏரிகள் தூர்வாரப்பட்டு, அதிகளவில் நீர் சேகரிக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத் துறை மானிய கோரிக்கையின் மீது முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி பேசும்போது, ''சென்னைக்கான குடிநீருக்கு கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் கீழ், ஜப்பானின் ஜைகா நிதியின் மூலம் பேரூரில் 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட...
தமிழகம்

10.5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிப்பது குறித்து இன்று முடிவு

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில், வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு பிரத்யேகமாக10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து 25-க்கும்மேற்பட்ட வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.கண்ணம்மாள் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வன்னியர் சமுதாயத்துக்காக மட்டும் தேர்தல் ஆதாயத்தைக் கருத்தில் கொண்டு உள் இடஒதுக்கீடு வழங்கி சட்டம்பிறப்பித்து...
உலகம்உலகம்செய்திகள்

சிறையில் உள்ள முன்னாள் அதிபர்.. தற்கொலை முயற்சி.. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!!

சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அதிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள பொலிவியாவில் இடைக்கால அதிபராக 2019ஆம் ஆண்டு முதல் 2020 வரை பணியாற்றியவர் ஜெனீன் அனீஸ். இவர் 2019 ஆம் ஆண்டில் அதிபராக இருந்த இவோ மொரலீசின் ஆட்சியை கவிழ்க்கும் திட்டத்தில் ஈடுபட்டதாக அவர் மீது புகார் எழுப்பப்பட்டது. இதனால் இந்த நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் அனீஸ் கைது செய்யப்பட்டார். மேலும் இவோ...
1 493 494 495 496 497 584
Page 495 of 584

Right Click & View Source is disabled.

error: Content is protected !!