செய்திகள்

இந்தியா

5 முதல் 18 வயதிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி பரிசோதனை : ‘பயாலஜிக்கல்-இ’ நிறுவனத்திற்கு அனுமதி

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த 'பயாலஜிக்கல்-இ' நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை, 5 முதல் 18 வயதிலான சிறுவர்களுக்கு செலுத்தி (மனிதர்களுக்கு செலுத்தி) பரிசோதிக்க இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது. பயாலஜிக்கல்-இ மருந்து நிறுவனம், கொரோனாவுக்கு எதிராக ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசியை இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது. இந்த...
இந்தியா

ஜஸ்ட் டயல் நிறுவனத்தை மேலாண்மை செய்யும் முழு பொறுப்பையும் ஏற்றது ரிலையன்ஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் உள்ளூர் தகவல் தேடல் சேவையில் முன்னணியில் இருக்கும் ஜஸ்ட் டயல் நிறுவனங்களுக்கு இடையே கடந்த மாதத்தில் ஒப்பந்தம் உறுதியானது. அதன்படி, ரிலையன்ஸின் ரீடைல் வென்சர்ஸ் லிமிடெட் நிறுவனம் ஜஸ்ட் டயல் நிறுவனத்திடம் இருந்து 3,497 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை கையகப்படுத்தியுள்ளது. ஜஸ்ட் டயல் நிறுவனத்திடம் இருந்து முதல் கட்டமாக 40.95 விழுக்காடு பங்குகளை கையகப்படுத்துவதாகவும், அதன்பிறகு ஓஃபன் ஆபர் மூலம் 26 விழுக்காடு பங்குகளை...
தமிழகம்

கோடநாடு கொலை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு..!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதியன்று காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சயான் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஊட்டி நீதிமன்றத்தில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில்...
தமிழகம்

சிறப்பு வழிகாட்டி குழு… கொரோனா 3ஆம் அலையை எதிர்கொள்ள தயார் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழக சட்டமன்றத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான கொள்கை விளக்க குறிப்பை அந்த துறையின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் கொரோனா 3ஆம் அலையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான கொள்கை விளக்க குறிபில், மத்திய அரசின் ஆதரவோடு, துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை...
தமிழகம்

இலங்கைத் தமிழர்கள் குடி உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்.. வைகோ கோரிக்கை.!!

முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள் குடி உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில், 100 க்கும் மேற்பட்ட முகாம்களில் வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்விற்காக, ரூ 317 கோடியில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து இருக்கின்ற, தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து, அறிக்கை வெளியிட்டு இருந்தேன். அவர்களுக்கு, 7469 வீடுகள்...
உலகம்

50 வருடத்தில் 20,00,000 மக்கள் பலி! பகீர் கிளப்பும் வானிலை சார்ந்த பேரழிவுகள்!

உலகம் முழுவதும் தற்போது கொரோனா காரணமாக அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. அதே வேளையில் பருவநிலை மாற்றங்களும் நிகழ்ந்து வருகின்றன. இதனால் உலகின் வெப்பநிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு வருவதாக வானயியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மாற்றங்கள் அடிக்கடி உலகின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் கடுமையான வெப்பம் ஆகியவை ஏற்படுகின்றன. இந்த பேரழிவுகள் கடந்த 50 ஆண்டுகளில் 5 மடங்கு அளவு அதிகரித்து வருகின்றன எனவும், இதன் காரணமாக...
உலகம்

அடுத்தாண்டு வரை வீட்டிலிருந்தே பணி! கூகுள் அதிரடி!

உலகம் முழுவதும் கொரோனா பெரும் பாதிப்புக்களை கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக உருவாக்கி வருகிறது.இதனால் பல மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக மென்பொருள் நிறுவனங்கள் வீட்டிலிருந்து பணிபுரியும் வசதியை அறிமுகப்படுத்தியது. மேலும் கொரோனா அடுத்தடுத்த அலைகள் பரவக் கூடும் என நிபுணர் குழு எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில் இது குறித்து கூகுள் நிறுவன சி இ ஓ செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உலகின் பல்வேறு பகுதிகளில் பல...
இந்தியா

தொழில் வளர்ச்சிக்காக புதிய இணையதளம் தொடக்கம்; காஷ்மீர் ரூ.50 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்க்கும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை

ஜம்மு காஷ்மீரின் தொழில் வளர்ச்சிக்காக புதிய இணையதளத்தைமத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்துள்ளார். பல்வேறு தொழில் நடவடிக்கைகள் மூலம் இம்மாநிலத்துக்கு ரூ.50 ஆயிரம் கோடி முதலீடுகள் வந்து சேரும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரில் தொழில் வாய்ப்புக்கான புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகமான சாதக அம்சங்களைக் கொண்ட தொழில் கொள்கை தற்போது ஜம்மு காஷ்மீரில் மட்டுமே உள்ளது என்று காணொலி வாயிலாக இணையதளத்தைத்...
இந்தியா

விரைவில் வெளியாகும் தேர்தல் அறிவிப்பு: புதுவை மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் அக்டோபரில் நிறைவு- அடுத்த வாய்ப்புக்கு என்.ஆர்.காங் – பாஜக போட்டி

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் பதவிகாலம் அக்டோபரில் நிறைவடைய உள்ளதால் விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ளது. இப்பதவி ஆளுங்கட்சி கூட்டணியிலுள்ள என்.ஆர்.காங்கிரஸுக்கா, பாஜகவுக்காக என்ற கேள்விக்கான விடை விரைவில் தெரியவரும். புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினராக அதிமுகவை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் உள்ளார்.இவர் முதல்வர் ரங்கசாமியின் நெருங்கிய நண்பர். கடந்த மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலின்போது கோகுலகிருஷ்ணனைஎம்பியாக்க ரங்கசாமி விரும்பினார். ஆனால், அப்போது என்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியதால், யாரும் எதிர்பார்க்காத வகையில்என்.ஆர்.காங்கிரஸைச்...
தமிழகம்

தமிழ்நாட்டில் பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதி மாற்றம்

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதியை மாற்றம் செய்து, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான, ரேண்டம் எண் கடந்த 25ம் தேதி வெளியானது. அதைதொடர்ந்து, தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 11-ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்ட நிலையில், தற்போது 14ந் தேதி வெளியாகும் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், தொழிற்கல்வி படிப்பில்...
1 488 489 490 491 492 584
Page 490 of 584

Right Click & View Source is disabled.

error: Content is protected !!