தமிழகம்

தமிழகம்

கொரோனா நோயாளிகளுக்காக 100 மின்விசிறி வழங்கிய கோவை இளம் தம்பதியின் மனித நேயம்…

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளின் வசதிக்காக, தங்களிடம் இருந்த நகைகளை அடகு வைத்து 100 மின்விசிறிகளை வாங்கி கொடுத்துள்ளனர் மனித நேயம் மிக்க இளம்தம்பதியினர். இது வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. 'தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கோவையிலும் தொற்று பாதிப்பு அதிகரிப்பு காரணமாக, பல மருத்துவமனைகள் நிரம்பி உள்ளன. அங்குள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டில், ஏராளமான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், அவர்களுக்கு போதுமான காற்று வசதி கிடைக்கவில்லை. போதுமான அளவிலான பேஃன் இல்லாததால், கடுமையான புளுக்கத்தில் அவதிப்பட்டனர். இதைத்தொடர்ந்து, அம்மருத்துவமனையின் மருத்துவர், ஒருவர் இஎஸ்ஐ மருத்துவமனையின் கொரோனா வார்டுக்கு மின்விசிறி தேவைப்படுவதாக எப்.எம்.ரெடியோவில் கோரிக்கை வைத்திருந்தார். இதை கேட்ட, கோவை தம்பதி, தங்களது நகைகளை அடகு வைத்து 100 மின்விசிறிகள் வாங்கிக்கொடுத்து அசத்தி உள்ளனர்.அவர்களின் மனிதநேயம், அங்குள்ள...
தமிழகம்

ஜவ்வாதுமலை அருகே பழமையான குத்துக்கல் கண்டெடுப்பு

ஜவ்வாதுமலை அருகே உள்ள சாளுர் கிராமத்தில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான குத்துக் கல் உள்ளதாக செங்கத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் பிரேம் ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது, 'தி.மலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் உள்ள புலியூர் அடுத்த சாளுர் கிராமம் மாரியம்மன் கோயில் எதிரே குத்துக் கல் உள்ளது. இது, 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாகும். 10 அடி உயரமும், 5 அடி அகலம் கொண்டது. முற்காலத்தில் உயிரிழந்தவர் களை புதைக்க, பல வடிவ கற்களை அடுக்கி கல்லறை அமைத்தனர். மேலும், குழுத் தலைவர் அல்லது சிற்றரசன் உயிரிழந்தால், அவர்களை புதைத்த குழியின் மீது குத்துக்கல் நடும் வழக்கம் இருந்துள்ளது. இந்த குத்துக்கல்லை யானைக் கட்டி கல் என கிராம மக்களால் அழைக்கப்படுகிறது. அந்த பகுதியில் சிற்றரசன் இருந்ததாகவும், குத்துக்கல்லில் யானை கட்டி வைத்திருந்ததாகவும்...
தமிழகம்

மக்களைக் காப்பாற்றாமல் வரலாற்று பழிக்கு ஆளாகாதீர்கள்: மத்திய, மாநில அரசுகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை

கரோனா தொற்று பாதிப்பில் இருந்து மக்களைக் காப்பாற்றாமல் வரலாற்று பழிக்கு ஆளாகாதீர்கள் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எச்சரித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 'நம்மையும் காப்போம், நாட்டையும் காப்போம்' என்ற தலைப்பில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியுள்ள விவரம்: அனைவருக்கும் அன்பான வணக்கம்! ஒவ்வொருவரும் தங்கள் உடல்நலனைப் பாதுகாத்து, நோய் வராமல் பாதுகாக்க வேண்டிய காலக்கட்டம் இது. அனைவரும் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டு, தங்களையும் தங்களது சுற்றத்தாரையும் காத்துக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை முதலில் வைத்துக் கொள்கிறேன். மத்திய - மாநில அரசுகள் அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றி நடந்து கொள்ளுங்கள். அவசியப் பணிகளுக்காக மட்டும், அதற்கான இடங்களுக்கு மட்டும் செல்லுங்கள். அவசியமற்ற பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். வீட்டில் இருங்கள். வீட்டில் இருந்து வேலைப் பாருங்கள். வீட்டுக்குள்ளும்...
தமிழகம்

கரோனா பரவல் காரணமாக அஞ்சல் நிலையங்கள் அரைநாள் மட்டுமே செயல்படும்

கரோனா பரவல் காரணமாக, அனைத்து அஞ்சல் நிலையங்களும் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு வட்ட அஞ்சல் துறை அலுவலகம் சார்பில், அனைத்து அஞ்சல்துறைப் பிரிவு தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா தொற்று 2-வது அலை தீவிரமடைந்துள்ளதையடுத்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து அஞ்சலகங்களிலும் தவறாமல் பின்பற்ற வேண்டும். இதன்படி, அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் உள்ள வாடிக்கையாளர் சேவை கவுன்ட்டர்கள் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும். இதுதொடர்பான அறிவிப்புப் பலகையை பொதுமக்கள் அறியும் வகையில், அனைத்து அஞ்சலகங்களிலும் வைக்க வேண்டும். விரைவு தபால்கள், பதிவு தபால்கள் மற்றும் பார்சல் சேவைகள் எவ்வித காலதாமதமும் இன்றி குறித்த நேரத்தில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய, தேவையான ஊழியர்களையும் பணியில் ஈடுபடுத்த உரிய நடவடிக்கையை அந்தந்த அஞ்சலக அதிகாரிகள் எடுக்க...
தமிழகம்

கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவந்த இயக்குநர் தாமிரா காலமானார்

கொரோனா பரவல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இயக்குநர் தமிரா சிகிச்சை பலனின்றி காலமானார். இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. நேற்றைய தினத்தில் மட்டும் நாடு முழுவதும் 66 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,73,13,163 ஆக உள்ளது. தமிழகத்தில் கொரொனா பாதிப்பின் எண்ணிக்கை நேற்றைய தினத்தில் 15 ஆயிரத்தைக் கடந்தது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. தற்போது இயக்குநர் தாமிரா கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 'ரெட்டைச் சுழி', 'ஆண் தேவதை' படங்களை இயக்கியவர் இயக்குநர் தாமிரா. 53 வயதாகும் இவருக்குச் சமீபத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள மாயா என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்....
தமிழகம்

மே 1ஆம் தேதி முதல் – அரசு அதிரடி அறிவிப்பு!

மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ள நிலையில் அதற்கு முன்பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யாவிட்டால் தடுப்பூசி செலுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முதலில் மருத்துவ பணியாளர்களுக்கும் அதனைத் தொடர்ந்து முன்களப்பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. அதன் பிறகு நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. வருகிற மே 1 ஆஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது . அப்படி தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்புபவர்கள் வலைதளத்தில் முன்பதிவு செய்வது அவசியம் . அதே நேரம் , 45 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகள்...
தமிழகம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை சுற்றி போலீசார் பாதுகாப்பு…!

அசம்பாவிதங்களை தவிர்க்க ஸ்டெர்லைட் ஆலையை சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸின் 2-வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இந்த நிலையில், இன்று காலை 9:15 மணியளவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், தூத்துக்குடியில் உள்ள தாமிர உருக்காலையான, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வது குறித்து அனைத்து கட்சியினருடனும் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இதனையடுத்து, இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிராமண பாத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்க ஸ்டெர்லைட் ஆலையை சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில்...
தமிழகம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த தனது கருத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை – நடிகர் ரஜினிகாந்த்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு குறித்த தனது கருத்திற்கு எந்த ஆதாரமும் தன்னிடம் இல்லை என நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, 13 பேர் உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நீதி விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற தமிழக அரசு நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்கள் தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிடப்பட்டது. இந்த கமிஷன் சம்பந்தப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. 27 கட்டமாக நடைபெற்ற விசாரணையில் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயம்பட்டவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், வழக்கறிஞர்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் என பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தெரிவித்துள்ள வழக்கறிஞர் அருள் வடிவேல் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர்...
தமிழகம்

தமிழகத்தில் மே.1 முதல் இலவச தடுப்பூசி முகாம்கள்

தமிழகத்தில் மே.1 முதல் இலவச சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மே 1 ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தம் பணி துவங்குகிறது.. இந்நிலையில் இன்று அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க , கொரோனாவால் அதிகம் பாதிப்படைந்த மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் மே 1-ம் தேதி முதல் அனைவருக்கும் இலவச சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும். இதில் அனைத்து மார்க்கெட், தொழிலாளர்கள், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்கள், அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆகியோருக்கும் இலவச சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
தமிழகம்

கொரோனா சிகிச்சை மையங்களாக மாறும் கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள்!!

தமிழகத்தில் கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவனங்களை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆய்வுக்கூட்டத்துக்கு பிறகு அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கொரோனா கவனிப்பு மையங்களின் எண்ணிக்கையை கடந்த ஆண்டைவிட கூடுதலாக உயர்த்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள், பள்ளிகள் போன்றவற்றை மாவட்ட ஆட்சியர்கள் உரிய முறையை பின்பற்றி பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். தொற்று ஏற்பட்டவர் உடன் இருப்பவர்களை 72 மணி நேரத்திற்குள் கண்டறிந்து பரிசோதனை செய்ய வேண்டும் என ராஜீவ் ரஞ்சன் உத்தரவிட்டுள்ளார். மேலும் அனைத்து மருத்துவமனைகளிலும் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்தவும், மருந்துகள், பாதுகாப்பு கவசங்கள், ஆக்சிஜன் போன்றவற்றை தயார் நிலையில் வைக்கவும் உத்தரவிட்டுள்ளார். கொரோனா கவனிப்பு மையங்களை பராமரிக்க முதற்கட்டமாக 61 கோடி ரூபாய்...
1 558 559 560 561 562
Page 560 of 562

Right Click & View Source is disabled.

error: Content is protected !!