கருப்புப் பூஞ்சை நோய் குறித்து ஆராய வல்லுநர்கள் குழு அமைப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
கரோனா பாதிப்பிலுள்ளவர்களுக்கும் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுவது குறித்து ஆய்வு செய்ய பல்துறை அலுவலர்கள் அடங்கிய 10-க்கும் மேற்பட்டவர்கள் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக மருத்துவம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி முகாம்களில் ஆய்வு மேற்கொள்வதற்காக தமிழக மருத்துவம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தூத்துக்குடி வாகைக்குளம் விமானநிலையம் வந்தார். தொடர்ந்து அவர், மேலக்கூட்டுடன்காடு பகுதியில் உள்ள கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியை நேரில் ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து அவர், ஸ்பிக் நகர், மற்றும் சிப்காட்டில் தொழிற்சாலைகளில் தடுப்பூசி முகாம்களை தொடங்கிவைத்தார். முன்னதாக அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் கரோனா சிகிச்சைக்காக செய்யப்படுள்ள மருத்துவ கட்டமைப்பு மற்றும் தடுப்பூசி...
