தமிழகம்

செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை: வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் திட்டவட்டம்

தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார். நீலகிரி மாவட்டம், உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில், தனியார் அமைப்பின் சார்பில் வழங்கப்பட்ட 30 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன்பெற்றுக்கொண்டார். அதன்பின்பு செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறும்போது ''தமிழகம் முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கிறது. தனியார் அமைப்பு வழங்கியுள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகள், மாவட்டத்தில் தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். கரோனா 3-ம் அலையை எதிர்கொள்ளும் வகையில் உதகை அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக 80 படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. கரோனா தொற்றை தடுக்கும் வகையில் தமிழக அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும், மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்'' என்றார். அப்போது, மாவட்டவருவாய் அலுவலர் எஸ்.நிர்மலா, உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை...
செய்திகள்தமிழகம்

இன்று புதிய தளர்வுகள் அறிவிப்பு… தமிழகம் வர இருக்கும் 3 லட்சம் தடுப்பூசிகள்!

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு அமலில் உள்ளது. இந்நிலையில் ஊரடங்கில் மேலும் தளர்வுகளை அறிவிப்பது குறித்து நேற்று முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெற்ற நிலையில் இன்று பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக கரோனா பாதிப்பு அதிகம் உள்ள எட்டு மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மறுபுறம் தமிழகத்தின் பல பகுதிகளில் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. முன்பை விட தற்பொழுது கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டுவதோடு நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர். இந்நிலையில் பூனேவில் இருந்து மேலும் மூன்று லட்சத்து 14 ஆயிரத்து 110 கோவிஷீல்டு தடுப்பூசிகள்...
செய்திகள்தமிழகம்

கொடைக்கானல் பூங்காக்களில் பூத்துக்குலுங்கும் மலர்கள் யூடியூப் மூலம் ரசிக்க தோட்டக்கலைத்துறை ஏற்பாடு

கரோனா காரணமாக கொடைக் கானலில் 2-வது ஆண்டாக கோடைவிழா, மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து பூங்காக்களில் பூத்துக் குலுங்கும் மலர்களை கண்டு ரசிக்க தோட்டக்கலைத்துறை சிறப்பு ஏற்பாடு செய்து இதற்கென யூடியூப் சேனலை தொடங்கியுள்ளது. இதில் இந்த ஆண்டு பூங்காக்களில் பூத்துக் குலுங்கும் பூக்களை வீட்டி லிருந்தபடியே கண்டு ரசிக்கலாம். மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனில் சுற்றுலாப் பயணிகள் வருகை களைகட்டும். சுற்றுலாப் பயணி களை மகிழ்விக்க அரசு கோடைவிழா, மலர் கண்காட்சி ஆகியவற்றை ஆண்டுதோறும் மே இறுதி வாரத்தில் நடத்தும். இந்நிலையில் கரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு கோடை சீசன் தொடங்கு வதற்கு முன்னரே முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கோடைவிழா, மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டன. இதை யடுத்து இந்த...
செய்திகள்தமிழகம்

கல்வி தொலைக்காட்சியில் இன்று முதல் வகுப்புகள் தொடக்கம்!!

தமிழக அரசின் கல்வி டிவியில் புதிய பாடங்கள் அடங்கிய வீடியோ தொகுப்பை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார். இந்நிலையில் தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சியில் இன்று முதல் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க உள்ளன.தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசின் கல்வி தொலைக்காட்சி மூலம் நடப்பாண்டுக்கான வகுப்புகளை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். புதிய கல்வி ஆண்டுக்கான பாடங்களை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருந்து தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்குவதையும் தொடங்கி வைக்கிறார்....
செய்திகள்தமிழகம்

மோர்தானா அணையில் இன்று தண்ணீர் திறப்பு பாசன கால்வாயை சேதப்படுத்தும் நபர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்: வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை

மோர்தானா அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக இன்று தண்ணீர் திறக்கப்படவுள்ளது. பாசன கால்வாயை சேதப்படுத்துபவர்கள், மோட்டார் மூலம் தண்ணீரை திருடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் எச்சரித்துள்ளார். வேலூர் மாவட்டத்தின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றாக மோர்தானா அணை உள்ளது. தமிழக- ஆந்திர எல்லையில் கவுன்டன்யா ஆற்றின் குறுக்கே 11.50 மீட்டர் உயரத்துடன் கட்டப்பட்டுள்ள அணையில் சுமார் 260 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். அணையில் தற்போது 11.40 மீட்டர் உயரத்துக்கு நீர் இருப்பு உள்ளது. எனவே, பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (ஜூன்-19) காலை திறந்து வைக்கவுள்ளார். அணை திறக்கப்படுவதால் வலதுபுற பிரதான கால்வாய் வழியாக 12 ஏரிகளுடன் 25 கிராமங்களில் உள்ள சுமார் 3,937...
செய்திகள்தமிழகம்

புகழ்ந்து பேச, திட்டுவது போல் நடிக்க ரூ.5000- ‘பப்ஜி’ மதன் குறித்து வெளியாகும் பகீர் தகவல்

பப்ஜி மதனை கைது செய்துள்ள காவல்துறையினர், அவரது சொகுசு கார்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்களும் வெளியாகியுள்ளன. 'யூ டியூப்' சேனல் நடத்தி வரும் மதன் என்பவர், தடை செய்யப்பட்ட 'பப்ஜி' விளையாட்டுகளின் வாயிலாக சிறுவர்களை தவறான பாதைக்கு திசை திருப்புவதாகவும், பெண்களிடம் ஆபாசமாக பேசுவதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து, 'பப்ஜி' மதன் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் தலைமறைவாகியிருந்த அவரை இன்று காலை தருமபுரியில் போலீசார் கைது செய்தனர். பப்ஜி மதனை கைது செய்துள்ள காவல்துறையினர், அவரது சொகுசு கார்களையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்களும் வெளியாகியுள்ளன. தம்மை புகழ்ந்து வீடியோ வெளியிடுவோருக்கு ரூ.5,000 மதன் கொடுத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தம்மை புகழ்ந்து பேசியதற்கும் உடந்தையாக இருந்ததற்கும் பெண் ஒருவருக்கு ரூ.5 லட்சம் மதன் கொடுத்ததாகவும் தகவல்...
செய்திகள்தமிழகம்

சிவசங்கர் பாபாவை தொடர்ந்து சுஷில் ஹரி பள்ளியின் முன்னாள் மாணவி சுஷ்மிதா கைது!!

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரில், அந்த பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபாவை போலீசார் ஆஜர்படுத்தினர். இதுகுறித்து விசாரணை நடத்திய நீதிபதி அம்பிகா, அவரை ஜூலை 1-ந் தேதி வரை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து தற்போது அந்த பள்ளியின் முன்னாள் மாணவி சுஷ்மிதா என்பவரிடம் சுமார் 4 மணி நேரம் நடத்திய விசாரணைக்குப் பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரை கைது செய்துள்ளனர். ஏற்கனவே இன்று காலை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியில் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. விஷ்ணு விசாரணை நடத்தினார். அவர் விசாரணை மேற்கொண்டிருந்த போதே, இரண்டு தனிப்படை...
செய்திகள்தமிழகம்

மதிப்பெண்கள் இல்லாமல் சான்றிதழ் கொடுத்தால் வேலை பெறுவதில் சிக்கல் ஏற்படும் – ஓபிஎஸ்

"முக்கியத்துவம் வாய்ந்த 10ம் வகுப்புச் சான்றிதழில் மதிப்பெண்கள் இல்லாமல் இருப்பது, எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்படுமோ என்ற ஐயப்பாடு மாணவர்களின் மனங்களில் நிலவுவதால், 10ம் வகுப்புச் சான்றிதழில் மதிப்பெண்கள் இடம்பெற வழிவகை செய்யவேண்டும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "11ம் வகுப்பு சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு, நீட் தேர்வுக்கு ஆன்லைனில் பயிற்சி என்ற வரிசையில், தற்போது 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில் மதிப்பெண்கள் குறிப்பிடப்பட மாட்டாது என்றும், தேர்ச்சி என்று மட்டுமே குறிப்பிடப்படும் என்றும், அண்மையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருப்பது மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுக ஆட்சியில், கொரோனா தாக்கம் காரணமாக 10ம் வகுப்புத் தேர்வுகள் நடத்தப்படாத சூழ்நிலையில், காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் அந்தந்த மாணவர்கள் பெற்ற...
செய்திகள்தமிழகம்

தமிழகத்திற்கு பல்வேறு தளர்வுகள்! அடுத்த அறிவிப்புகள் என்னென்ன?

தமிழ்நாட்டில் ஜூன் 21 முதல் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் முழு ஊரடங்கிற்கு பிறகு கொரோனா பரவல் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் தொற்று அதிகம் உள்ள கோவை, ஈரோடு, திருப்பூர், தஞ்சை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் குறைவான தளர்வுகள் அளிக்கப்பட்டன. கடந்த அறிவிப்பில் டீக்கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் வரும் அறிவிப்பில் நகைக் கடைகள், துணிக்கடைகள் திறக்க அனுமதிக்கப்படும் என்றும் ஆனால் பெரிய கடைகளுக்கு அனுமதி வழங்கப்படாது என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆட்டோ, டாக்சிகள் இயங்கினாலும், பணியிடங்களுக்கு சென்று வர பேருந்து சேவை இல்லாததால் மக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்துவருகின்றனர். அதனால் நகரப்பேருந்துகள் 27 மாவட்டங்களில் இயக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறத. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழைப்...
செய்திகள்தமிழகம்

யூ டியூப்பர் மதனை தேடும் பணி தீவிரம்: புதிய ஆடியோ வெளியானதால் பரபரப்பு

தலைமறைவாக உள்ள யூ டியூப் மதனை பிடிக்க போலீஸார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர். யூ டியூப் சேனலை நடத்தி வரும் மதன் என்பவர் தனது யூ டியூப் சேனல்களில் தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டின் மூலம் சிறுவர்களை தவறான பாதைக்கு திசை திருப்புவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் தன்னுடன் உரையாடும் பெண்களிடம் ஆபாசமாகவும் பேசியுள்ளார். இது தொடர்பாக புளியந்தோப்பு காவல் மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் ஆரம்ப கட்ட விசாரணையை தொடங்கினர். பின்னர், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. தற்போது அவர் தலைமறைவாக உள்ளார். சென்னையில் வசிக்கும் மதன்சேலத்தை சேர்ந்தவர். அவரைதேடிக் கண்டுபிடிக்க சென்னைபோலீஸார் சேலம் விரைந்துள்ளனர். மேலும், அண்டைமாநிலங்களுக்கும் சென்றுள்ளனர். சென்னையிலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மதனின் தந்தை, மனைவியிடமும்...
1 545 546 547 548 549 563
Page 547 of 563

Right Click & View Source is disabled.

error: Content is protected !!