வேகமாக நிரம்பி வரும் பில்லூர் அணை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கேரளத்தில் தீவிரமடைந்து வரும் தென்மேற்கு பருமழையால் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் அணையின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள தமிழக கேரளா எல்லை பகுதியான பில்லூர் வனப்பகுதியில் அமைந்துள்ளது பில்லூர் அணை. இந்த அணைக்கு கேரளம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழைநீரே பிரதான நீர்ப்பிடிப்பாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது கேரளத்திலும் நீலகிரி மாவட்டத்தில் அப்பர்பவானி போன்ற பகுதிகளில் கடந்த இரு தினங்களாக தென்மேற்கு பருவமழை தீவிமாக பெய்து வரும் நிலையில், தென்மேற்கு பருவ மழையின் காரணமாக புதன்கிழமை இரவு முதலே பில்லூர் அணைக்கான நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது. பின்னர் நள்ளிரவில் படிப்படியாக அதிகரித்து தண்ணீர் வரத்து 10 ஆயிரம் கன அடியாக உயர்ந்து, அணையின்...
