இன்று முதல் வீடு தேடி வரும் மளிகை பொருட்கள்.. ஊரடங்கில் சிறப்பு ஏற்பாடு !!
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. தற்போது தளர்வில்லா ஊரடங்கு ஜுன் 7வரை நீட்டிக்கப்பட்டு அமலில் உள்ளது. எனினும் பொதுமக்கள் நலனை கருத்தில்கொண்டு காய்கறி, பழங்கள் உள்ளிட்டவை நடமாடும் வாகனங்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் மளிகை கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதால், மக்கள் தேவையை கருத்தில்கொண்டு நடமாடும் மளிகை கடைகள் திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சி முன்னெடுத்தது. அதன்படி ஆன்லைன் மூலமாகவும், தொலைபேசி வழியாகவும் வாடிக்கையாளர் கேட்கும் பொருட்களை வீடு தேடி கொண்டுவழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, கோயம்பேடு மற்றும் கொத்தவால்சாவடியில் இருந்து தேவையான மளிகைப்பொருட்களை கொள்முதல் செய்து குடியிருப்பு பகுதிகளுக்கு கொண்டு செல்லும் வாகனங்களுக்கு உரிய அனுமதி அடையாள அட்டையும் வழங்கப்பட்டது. சென்னையில் உள்ள அனைத்து மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் இந்த...
