கனமழையால் பொதுமக்கள் பாதிப்பு; போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள்: தமிழக அரசுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்
கனமழையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளில் கூறியிருப்பதாவது: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த்: தொடர் மழையால் தாழ்வான சாலைகள் குளம்போல காட்சியளிக்கின்றன. சில இடங்களில் மழைநீருடன், கழிவுநீரும் கலந்து செல்வதால் மக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் நோய்த் தொற்று பரவும் அபாயம் இருக்கிறது. எனவே, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை முகாம்களில் தங்கவைத்து, உணவு, மருந்து வழங்க வேண்டும். கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் நேரில் சென்று, உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்க வேண்டும். பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்: 2015-க்குப் பிறகு 200 மில்லிமீட்டருக்கும் அதிகமழை...
