தமிழகம்

செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் +2 தேர்வு முடிவுகள் ஜூலை 19-ம் தேதி காலை 11 மணிக்கு வெளியீடு.: தமிழக அரசு அறிவிப்பு

வரும் 19ம் தேதி 12ம் வகுப்பு மதிப்பெண்கள் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்த அரசாணையில், 2020-2021ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள், வரும் 19ம் தேதி காலை 11.00 மணிக்கு வெளியிடப்படுகிறது. பள்ளி மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம். மாணவர்கள், பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்படும். மேலும், பள்ளி மாணவர்கள் வரும் 22ம் தேதி காலை 11 மணி முதல் http://www.dge.tn.gov.in. www.dge.tn.nic.in  என்ற இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து தங்களுக்கான மதிப்பெண் பட்டியலை தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர்....
செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு.. அரசு புதிய முடிவு…!!!!

தமிழகத்தில் வரும் 20 ஆம் தேதிக்கு பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் பல மாநிலங்களில் பள்ளிகள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகள் நாளை முதல் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் தற்போதைய சூழலில் பள்ளிகள் திறப்பது பாதுகாப்பாக இருக்குமா? பெற்றோர்கள் மனநிலை குறித்து கருத்து கேட்கலாமா? என்பது குறித்து நாளை சுகாதார வல்லுநர்களுடன் அரசு ஆலோசனை நடத்த உள்ளது. இதையடுத்து ஜூலை 22 அல்லது அதற்கு அடுத்த ஒரு சில நாட்களில் உயர் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது....
செய்திகள்தமிழகம்

என்.சங்கரய்யாவின் 100-வது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து

மூத்த இடதுசாரி தலைவர் என்.சங்கரய்யாவின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்தார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா இன்று (ஜூலை 15) தன் 100-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். தொழிலாளர் நலன் சார்ந்த பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தியவர் சங்கரய்யா. இவருடைய 100-வது பிறந்த நாளை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சார்ந்த தலைவர்களும் கடந்த சில தினங்களாகவே வாழ்த்துகளைக் கூறிவருகின்றனர். இந்நிலையில், இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு, குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், முன்னாள் எம்.பி., டி.கே.ரங்கராஜன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் நேரில் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அதேபோன்று, முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக...
செய்திகள்தமிழகம்

கர்மவீரர் காமராஜரின் 119வது பிறந்தநாளை ஒட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை..!!

காமராஜர் பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தியிருக்கிறார். தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்த தினமான இன்று, கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது இன்று வரை உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், அரசு அலுவலகங்களில் இவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் கர்மவீரர் காமராஜரின் 119வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை பல்லவன் இல்லம் அருகே உள்ள காமராஜரின் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜரின் திருவுருவ படத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் பொன்முடி, அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், வெள்ளக்கோயில் சுவாமிநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள்,...
செய்திகள்தமிழகம்

நீட் தேர்வு தொடர்பான ஆய்வறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தார் நீதிபதி ஏ.கே.ராஜன்

நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் ஆய்வறிக்கை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமா்ப்பித்தார் நீதிபதி ஏ.கே.ராஜன். நாடு முழுதும், மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோக்கைக்கு, நீட் நுழைவுத் தோவு நடத்தப்படுகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை மாநில அரசு அத்தோவை ரத்து செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து வருகிறது. அதன் தொடா்ச்சியாக நீட் தோவில் உள்ள பாதகங்களை ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளா், மருத்துவக் கல்வி இயக்குநா் உள்பட 9 போ அடங்கிய உயா்நிலைக் குழு ஒன்றை அரசு அமைத்தது. இக்குழுவானது அதுதொடா்பான ஆலோசனைக் கூட்டங்களை தொடா்ந்து நடத்தி வருகிறது. மேலும், பொதுமக்களிடம் இருந்தும் நீட் தோவு தொடா்பாக கருத்துகளை அக்குழு கேட்டிருந்தது. அதன்படி, சுமாா் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து இருந்தனா். இதனிடையே அந்த குழுவினை அமைத்ததற்கு...
செய்திகள்தமிழகம்

தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும் – மாநில தலைவர் அண்ணாமலை

தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும் என புதிய மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும். வயது முக்கியமல்ல, மூத்த, இளம் தலைவர்கள் என அனைவரையும் அரவணைத்து செல்வேன். மற்ற கட்சிகள் தனிநபர் கட்சிகள், பாஜகவைப் பொறுத்தவரை கூட்டுமுயற்சிதான். வயது, அனுபவம் என பல்வேறு விஷயங்களைக் கொண்டு பாஜக பொறுப்பளித்து வருகிறது என்றும் பாஜக தனி மனிதரை முன்னிருத்தும் கட்சியல்ல, அனைவருடன் இணைந்து பணியாற்றுவோம் எனவும் தெரிவித்துள்ளார். இதனிடையே, தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றதை தொடர்ந்து தமிழக பாஜக புதிய தலைவராக முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலை நியமிக்கப்பட்டார். துணை தலைவராக இருந்த அண்ணாமலை, புதிய தலைவராக நியமித்ததை அடுத்து, சென்னை, தி.நகரில் உள்ள...
செய்திகள்தமிழகம்

மேகதாது அணை விவகாரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்

காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா அணை கட்டும் விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்கிறது கர்நாடகா. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேகதாதுவில் கர்நாடகா அணையை கட்டிவிட்டால் காவிரி நீர் வரத்து மிகவும் குறைந்துவிடும் என்பது தமிழகத்தின் கவலை. இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனடிப்படையில் சென்னை தலைமை செயலகத்தில் தற்போது அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், அதிமுக, இடதுசாரிகள், பாமக உள்ளிட்ட 13 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்....
செய்திகள்தமிழகம்

வருங்காலத்தில் அரசியலுக்கு வருவேனா இல்லையா என்பது குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகள

வருங்காலத்தில் அரசியலுக்கு வருவேனா இல்லையா என்பது குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் பேசி முடிவெடுக்க உள்ளதாக, நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என, 2017, டிச. 31 அன்று ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். ஆனால், கட்சி ஆரம்பிக்காமல் காலம் தாழ்த்தி வந்த ரஜினிகாந்த், 2020, டிச. 31 அன்று தனது அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுவதாக கூறினார். ஆனால், தன் உடல்நிலையை கருத்தில் கொண்டு தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என கடந்த ஜன. 11 அன்று திட்டவட்டமாக அறிவித்தார். இதையடுத்து, சிவா இயக்கும் 'அண்ணாத்த' திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். பின், கடந்த ஏப். மாதத்தில் தமிழகத்தில் கரோனா உச்சத்தில் இருந்ததால், அவரால் வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல முடியவில்லை. இந்நிலையில், கரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதால், சமீபத்தில் அமெரிக்கா சென்று மருத்துவப் பரிசோதனைகளை...
செய்திகள்தமிழகம்

“அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும்”- மாவட்ட அதிமுக கூட்டத்தில் தீர்மானம்

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுகவின் தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் ஆறுமுகப்பாண்டியன் தலைமையில் அதிமுகவின் மாவட்ட, ஒன்றிய, கிளைப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட அதிமுகவின் அனைத்து பிரிவுகளின் நிர்வாகிகள், அண்மையில் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ரூபம்.கே.வேலவன், அமமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். கூட்டத்தில், அதிமுகவை வழிநடத்த சசிகலா பொதுச் செயலாளராக பொறுப்பேற்க வேண்டும் என்றும், சசிகலாவுடன் தொலைபேசியில் பேசியவர்களை அதிமுகவிலிருந்து நீக்கியதற்குக் கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது....
செய்திகள்தமிழகம்

கடலூர்,கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் மழை: கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் சேதம்

கடலூர் மாவட்டத்தில் மழையால் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகள் நனைந்து வீணாவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். கடலூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா, நவரை ஆகிய மூன்று பருவங்களிலும் சுமார் 2.5 லட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்படுகிறது. அறுவடையாகும் நெல்லை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினர் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்து அரசின் ஆதரவு விலையில் பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் இடி மற்றும் சூறைக்காற்றுடன் பெய்யும் மழையால் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் கொட்டி வைக்கப்பட்டுள்ள நெல் மணிகள் சேதமடைகின்றன. எதிர்பாராத வகையில் நேற்று அதிகாலையில் பெய்த மழை யால் கடலூர் அருகில் உள்ள தோட்டப்பட்டு கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள் முதல் நிலையத்தில் குவித்துவைக்கப்பட்டிருந்த சுமார் 3,500 மூட்டை நெல் நனைந்தது. இதேபோன்று கள்ளக் குறிச்சி மாவட்டம்...
1 522 523 524 525 526 544
Page 524 of 544

Right Click & View Source is disabled.

error: Content is protected !!