தமிழகம்

தமிழகம்

தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் மழை நீடிக்கும்!!

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது . இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய நீலகிரி , கோவை , திருப்பூர் , தேனி , திண்டுக்கல் , தென்காசி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் . நாளை கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் , ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் . 09.09.2021, 10.09.2021: தென் மாவட்டங்கள் , கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் , ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் . சென்னையை பொறுத்தவரை...
தமிழகம்

அரசியல் செய்ய கடவுள்தான் கிடைத்தாரா..? அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு வேண்டுகோள்..!!

சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் உள்ள பழனி ஆண்டவர் கோயில் மற்றும் வேதபுரீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது, "வீட்டிலிருந்தே விநாயகரை வழிபட்டால் அவர்களின் கோரிக்கையை விநாயகர் கட்டாயம் ஏற்றுக்கொள்வார். அரசியல் நடத்துவதற்குப் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. கடவுளை வைத்து அரசியல் நடத்த வேண்டாம் என்று அண்ணாமலைக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். அவரும் சாமியின் திருப்பெயரைக் கொண்டிருக்கிறார். இறைவனை முன்னிறுத்தி அரசியல் செய்து, அதன் வாயிலாகத் தேவையில்லாத சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை உருவாக்குவது, ஒன்றாக வாழுகின்ற மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும். எனவே இதுபோன்ற செயல்களில் அரசியலைக் கொண்டுவர வேண்டாம் என்று மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன். யாரையும் வழிபட வேண்டாம் என்று சொல்லவில்லை. எல்லோரும் அவர்களின் வீட்டில் இருந்தே சிறப்பாக வழிபடலாம். விநாயகர் வேண்டிய கோரிக்கைகளை...
தமிழகம்

11 பேருக்கு ‘நல்லாசிரியர்’ விருது!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த, 11 ஆசிரியர்களுக்கு, நல்லாசிரியர் விருதை கலெக்டர் வினீத் வழங்கினார்.பள்ளி கல்வித்துறை சார்பில், சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் பெயரில், மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.இவ்வாண்டு, திருப்பூர் மாவட்டத்தில், 11 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான விருது வழங்கும் விழா திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மதியம் நடந்தது.இதில், மாவட்டத்தை சேர்ந்த, 11 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது, பாராட்டு சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு தொகையை திருப்பூர் கலெக்டர் வினீத் வழங்கி கவுரவித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ், மாவட்ட கல்வி அலுவலர்கள் நாகராஜன், மகேந்திரன், ராஜகோபால் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். நல்லாசிரியர் விருது பெற்றவர்கள்:கோ.சுரேஷ், முதுகலை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, வீரபாண்டி.ந.தெய்வீகன், தலைமை ஆசிரியர், அரசு உயர்நிலைபள்ளி, செலாம்பாளையம்.வே.சின்னராசு, பட்டதாரி ஆசிரியர், பாரதி நுாற்றாண்டு...
தமிழகம்

‘மத்திய அரசு மீது பழிபோடக் கூடாது’;விநாயகர் சதுர்த்திக்கு அர்ஜுன் சம்பத் வலியுறுத்தல்

"தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி விநாயகர் சதுர்த்தி விழாக்களை நடத்த அனுமதிக்க வேண்டும்" என, இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.ஒட்டன்சத்திரத்தில் அவர் கூறியதாவது:விநாயகர் சதுர்த்தி விழாக்களுக்கு தடை விதிப்பது ஒருதலைப்பட்சமானது. மத விழாக்களை வீடுகளில் கொண்டாட வேண்டும் என மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியதால், இங்கு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை விதிப்பதாகக் கூறி, மத்திய அரசு மீது பழிபோடுவதை கண்டிக்கிறோம்.நாடு முழுவதும் எல்லா மத விழாக்களையும் தொற்று பரவாமல் கொண்டாட வேண்டும் என்பதுதான் அந்த சுற்றறிக்கை.மத்திய அரசு சொன்னபடி நீட், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினார்களா. கர்நாடகா, பாண்டிச்சேரி, தெலுங்கானாவில் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி அளித்து உள்ளனர். அது போல் இங்கும் அனுமதிக்க வேண்டும். டாஸ்மாக், பூங்காக்கள் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளது.விநாயகர் ஊர்வலம் நடத்தினால் கொரோனா பரவும் என்பது எந்த வகை நியாயம்.விநாயகர்...
தமிழகம்

ஊரக உள்ளாட்சி தேர்தல் : அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளுடன் இன்று ஆலோசனை நடத்த இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று மதியம் 12 மணிக்கு இந்த கூட்டம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து தென்காசி; விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி; காஞ்சீபுரத்தில் இருந்து செங்கல்பட்டு; வேலூரில் இருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய தனி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்த 9 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. ஆயினும், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச...
தமிழகம்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம்: அரசின் அறிவிப்புக்கு பக்தர்கள் வரவேற்பு

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் அறி விக்கப்பட்டுள்ளதற்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அம்மன் திருத்தலங்களில் குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றுள்ளது சமயபுரம் மாரியம்மன் கோயில். தமிழகத்தில் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு அடுத்ததாக அதிக அளவில் பக்தர்கள் வருகை மற்றும் அதிக உண்டியல் காணிக்கையில் சமயபுரம் கோயில் 2-ம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் ரங்கம் ரங்கநாதர் கோயில், பழநி தண்டாயுதபாணி கோயில் ஆகிய இடங்களில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை 13.09.2012-ல் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து தற்போது வரை நாள் முழுவதும் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, பக்தர்கள் அதிக அளவில் வரும் சமயபுரம் கோயிலிலும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்க வேண்டும் என பல்வேறு...
தமிழகம்

தமிழகத்தில் தடை: இன்று முதல் அமல்!

சென்னை மெரினா கடற்கரை உள்பட அனைத்து கடற்கரையிலும் சுற்றுலா தலங்களிலும் ஞாயிற்றுக்கிழமை தடை என தமிழக அரசு அறிவித்திருந்தது இன்று முதல் அமல் படுத்தப் படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன கடந்த சில நாட்களாக தமிழகத்தில் படிப்படியாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மற்றும் மூன்றாவது அறையை தடுப்பதற்காக தமிழகத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன அதன்படி சென்னை மெரினா கடற்கரை உள்பட அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூடுவதற்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சுற்றுலாத் தலங்களுக்கு ஞாயிறன்று அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது ஏற்கனவே வெள்ளி சனி ஞாயிறு வழிபாடு தளங்களுக்கு அனுமதியில்லை என கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் அனுமதி இல்லை என்றும் அது இன்று முதல் அமல்...
தமிழகம்

அரசு மற்றும் தனியார் நிலங்களில் ரூ.50 கோடியில் நாட்டு மரக்கன்று நடும் திட்டம்: சென்னை மெரினா கடற்கரையை அழகுபடுத்த ரூ.20 கோடி

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் ரூ.50 கோடி செலவில் மண் சார்ந்த நாட்டு மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பேரவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அறிவித்தார். சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதில்அளித்து அமைச்சர் மெய்யநாதன் பேசியதாவது: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், எக்காரணம் கொண்டும்தொழிற்சாலை கழிவுநீரை கடலிலோ, ஆற்றிலோ கலக்கவிடக் கூடாது என்று ஆலை உரிமையாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். ஈரோடு, நாமக்கல் பகுதியில் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் 10 பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். பனைமரங்கள் நிலத்தடி நீரை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, அதன் வளர்ப்புக்கு முக்கியத்துவம் தரப்படும். புதிய பசுமை திட்டங்களை கண்டறியவும், எளிய தொழில்நுட்ப வழிமுறைகளை உருவாக்கவும் அனைத்து மாவட்டங்களிலும் முதல்வரின் பசுமை புத்தாய்வுத் திட்டம் செயல்படுத்தப்படும். நாட்டிலேயே முதல்முறையாக...
தமிழகம்

எஸ்.பி.வேலுமணியின் வங்கி லாக்கரைத் திறந்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வங்கி லாக்கரைத் திறந்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியுள்ளனர். முன்னாள் அமைச்சர் வேலுமணியின் இல்லம் மற்றும் அலுவலகம் என சுமார் 60 இடங்களில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். வேலுமணியின் இல்லம், அவரது சகோதரர்கள் அன்பரசன், செந்தில்குமார், பொறியாளர் சந்திரபிரகாஷ், மாநகராட்சி தலைமை பொறியாளர் லட்சுமணன் ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வேலுமணியின் சுகுணாபுரம் இல்லத்தில் 12 மணி நேரம் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் வங்கி லாக்கர் சாவியை எடுத்துச் சென்றதாக தெரிகிறது. இந்நிலையில் எஸ்.பி. வேலுமணியிடம் கைப்பற்றப்பட்ட லாக்கர் சாவியைக் கொண்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று...
தமிழகம்

கோடநாடு கொலை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு..!!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதியன்று காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சயான் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஊட்டி நீதிமன்றத்தில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் நடைபெற்றது. அப்போது வழக்கு விசாரணை தொடர்பாக அரசு தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. கால அவகாசம் கோரியதை அடுத்து வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.அதன்பின்னர் வழக்கு தொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கோடநாடு வழக்கு தொடர்பான அனைத்து உண்மைகளும் வெளிவர...
1 511 512 513 514 515 544
Page 513 of 544

Right Click & View Source is disabled.

error: Content is protected !!