கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கரோனா பரிசோதனை தீவிரம்
கேரளாவில் இருந்து ரயில்கள் மூலம் வரும் பயணிகளுக்கு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கேரளாவில் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால், தமிழக எல்லையோரப் பகுதிகளில் கரோனாபரிசோதனை மற்றும் கண்காணிப்புபணிகள் மாநில சுகாதாரத் துறைமூலம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல், கேரளாவில் இருந்து வரும் ரயில் பயணிகளுக்கு கட்டாய கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையே, திருவனந்தபுரம், எர்ணாகுளம், கொல்லம், ஆலப்புழா உட்பட 7 விரைவு ரயில்களில் வரும் பயணிகளுக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கட்டாய ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.இதேபோல் கன்னியாகுமரி, தேனி,கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதிக அளவில் கேரளாவில் இருந்து வருகிறார்கள். அவர்களின் ஆதார், செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களையும் சேகரித்து வருகின்றனர். கரோனா நெகடிவ் சான்றிதழ் அல்லது 2 தவணை தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் இருந்தால், அவர்களுக்கு கரோனாபரிசோதனை கிடையாது. இதுதொடர்பாக...