தமிழகம்

தமிழகம்

பழனிசாமி அப்பீல் வழக்கு: ஆக.,22ல் விசாரணை?

கடந்த மாதம் 11ம் தேதி கூட்டிய பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு, வரும் 22ல் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 11ல், பழனிசாமி தரப்பு கூட்டிய பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்த மனுக்களை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். அவரது உத்தரவில், 'பழனிசாமி தரப்பு ஜூலை 11ல் கூட்டிய பொதுக்குழு செல்லாது; ஜூன் 23க்கு முந்தைய நிலை தொடரும்.'ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியின் ஒப்புதல் இன்றி, நிர்வாக குழு அல்லது பொதுக்குழு கூட்டத்தை கூட்ட முடியாது' என கூறியிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து, இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, மேல்முறையீடு செய்தார்.தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட...
தமிழகம்

அதிமுக ஆட்சியில் நடந்த ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்தது ஒரு நபர் விசாரணை ஆணையம்.

அதிமுக ஆட்சியில் நடந்த ஸ்மார்ட் சிட்டி ஊழல் தொடர்பாக முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒரு நபர் ஆணைய தலைவர் டேவிதார் அறிக்கை தாக்கல் செய்து ஆலோசனையில் ஈடுபட்டார். கடந்த 2015ம் ஆண்டு ஒன்றிய அரசு சார்பாக ஸ்மார்ட் சிட்டி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அந்தத் திட்டத்தின் அடிப்படையில் அதிமுக ஆட்சியில், நாடு முழுவதும் 100 நகரங்களை தேர்வு செய்து ஸ்மார்ட் சிட்டிகளாக மாற்ற திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, தஞ்சை, சேலம், வேலூர், தூத்துக்குடி உள்ளிட்ட 11 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சகம் ரூ.5,390 கோடி ஒதுக்கியுள்ளது. இதில் தற்போது அளிக்கப்பட்ட தொகை ரூ.3,969 கோடி ஆகும். ஒன்றிய அமைச்சகத்தில் இருந்து ரூ.1,421 கோடி வர வேண்டி உள்ளது....
தமிழகம்

வடபழனி நிதி நிறுவன கொள்ளை – மேலும் 2 பேர் கைது

வடபழனி நிதி நிறுவன கொள்ளை விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை வடபழனி மன்னார் முதலிதெருவில் சரவணன் என்பவருக்கு சொந்தமான ஓசோன் கேப்பிட்டல் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 7 பேர் கொண்ட மர்ம கும்பல் முகமூடி அணிந்து , ஊழியர்களை கட்டிப்போட்டுவிட்டு ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்தனர். இது தொடர்பாக வடபழனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் விருகம்பாக்கத்தை சேர்ந்த ரியாஸ் இக்பால் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தலைமறைவாகிய குற்றவாளிகளை பிடிக்க 5 தனி படைகள் அமைக்கப்பட்ட நிலையில் கிஷோர் என்பவரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்நிலையில் சென்னை வடபழனி நிதி நிறுவன கொள்ளை வழக்கில் தலைமுறைவாக இருந்த தினேஷ் , சந்தோஷ் கைது செய்யப்பட்டுள்ளனர்....
தமிழகம்

திமுக ஆட்சியில் ஊழலுக்குக் குறைவில்லை-பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் ஊழலுக்குக் குறைவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது: சர்வாதிகாரத்தினாலே புது கோட்டையை கட்டலாம் என்ற தமிழக முதல்வரின் மனக் கோட்டையைத் தகர்க்கக் கூடிய மக்கள் கூட்டம் புதுக்கோட்டையில் நேற்று. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சியில் ஊழலுக்குக் குறைவில்லை. சர்வாதிகாரத்திற்கு எல்லை இல்லை. முன்னேற்றத்திற்கு வழி இல்லை என்ற தமிழகத்தின் நிலையை உணர்ந்து, ஊழலற்ற உன்னத ஆட்சி தரும் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை ஏற்கக் கூடிய மக்களின் எழுச்சி கூட்டம். புதுக்கோட்டை மாவட்ட & மாநில நிர்வாகிகளோடு, மக்களின் பேராதரவுடன் நடைபெற்ற கூட்டம், ஆளும் கட்சியின் மேல் இருக்கும் அதிருப்தியை வெளிச்சப்படுத்தியது என்று அந்தப் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார் அண்ணாமலை. முன்னதாக, கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, தமிழக மக்களுக்கு பாஜக தலைவர்...
தமிழகம்

“அன்புச் சகோதரர்; நடந்தவை நடந்தவையாகவே இருக்கட்டும்; கூட்டுத் தலைமை” – எடப்பாடிக்கு பன்னீர் அழைப்பு

கடந்த ஜூலை 11-ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு நடத்தப்பட்டு, அதில் கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து ஓ.பி.எஸ் உள்ளிட்ட பலர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து ஓ.பி.எஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பில், ``அதிமுக-வில் ஜூன் 23-ம் தேதிக்கு முன் இருந்த நிலையே பின்பற்ற வேண்டும். அதிமுக-வின் பொதுக்குழுக் கூட்டம், செயற்குழுக் கூட்டம் தனித்தனியே நடத்தப்படக் கூடாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் நடத்த வேண்டும். பொதுக்குழுவைக் கூட்ட ஒரு சட்ட ஆணையரைக் கட்சி நியமிக்க வேண்டும். அதேபோல, கட்சி சார்ந்து தனிக் கூட்டம் நடத்தக் கூடாது" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வானது செல்லாது என்ற...
தமிழகம்

தருமபுரியில் 3 நாட்கள் அன்புமணி பிரச்சார நடைபயணம்

ஒகேனக்கல் உபரி நீரை தருமபுரி மாவட்ட பாசனத்துக்கு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் நாளை (19-ம் தேதி) முதல் 3 நாட்களுக்கு தருமபுரி மாவட்டத்தில் பிரச்சார நடைபயணம் மேற்கொள்கிறார். இதுகுறித்து, தருமபுரி மாவட்ட பாமக செயலாளர்கள் வெங்கடேஷ்வரன் எம்எல்ஏ(மேற்கு), செந்தில் (கிழக்கு) ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தருமபுரி மாவட்டத்தின் மேற்கு எல்லையில் காவிரியாறு ஓடுகிறது. வடக்கு எல்லையில் தென்பெண்ணை ஆறு ஓடுகிறது. இருப்பினும், தருமபுரி மாவட்டத்தின் பெரும்பகுதி விவசாய நிலங்கள் வானம் பார்த்த பூமியாகவே உள்ளன. இதற்கு தீர்வு ஏற்படுத்தும் வகையிலும், மாவட்ட விவசாயத்தை மேம்படுத்தவும் ஒகேனக்கல் உபரி நீரை நீரேற்றும் திட்டம் மூலம் தருமபுரி மாவட்ட நீர்நிலைகளில் நிறைத்து பாசனத்துக்கு வழங்க வேண்டும் என பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி நாளை (19-ம் தேதி) பாமக...
தமிழகம்

அரும்பாக்கம் வங்கி கொள்ளை: முக்கிய குற்றவாளி முருகன் கைது – 18 கிலோ நகைகள் மீட்பு

சென்னை அரும்பாக்கம் வங்கி நகைக்கடன் பிரிவில் இரு நாட்களுக்கு முன்பு நடந்த கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான முருகன் கைது செய்யப்பட்டார். இவர் இதே வங்கியின் ஊழியர் ஆவார். ஏற்கனவே இவரது நண்பர்கள் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இவர்களிடம் இருந்து இதுவரை 18 கிலோ நகைகள் மீட்கப்பட்டன. சென்னை, அரும்பாக்கம், ரசாக் கார்டன் பகுதியில், பெடரல் வங்கியின் தங்க நகைக் கடன் பிரிவான, ‛பெட் பாங்க்' என்ற கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று முன்தினம் (ஆக.,13) பட்டப்பகலில் மர்ம நபர்கள் நுழைந்தனர். அவர்கள், பணியில் இருந்த மூன்று ஊழியர்கள் மற்றும் காவலாளிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, கத்திமுனையில் கட்டி போட்டு, லாக்கரில் இருந்த 20 கோடி ரூபாய் மதிப்பிலான 32 கிலோ தங்க நகைகளை, மர்ம நபர்கள்...
தமிழகம்

மாமல்லபுரம் பட்டம் விடும் விழா நிறைவு: 30 ஆயிரம் பேர் கண்டு ரசித்தனர்

மாமல்லபுரத்தில் நடந்த சர்வதேச பட்டம் விடும் விழா நேற்றுடன் நிறைவுபெற்றது. கடந்த 3 நாட்களில் 30 ஆயிரம் பேர் கண்டு ரசித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் கடற்கரையில் சுற்றுலாத் துறை மற்றும் க்ளோபல் மீடியா பாக்ஸ் என்ற நிறுவனம் இணைந்து பட்டம் விடும் விழாவை நடத்தின. இதில் இந்தியா தவிர அமெரிக்கா, தாய்லாந்தில் இருந்து பங்கேற்ற கலைஞர்கள் பல்வேறு வண்ண வடிவங்களிலான பட்டங்களை பறக்கவிட்டனர். கடந்த13-ம் தேதி தொடங்கிய இந்த விழா நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் 80-க்கும் மேற்பட்ட பட்டம் விடும் கலைஞர்கள் பங்கேற்று பட்டங்களை பறக்கவிட்டனர். நிகழ்ச்சியின் நிறைவு நாளான நேற்று ஏராளமான வண்ணங்களில் பட்டங்கள் வானில் பறக்கவிடப்பட்டன. நாட்டின் 75-ம் ஆண்டு சுதந்திர விழா மற்றும் விடுமுறை நாளான நேற்று பட்டங்களையும் பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளையும் கண்டு ரசிப்பதற்காக சென்னை, மற்றும் அதன் புறநகர்...
தமிழகம்

தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற 75-வது சுதந்திர தின விழா

பாரத திருநாடாம் நம் இந்தியாவின் 75வது சுதந்திர தினநலவிழா தேசியவாத காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு மாநில அலுவலகம்-196 J.N. சாலையில் தமிழ்நாடு தேசியவாத காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் திருமிகு.p.k.நரேஸ்குமார் அவர்கள் தலைமையேற்று தேசியகொடியை ஏற்றிவைத்து விழா உரையாற்றினார்கள். 75வது சுதந்திர விழா வில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு மாநிஸ துணைத்தலைவர்கள் திரு.முல்லை எத்திராஜ்,திரு.கோல்டன் அபுபக்கர்- மாநிலப் பொருளாளர்திரு.K.T.K. அரவிந்தன்- மாநிலச் செயலாளர் திருமதி. அனிதா'-வடக்கு மண்டல தலைவர் திரு.வில்சன்-கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் திரு.Dr.K.M.சந்திர மோகன்-திரு.படையப்பா'அலிபாய்-மாநில மகளிரணி தலைவி.Lr..ஜெயராணி. மாநிலத் தலைவி.திருமதி.லாவண்யா,மாநிலச் செயலாளர் திருமதி.A.இராணி- திருமதி.கஸ்தூரி மற்றும் திரளான மாநில-மாவட்ட நிர்வாகிகளும்,பொதுமக்களும்,மாணவர்களும் கலந்துகொண்டு தேசியக்கொடிக்கு வணக்கம் செய்து மரியாதை செய்தனர். தேசியவாத காங்கிரஸ் கட்சி மாநிலத்தலைவர் திரு.P.K.நரேஸ்குமார் அவர்கள் இனிப்புகள் வழங்கினார்கள். தேசியகீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது....
தமிழகம்

இலங்கை துறைமுகத்தில் சீன உளவுக்கப்பலை நிறுத்த அனுமதி: டாக்டர் ராமதாஸ், வைகோ கண்டனம்

இந்தியாவின் அழுத்தத்தைத் தொடர்ந்து சீன உளவுக்கப்பலுக்கு அனுமதி மறுத்த இலங்கை அரசு, இப்போது அதன் நிலையை மாற்றிக்கொண்டு அந்தக் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர அனுமதித்திருக்கிறது. இலங்கை அரசின் செயல் மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம். இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்துகொண்டு அதற்கேற்ற வகையில் வெளியுறவு கொள்கையை வகுக்க வேண்டும். இந்தியாவின் பாதுகாப்பு கருதி, இலங்கைக்கு இலவசமாக வழங்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப்பெறுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:- தற்போது இலங்கை வெளியுறவு அமைச்சகம், யுவான் வாங் 5 உளவுக்கப்பலை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வருகிற 16-ந் தேதி (நாளை) முதல் 22-ந் தேதி வரை நங்கூரமிட்டு நிறுத்திக்கொள்ள அனுமதி வழங்கி இருக்கிறது. இது கடும் கண்டனத்துக்குரியது. இந்திய அரசு, இலங்கை அரசின் இத்தகைய செயல்களை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. உடனடியாக இந்தியா இவ்விஷயத்தில் தீவிர கவனம்...
1 463 464 465 466 467 545
Page 465 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!