தமிழகம்

தமிழகம்

சிவகாசி அருகே, பாலத்தில் இருந்து தவறி விழுந்து புரோட்டா மாஸ்டர் பலி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள எம்.புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (40). இவர் சிவகாசியில் உள்ள ஒரு உணவகத்தில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். மதுப்பழக்கம் உள்ள பாண்டியன் நேற்று, மது போதையில் சிவகாசி - சுக்கிரவார்பட்டி சாலையில் உள்ள பாலத்தில் படுத்திருந்தவர், திடீரென்று பாலத்திலிருந்து தவறி ஓடைக்குள் விழுந்து விட்டார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த திருத்தங்கல் காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று பாண்டியனின் உடலை மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செய்தியாளர் : வி காளமேகம்...
தமிழகம்

ஏராளமான பெண்கள் கைகளில் காப்புகட்டி” சஷ்டி விரதத்திற்காக கோயில் மண்டபத்தில் தங்கியுள்ளனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள விசாக கொரடு மண்டபத்தில் யாகசாலை பூஜையுடன் , காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது 25 ஆம் தேதி முதல் துவங்கி வரும் 31ஆம் தேதி வரை ஏழு நாட்கள் கந்த சஷ்டி விழா நடைபெறும். விழாவில் இன்று காலை 8 மணிக்கு சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில் வள்ளி, தேவ சேன சமேத சண்முகருக்கு முருகனின் பிரதிநிதியாக நம்பி பட்டருக்கு காப்பு கட்டி பின்னர் பக்தர்களுக்கு கம்பத்தடி மண்டபத்தில் காப்புகட்டுதல் நிகழ்சி நடைபெறும். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஐப்பசி மாதம் நடைபெறும் கந்த சஷ்டி விழா மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்வாகும். ' விழாவின்...
தமிழகம்

தலதீபாவளி கொண்டாடிய பெண் மீது கணவன் கண்முன்னே மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்ற பெண்ணின் சித்தப்பா; போலீசார் விசாரணை

மதுரை பழங்காநத்தம் மருதுபாண்டியர் நகர் பகுதியை சேர்ந்த பாலாஜி - பவித்ரா இருவரும் கடந்த 15 நாட்களுக்கு முன் பசும்பொன் நகரில் உள்ள ஒரு கோவிலில் காதல்...
தமிழகம்

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு பொதுமக்கள் வேண்டுகோள்

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 13வதுவார்டு மில்லர் ரோடு ஆடுபாலம் மகளிர்காவல் நிலையம் எதிர்புறம் உள்ள ரோட்டில் பல மாதங்களாக பாதாள சாக்கடை பழுதடைந்துள்ளது. அந்த வழியாக பொதுமக்கள் அதனை சுற்றியுள்ள வீடுகள் முகம் சுளிச்சபடியே நடக்கிறார்கள்அந்த சாக்கடை அருகில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர் பொன்னையா அவர்களின் வீடு அறுகாமையில் உள்ளது பொதுமக்கள் அதை சுற்றி உள்ள வீட்டுக்காரர்கள் பல முறை நகராட்சியில் நடவடிக்கை எடுக்கச் சொல்லியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மலக்கழிவு வருவதை கண்டு நடப்பதற்கு வழியே இல்லையா? என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்? செய்தியாளர் : A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்...
தமிழகம்

ராஜக்காபட்டியில் வெடிக்கு பதிலாக செடிகள் வைத்து கொண்டாடிய 58 கிராம இளைஞர் சங்கத்தினர்

தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பட்டாசு வெடித்து கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில், இதனை மாற்றும் முயற்சியில் 58 கிராம இளைஞர் சங்கத்தின் சார்பில் மதுரை மாவட்டம் எழுமலை அருகே ராஜக்காபட்டியில் வெடிக்கு பதிலாக செடிகள் ,மரக்கன்றுகள் வைத்து தீபாவளியை வித்தியாசமான முறையில் கொண்டாடினர். இதில் அரசமரம்,புங்கமரம், அத்தி, வேம்பு ,நாவல், கடம்பம் போன்ற ஐம்பதுக்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு வைத்து வெடிக்கு பதிலாக செடிகள் வைத்து பசுமை நகரத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் ராஜக்காபட்டி ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா பால்ராஜ் , 58 கிராம இளைஞர் சங்க தலைவர் சௌந்தரபாண்டியன் உட்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். செய்தியாளர்: உசிலை சிந்தனியா...
தமிழகம்

கருணை இல்லத்தில் காவல் ஆய்வாளர்! தீபாவளி அன்று கருணை உள்ளம்

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகில் முதியோர் கருணை இல்லம் உள்ளது. இந்த இல்லத்தில் ஏராளமான முதியோர்கள் உள்ளனர். தீபாவளி அன்று கருணை இல்லத்தில் இருக்கும் முதியோர்களை அம்மைய...
தமிழகம்

பார்வையற்றோருக்கு உதவுவது கடவுளுக்கு செய்கிற சேவை நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேச்சு

பார்வையற்றோர் மற்றும் ஆதரவற்றோருக்கு சேவை செய்வது கடவுளுக்கு செய்கிற சேவை என மதுரையில் நடைபெற்ற விழாவில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசினார் இது பற்றிய விவரம் மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் சார்பில் தீபாவளி திருநாளை முன்னிட்டு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 100 பேர் குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஹோட்டல் தமிழ்நாடு அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர் அழகுராம் ஜோதி தலைமை தாங்கினார். மதுரை மெட்ரோ ஹெரிடேஜ் ரோட்டரி சங்க தலைவர் சி. ஆர். வெங்கடேஷ் மதுரை கிழக்கு ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் பிரபு கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தார். மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார். நிகழ்ச்சியில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் பங்கேற்று பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் குடும்பத்திற்கு அரிசி மற்றும் இனிப்பு மற்றும் பிற பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினார்....
தமிழகம்

“இருளுடன் போராட வேண்டாம்; ஒளி வந்தால் இருள் தானாக நீங்கிவிடும்” – சத்குருவின் தீபாவளி வாழ்த்து

“இருள் என்னும் அறியாமையுடன் போராட வேண்டாம்; தெளிவு என்னும் ஒளியை ஏற்றினால் அறியாமை இருள் தானாக மறைந்துவிடும்” என தீபாவளி வாழ்த்து செய்தியில் சத்குரு தெரிவித்துள்ளார். பாரத...
தமிழகம்

மதுரை வாடிப்பட்டி அதிமுக அலுவலகத்தில் வெடிகுண்டு வீச்சு. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் குற்றசாட்டு.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அதிமுக அலுவலகத்தில் நேற்றிரவு, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி சென்றதாக அதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். காவல் துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்து விசாரணை செய்கின்றனர். இந்நிலையில் முன்னாள் வருவாய் துறைஅமைச்சரும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர்பி உதயகுமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு கட்சி நிரவாகிகளுடன் ஆலோசணை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார்:- மதுரை வாடிப்பட்டியில் அதிமுக அலுவலகத்தில் வெடிகுண்டு வீசிய சம்பவம், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்து விட்டதை காட்டுகிறது. மதுரை மாநகராட்சி பகுதியில் முறையாக மழைநீர் வடிகால் அமைக்காமல் இருப்பது குறித்து வணிகவரிதுறை அமைச்சர் மூர்த்தி மதுரை மேயர் இந்துராணியிடமே குற்றம்சாட்டியுள்ள சம்வம் நகைப்புக்குறியது. இது மாவட்ட அமைச்சரின் இயலாமையை வெளிபடுத்துகிறது ....
தமிழகம்

மதுரை விமான நிலையத்தில் பண்டிகை தினத்தை முன்னிடு கூடுதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு.

மதுரை விமான நிலையத்தில் பண்டிகை தினமான "தீபாவளி திரு நாளையொட்டி கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பண்டிகை தினத்தையொட்டி கூடுதல் பயணிகள் வருபை மற்றும் மற்றும் புறப்பாடு அதிகமாக இருப்பதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் விமான நிலைய உள்வளாகம் போடு பாதை மற்றும் சுற்றுப்பாதை | அதிவிரைவு அதிரடிப்படை, ஆகியவை மத்திய தொழில் பாதுகாப்பு பிரிவினர் 3 பிரிவுகளாகவும். வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் போலீஸார் விமான நிலைய வெளி வளாகம், டோல்கேட். வாகனம் நிறுத்துமிடம் ஆகிய இடங்களில் மதுரை மாநகர காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையில் கார்சிலிண்டர் வெடித்த நிகழ்வை தொடர்ந்து போலீஸார், மத்திய தொழில் பாதுகாப்ப படையினர் தீவிர வாகன பரிசோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்...
1 465 466 467 468 469 556
Page 467 of 556

Right Click & View Source is disabled.

error: Content is protected !!