தமிழகம்

தமிழகம்

சிறைக்கைதிகளால் தாயாரித்து விற்பனைக்கு வந்துள்ள தீபாவளி பட்சணங்களுக்கு அமோக வரவேற்பு

தீபாவளிக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் மதுரையில் இனிப்பு கார பலகாரம் விற்பனை வெகு ஜோராக நடைபெற்று வரும் நிலையில், மதுரை மத்திய சிறையிலும் தீபாவளி பட்சணங்கள் விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. மதுரை மத்திய சிறையில் உள்ள சிறை கைதிகளா மதுரை மத்திய சிறையில் சமையலறையில் தயாரிக்கப்பட்டு பேக் செய்து மதுரை மத்திய சிறை வெளியில் உள்ள சிறை அங்காடியில் ஜோராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஏராளமான பொதுமக்கள் அதனை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். தொடர்ந்து சிறிய ஸ்வீட் பாக்ஸ் 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்...
தமிழகம்

மதுரை முதியோர் இல்லத்தில் எல்.ஈ.டி லைட் வழங்கிய வழிகாட்டி மணிகண்டன்.

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் அதன் நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் சிம்மக்கல் முதியோர் இல்லத்தில் எல்.ஈ.டி விளக்குகள் வழங்கினார். அங்கு இரவு நேரத்தில் சாப்பிடும் அறை குறைவான வெளிச்சத்தில் இருந்த நிலையில் முதியோர்கள் சிரமப்பட்டனர். இதனை அறிந்த வழிகாட்டி மணிகண்டன் தமது தனிப்பட்ட சேமிப்பு மூலம் எல்.ஈ.டி விளக்குகளை வாங்கி இல்லத்தின் மேலாளர் கிரேசியஸ் முன்னிலையில் முதியோர்கள் கையில் வழங்கினார். அவர்கள் அதனை மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டதோடு உடனடியாக உணவு அறையில் ஒளியூட்டி வழிகாட்டி மணிகண்டனுக்கு நன்றி தெரிவித்தனர். செய்தியாளர் :  வி காளமேகம் மதுரை மாவட்டம்...
தமிழகம்

காவலர் வீரவணக்க நாள் மதுரை ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையினர் வீரவணக்கம்

1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில், பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி ‘காவலர் வீரவணக்க நாள்’ அனுசரிக்கப்படுகிறது. மதுரை மாவட்டம் மதுரை மாநகர ஆயுதப்படை வளாகத்தில்,(இன்று) 21-10-2022 ம் தேதியன்று, காவலர் வீர வணக்க நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் மதுரை மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார்,  தென் மண்டல காவல்துறைத் தலைவர் . அஸ்ரா கார்க் மதுரை சரக காவல் துறை துணை தலைவர் பொன்னி .  ,மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .சிவபிரசாத் மற்றும் காவல் அதிகாரிகள்...
தமிழகம்

இராஜபாளையத்தில் வெறிநாய்க்கடித்து 15 பேர் பாதிப்பு இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதி. தெருவில் சுற்றி திரியும் நாய்களை நகராட்சி பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆண்டத்தம்மன் கோவில் தெருவில் பெண்களின் காலை இயற்கை உபாதை . வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்த பொழுதும் வெறிநாய் ஒன்று 15 வரை கடித்துள்ளது இதில் 13 பேர் தடுப்பூசி செலுத்தி விட்டு வீட்டுக்கு சென்ற நிலையில், அண்டத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த பால் மனைவி மாரியம்மாள் 50 .பாலசுப்ரமணியம் அவரது மனைவி வெள்ளத்தாய் வயது 60 ஆகிய இரண்டு பேரும் காயம் ஏற்பட்டு தையல் போட்டு இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இராஜபாளையம் நகர் பகுதியில் கூட்டம் கூட்டமாக தெரு நாய்கள் சுற்றித் திரிவதால் உடனடியாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தெரு நாய்களை பிடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செய்தியாளர் : வி காளமேகம்...
தமிழகம்

பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு, இலவச மிதி வண்டிகள் வழங்கும் விழா

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட 5 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.30.67 இலட்சம் மதிப்பீட்டில்இ மொத்தம் 603 மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி நெற்குப்பை பேரூராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பள்ளி கலையரங்கத்தினை திறந்து வைத்தார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட நெற்குப்பை, பூலாங்குறிச்சி, வி.புதூர் புழுதிப்பட்டி கட்டுக்குடிப்பட்டி ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி தெரிவிக்கையில்: முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர், வழியில் தமிழகத்தில் சிறப்பான ஆட்சியினை நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் , அனைத்துத்துறைகளிலும் முன்னேற்றம் காணும் வகையில் சிறப்பான நிர்வாகத்தை தமிழகத்தில் ஏற்படுத்தி உள்ளார்கள். அதன்படி, சிவகங்கை...
தமிழகம்

சிவகாசி அரசுப்பள்ளியில், சர்வதேச உணவு தின விழா சிறப்பு கருத்தரங்கம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ஏவிடி பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம் சார்பில் சர்வதேச உணவு தின விழா சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. நுகர்வோர் பாதுகாப்பு சேவை மையம் மாநில தலைவர் சுப்பிரமணியம் தலைமையில், பொருளாளர் பாலமுருகன், மாவட்ட மகளிரணி தலைவி ஈஸ்வரி, பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்சிராணி வரவேற்றனர். சர்வதேச உணவு தின விழா சிறப்பு கருத்தரங்கத்தை சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா துவக்கி வைத்து பேசினர். மேயர் சங்கீதா இன்பம் பேசும்போது, இயற்கை உணவுகளை தினமும் சாப்பிட வேண்டும். தினமும் அரிசி சாதம் சாப்பிடுவதை விட்டுவிட்டு சிறுதானிய வகைகள், நவ தானிய வகைகள், முளை கட்டிய பயறு வகைகளையும் சாப்பிட வேண்டும். சாலையோரங்களில் விற்பனை செய்யப்படும் சுகாதாரமற்ற பண்டங்களை சாப்பிடக்கூடாது. மேலும் கடைகளில் விற்பனை செய்யப்படும் வண்ணம்...
தமிழகம்

இராஜபாளையம் அருகே ஒன்னரை வயது குழந்தை தண்ணீர் தொட்டில் விழுந்து உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆவாரம்பட்டி கம்பர் தெருவை சேர்ந்த மணிகண்டன் மாரீஸ்வரி தம்பதியினருக்கு ஐந்து வயதில் பரமேஸ்வரன் என்ற ஆண் குழந்தையும் ஒன்றரை வயதில் முத்துலட்சுமி என்ற பெண் குழந்தையும் உள்ளது இன்று உயிரிழந்த குழந்தை முத்துலட்சுமி தாயார் மாரீஸ்வரி துணி துவைத்து துணியை வீட்டின் மொட்டை மாடியில் காய போட சென்ற பொழுது வீட்டில் கீழே விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது பெண் குழந்தை முத்துலட்சுமி தவழ்ந்து சென்று வீட்டில் வைத்திருந்த பிளாஸ்டிக் தண்ணீர் நிரப்பும் ட்ரம்மில் சிறிய ஸ்டூலில் ஏறி எட்டிப் பார்த்தபோது தொட்டில் தவறி விழுந்து உயிரிழப்பு இது குறித்து இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . உயிரிழந்த குழந்தை உடலை இராஜபாளையம் அரசு மருத்துவமனை கொண்டு சென்று பிரேதா பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது...
தமிழகம்

திருமங்கலத்தில் ஆதரவற்ற முதியோர்களுக்கு தீபாவளி பண்டிகையை ஒட்டி புதிய ஆடைகள் மற்றும் இனிப்புகள், வழங்கி கௌரவிப்பு – சமூக சேவகர்களுக்கு சால்வை அணிவித்தும் கேடயம் வழங்கியும் கௌரவிப்பு.

முன்னாள் எம்பி சித்தன் கலந்து கொண்டு முதியோர்களுக்கு புத்தாடைகள் வழங்கினார். மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள அன்னை வசந்தா டிரஸ்ட் என்ற தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், இப்பகுதியில் வசிக்கும் ஆதரவற்ற முதியோர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு, தீபாவளி பண்டிகையை ஒட்டி புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவ்விழாவில் முன்னாள் எம்பி சீத்தன் கலந்து கொண்டு ஆதரவற்ற முதியோர்களுக்குபுத்தாடைகள் வழங்கினார்.மேலும் திருமங்கலம் பகுதியில் பல்வேறு சேவைப் பணிகளை செய்த சமூக சேவகர்களுக்கு சால்வை அணிவித்து கேடயமும் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.   மேலும், இத் தனியார் தொண்டு நிறுவனத்தின் புதிய அலுவலகத்தையும் முன்னாள் எம்.பி.சித்தன் திறந்துவைத்தார். செய்தியாளர் :  வி காளமேகம் மதுரை மாவட்டம்...
தமிழகம்

மதுரையில் எதிரெதிரே வந்த இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் போக்குவரத்து ஊழியர் படுகாயம்

மதுரை பைபாஸ் சாலையில் பழகானந்தத்தில் இருந்து எல்லிஸ் நகர் பகுதியை இணைக்கும் மேம்பாலத்தில் இருசக்கர வந்து கொண்டிருந்த போக்குவரத்து ஊழியர் ஆனந்தன் என்பவர் மீது எதிர்புறம் இருசக்கர அதிவேகமாக வந்த அழகப்பன் நகர் பகுதியை சேர்ந்த வாலிபர் கிஷோர் மோதி விபத்து ஏற்ப்பட்டது. இதில் இருவருக்கும் காலில் பலத்த காயம் ஏற்பட்டத்தை தொடர்ந்து சக வாகன ஓட்டிகள் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மிகக் குறுகலான மேம்பாலமாக திகழும் பைபாஸ் மேம்பாலர் கடந்த மூன்று தினங்களில் சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து ஒருவர் பலியாகிய சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து துறை நடவடிக்கை மேற்கொண்டு விபத்தில்லா சாலையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். செய்தியாளர் : வி...
தமிழகம்

நீதிமன்றத்தில் ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட். திருவில்லிபுத்தூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் காவல் நிலையத்தில், கடந்த 2016 ஆம் ஆண்டு முகமது பரக்கத்துல்லா ஆய்வாளாராக பணியில் இருந்தார். இவர் பணியில் இருந்த போது, அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது 6 மாத குழந்தையை கிணற்றில் போட்டு கொலை செய்ததாக, முகமது பரக்கத்துல்லா வழக்கு பதிவு செய்தார். இது குறித்த வழக்கு திருவில்லிபுத்தூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கின் விசாரணை அதிகாரியான ஆய்வாளர் முகமது பரக்கத்துல்லா, பணி மாறுதலாகி தற்போது சென்னையில் பணிபுரிந்து வருகிறார். வழக்கு விசாரணையின் போது பலமுறை சம்மன் அனுப்பியும் ஆய்வாளர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. நேற்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையில் சாட்சி சொல்வதற்காக, நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் ஆய்வாளர் முகமது பரக்கத்துல்லா ஆஜராகவில்லை. வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி...
1 456 457 458 459 460 545
Page 458 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!