தமிழகம்

தமிழகம்

மதுரையில் பூ விற்கும் பெண்ணிடம் பணம் வழிப்பறி செய்த திருடர்களை சிங்கம் பட காட்சி போல் சீறிப்பாய்ந்து பிடித்த காவல் ஆய்வாளர் காசிராஜனுக்கு குவியும் பாராட்டுக்கள்

மதுரை ரயில்நிலையம் எதிரேயுள்ள டவுண்ஹால் ரோடு பகுதியில் சாலையோரமாக பெண் ஒருவர் பூ கட்டி விற்பனை செய்துகொண்டிருந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் 1.15 மணியளவில் மதுரை வில்லாபுரம் ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்த அப்துல்ஷேக் மற்றும் அருண் ஆகிய இருவரும் பூ விற்றுக்கொண்டிருந்த பெண்ணிடம் இருந்த பணப்பையை பிடுங்கி கொண்டு சிட்டாக தப்பிச்சென்றனர். இதனை பார்த்து அந்த பெண் கூச்சலிட அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டுகொண்டிருந்த திடீர்நகர் காவல்நிலைய ஆய்வாளர் காசிராஜன் மற்றும் தலைமை காவலர் முத்துப்பாண்டி ஆகியோர் சிங்கம் பட சூர்யாபோல இருவரையும் விரட்டி சென்று பிடித்தனர். இதனையடுத்து அவர்களிடமிருந்த பணப்பையை மீட்டு பூ விற்கும் பெண்ணிடம் ஒப்படைத்தனர். இதனை பார்த்த பொதுமக்கள் காவல் ஆய்வாளர் காசிராஜன் மற்றும் தலைமை காவலர் முத்துப்பாண்டி ஆகிய இருவரையும் பாராட்டினர். இந்நிலையில் பணத்தை பறித்தசென்ற இருவரையும் திடீர்நகர் காவல்நிலையத்திற்கு...
தமிழகம்

மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஒப்பந்ததாரர் வழங்கிய அதிநவீன குப்பை எடுக்கும் எந்திரம் – உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு செயல்படும் ஆச்சர்யம்

மதுரை மாநகராட்சி நூறு வார்டுகளை கொண்டு செயல்பட்டு வருகிறது இதில் தூய்மை பணியாளர்கள் நிரந்தர பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த தாரர்கள் நியமிக்கப்பட்ட பணியாளர்கள் என தனித்தனியாக தூய்மை...
தமிழகம்

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இரண்டு பேர் பலி

வெவ்வேறு சம்பவங்களில் மதுரையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி வெவ்வேறு சம்பவங்களின் இரண்டு பேர் பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . கருப்பாயூரணி வீரபாண்டி நகரை சேர்ந்தவர் வீரமுத்து மகன் முத்துப்பாண்டி .இவரும் முத்துக்குமார் என்பவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தார். முத்துக்குமார் பைக்கை ஓட்ட முத்துப்பாண்டி பின்புறம் அமர்ந்து சென்றார். அவர்கள் சென்ற பைக் மேலூர் விரகனூர் நான்கு வழி சாலையில் சென்றபோது அடையாளம் தெரியாத லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாமடைந்த முத்துப்பாண்டி சம்பவ இடத்திலேயே பலியானார்.படுகா மடைந்த முத்துக்குமார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் மீது மோதிய லாரியை தேடி வருகின்றனர். மற்றொரு விபத்து அண்ணா நகர் சக்கா தோப்புவை சேர்ந்தவர் பால் பாண்டி 50....
தமிழகம்

சிவகாசி அருகே, பாலத்தில் இருந்து தவறி விழுந்து புரோட்டா மாஸ்டர் பலி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள எம்.புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (40). இவர் சிவகாசியில் உள்ள ஒரு உணவகத்தில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். மதுப்பழக்கம் உள்ள பாண்டியன் நேற்று, மது போதையில் சிவகாசி - சுக்கிரவார்பட்டி சாலையில் உள்ள பாலத்தில் படுத்திருந்தவர், திடீரென்று பாலத்திலிருந்து தவறி ஓடைக்குள் விழுந்து விட்டார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த திருத்தங்கல் காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று பாண்டியனின் உடலை மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செய்தியாளர் : வி காளமேகம்...
தமிழகம்

ஏராளமான பெண்கள் கைகளில் காப்புகட்டி” சஷ்டி விரதத்திற்காக கோயில் மண்டபத்தில் தங்கியுள்ளனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள விசாக கொரடு மண்டபத்தில் யாகசாலை பூஜையுடன் , காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது 25 ஆம் தேதி முதல் துவங்கி வரும் 31ஆம் தேதி வரை ஏழு நாட்கள் கந்த சஷ்டி விழா நடைபெறும். விழாவில் இன்று காலை 8 மணிக்கு சுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில் வள்ளி, தேவ சேன சமேத சண்முகருக்கு முருகனின் பிரதிநிதியாக நம்பி பட்டருக்கு காப்பு கட்டி பின்னர் பக்தர்களுக்கு கம்பத்தடி மண்டபத்தில் காப்புகட்டுதல் நிகழ்சி நடைபெறும். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஐப்பசி மாதம் நடைபெறும் கந்த சஷ்டி விழா மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்வாகும். ' விழாவின்...
தமிழகம்

தலதீபாவளி கொண்டாடிய பெண் மீது கணவன் கண்முன்னே மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்ற பெண்ணின் சித்தப்பா; போலீசார் விசாரணை

மதுரை பழங்காநத்தம் மருதுபாண்டியர் நகர் பகுதியை சேர்ந்த பாலாஜி - பவித்ரா இருவரும் கடந்த 15 நாட்களுக்கு முன் பசும்பொன் நகரில் உள்ள ஒரு கோவிலில் காதல்...
தமிழகம்

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு பொதுமக்கள் வேண்டுகோள்

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 13வதுவார்டு மில்லர் ரோடு ஆடுபாலம் மகளிர்காவல் நிலையம் எதிர்புறம் உள்ள ரோட்டில் பல மாதங்களாக பாதாள சாக்கடை பழுதடைந்துள்ளது. அந்த வழியாக பொதுமக்கள் அதனை சுற்றியுள்ள வீடுகள் முகம் சுளிச்சபடியே நடக்கிறார்கள்அந்த சாக்கடை அருகில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர் பொன்னையா அவர்களின் வீடு அறுகாமையில் உள்ளது பொதுமக்கள் அதை சுற்றி உள்ள வீட்டுக்காரர்கள் பல முறை நகராட்சியில் நடவடிக்கை எடுக்கச் சொல்லியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மலக்கழிவு வருவதை கண்டு நடப்பதற்கு வழியே இல்லையா? என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்? செய்தியாளர் : A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்...
தமிழகம்

ராஜக்காபட்டியில் வெடிக்கு பதிலாக செடிகள் வைத்து கொண்டாடிய 58 கிராம இளைஞர் சங்கத்தினர்

தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பட்டாசு வெடித்து கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில், இதனை மாற்றும் முயற்சியில் 58 கிராம இளைஞர் சங்கத்தின் சார்பில் மதுரை மாவட்டம் எழுமலை அருகே ராஜக்காபட்டியில் வெடிக்கு பதிலாக செடிகள் ,மரக்கன்றுகள் வைத்து தீபாவளியை வித்தியாசமான முறையில் கொண்டாடினர். இதில் அரசமரம்,புங்கமரம், அத்தி, வேம்பு ,நாவல், கடம்பம் போன்ற ஐம்பதுக்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு வைத்து வெடிக்கு பதிலாக செடிகள் வைத்து பசுமை நகரத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் ராஜக்காபட்டி ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா பால்ராஜ் , 58 கிராம இளைஞர் சங்க தலைவர் சௌந்தரபாண்டியன் உட்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். செய்தியாளர்: உசிலை சிந்தனியா...
தமிழகம்

கருணை இல்லத்தில் காவல் ஆய்வாளர்! தீபாவளி அன்று கருணை உள்ளம்

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அருகில் முதியோர் கருணை இல்லம் உள்ளது. இந்த இல்லத்தில் ஏராளமான முதியோர்கள் உள்ளனர். தீபாவளி அன்று கருணை இல்லத்தில் இருக்கும் முதியோர்களை அம்மைய...
தமிழகம்

பார்வையற்றோருக்கு உதவுவது கடவுளுக்கு செய்கிற சேவை நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேச்சு

பார்வையற்றோர் மற்றும் ஆதரவற்றோருக்கு சேவை செய்வது கடவுளுக்கு செய்கிற சேவை என மதுரையில் நடைபெற்ற விழாவில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசினார் இது பற்றிய விவரம் மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் சார்பில் தீபாவளி திருநாளை முன்னிட்டு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 100 பேர் குடும்பத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஹோட்டல் தமிழ்நாடு அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர் அழகுராம் ஜோதி தலைமை தாங்கினார். மதுரை மெட்ரோ ஹெரிடேஜ் ரோட்டரி சங்க தலைவர் சி. ஆர். வெங்கடேஷ் மதுரை கிழக்கு ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் பிரபு கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தார். மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார். நிகழ்ச்சியில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் பங்கேற்று பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் குடும்பத்திற்கு அரிசி மற்றும் இனிப்பு மற்றும் பிற பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினார்....
1 454 455 456 457 458 545
Page 456 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!