தொடர் கனமழை; திறக்கப்படும் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் கனமழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருவதால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகள் திறக்கப்பட உள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.. சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களாக புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் கனமழையால் நிரம்பி வருகின்றன. திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புழல் ஏரியின் நீர் மட்டம் 21 புள்ளி 20 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 19 புள்ளி 30 அடியாக உள்ளது. காலை நிலவரப்படி ஏரிக்கு சுமார் ஆயிரத்து 400 கன அடி நீர் வந்துக்கொண்டிருப்பதால், காலை 11 மணியளவில் புழல் ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்பட உள்ளது. விநாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்படும் என்றும், ஏரிக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து உபரி நீர் வெளியேற்றம்...