தமிழகம்

தமிழகம்

ராமேஸ்வரம் – திருப்பதி ரயில் இன்று தாமதமாக புறப்படும்

ராமநாதபுரம், அக்.28-ராமேஸ்வரம் ரயில் பெட்டி பராமரிப்பு நடைமேடைகளில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக இன்று ( அக் 28) ராமேஸ்வரத்தில் இருந்து மாலை 4:20 மணிக்கு புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் - திருப்பதி விரைவு ரயில் (16780) இன்று இரவு 11 மணிக்கு அதாவது 400 நிமிடங்கள் தாமதமாக புறப்படும் என தெற்கு ரயில்வே செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிருபர் : காமேஷ் பாரதி, ராமநாதபுரம்  ...
தமிழகம்

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற “வீட்டிற்கு ஒரு விஞ்ஞானி”

தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் இன்று "வீட்டிற்கு ஒரு விஞ்ஞானி" என்ற நிகழ்ச்சிகல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் ஸ்கூல் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் மாவட்ட கல்வி அலுவலர் செந்தில் வேல்முருகன் மற்றும் கல்வி இன்டர்நேஷனல் பள்ளி நிர்வாகி செந்தில்குமார்மற்றும்கல்லூரி முதல்வர்சாய் லட்சுமி மற்றும் தலைமை ஆசிரியர் குமரேஷ்கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ரோ ஃனாஹாஸ்லின் என்ற மாணவியிடம் வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி என்ற நிகழ்ச்சி சம்பந்தமாக சில கேள்விகள் கேட்டார்அந்த மாணவி பதிலளிக்கும் போது எடுத்தபடம். செய்தியாளர் : A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்...
தமிழகம்

மேடை கலைவானார் என போற்றபட்ட என்.நன்மாறன் அவர்களின் முதலாம் அண்டு நினைவு அஞ்சலி மதுரையில் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரும் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த தோழர் என்.நன்மாறன் கடந்த வருடம் வயது முதிர் காரணமாக உயிரிழந்தார். அவரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் இன்று மதுரை செயிண்ட் மேரிஸ் சர்சில் நடைபெற்றது இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு அவரது திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்....
தமிழகம்

சின்னமனூர் வட்டார அளவில் கலை பண்பாட்டுத் திருவிழா

தேனி மாவட்டம், சின்னமனூர் ஒன்றியத்தில் 2022-23ம் ஆண்டிற்கான கலைப் பண்பாட்டுத் திருவிழா போட்டிகளானது மாணவ மாணவியர்தம் தனித்திறனை மதிப்பிடும் நோக்கில் தனிநபர் போட்டியாக நேரடியாக ஸ்ரீ கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளியில் அக்.27,28 மற்றும் 31 ஆகிய மூன்று தினங்களில் திட்டமிடப்பட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டிக்கு 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும், மாணவியர்களுக்கும் எனதாக தனித்தனியாக நடைபெற்று வருகிறது. கலை பண்பாட்டு திருவிழா போட்டியை பள்ளியின் தலைமை ஆசிரியர் முனிராஜா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சகாயராஜ் தொடங்கி வைத்தார்கள். போட்டிகளுக்கு பொறுப்பாசிரியர்களாக கன்னிகா, நாகலெட்சுமி, சுப்புரமணி ஆகியோர் செயல்பட்டனர். மேலும்,ஆசிரியர் பயிற்றுநர்கள் பாக்கிய மரியான நான்சி, சாமுண்டீஸ்வரன், லூக்கா, பாக்கிய ஜெயந்தி ஆகியோர் உடனிருந்து சிறப்பாக வழி நடத்தினார்கள். வாய்ப்பாட்டிசை ( CLASSICAL), வாய்ப்பாட்டிசை (FOLK),கருவி இசை (தாள வாத்தியம்),கருவி இசை (மெல்லிசை)...
தமிழகம்

கவுன்சிலர்களுக்கு புத்தக பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் யூனியன் அலுவலகத்தில் கவுன்சிலர்களுக்கான புத்தகப் பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .இதில் உசிலம்பட்டி, செல்லம்பட்டி, டிகல்லுப்பட்டி ஆகிய பகுதிகளில் இருக்கும் கவுன்சிலர்களுக்கு மாநில முதன்மை பயிற்சியாளர் மீனம்பாள் மாவட்ட முதன்மை பேச்சாளர் தங்கம் ஆகியோர் பயிற்சிகள் அளித்தனர் . இதில் யூனியன் சேர்மன் ரஞ்சனி சுதந்திரம் ,துணை சேர்மன் மலேசியா பாண்டி முன்னிலையில் நடைபெற்றது .இதில் கவுன்சிலர்களுக்கு வார்டு பகுதியில் இருக்கும் பொதுமக்கள் குறைகள் நிறைகளை பற்றி விளக்கமாக எழுதி மாதம் ஒருமுறை நடைபெறும் கவுன்சிலர் கூட்டத்தில் குறைகளை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதில் அனைத்து பகுதி கவுன்சிலர்களும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். செய்தியாளர்: உசிலை சிந்தனியா...
தமிழகம்

மதுரை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் முகூர்த்த தினமான இன்று 100க்கு மேற்பட்ட புதுமண தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்றது

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் முகூர்த்த தினங்களில் ஏராளமான திருமணம் நடைபெறும். கடந்த புரட்டாசி மாதங்களில் திருமண வைபவங்கள் எதுவும் நடைபெறாத நிலையில் தற்போது ஐப்பசி மாதம் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றது. இன்று திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் புதுமண தம்பதிகள் திருமணம் செய்து கொள்வது வழக்கம் இந்த நிலையில் உற்சவர் சன்னதியில் உள்ள சுப்பிரமணியசாமி தெய்வானை அம்மன் சன்னதி முன்பு இன்று மட்டும் ஐப்பசி மாதம் மூகூர்த்த தினத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட புதுமண தம்பதிகள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். முகூர்த்த நாட்களில் கோயிலில் திருமணம் செய்வது மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த நிலையில் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் முதல் முகூர்த்த தினமான இன்று திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று ஒரு...
தமிழகம்

முதல்வர் மு.க. ஸ்டாலின் மதுரை வருகையொட்டி விமான நிலையத்தில் முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி திருநாவுக்கரசு தலைமையில் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இராமநாதபுரம் பசும் பொன்னில் நடைபெறும் குரு பூஜையில் கலந்து கொள்ள நாளை இரவு மதுரை வருகையொட்டி மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மதுரை விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குநர் பாபுராஜ், முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி திருநாவுக்கரசு தலைமையில்,மத்திய தொழில பாதுகாப்பு படை கமாண்டன்ட் உமாமகேஸ்வரன், மதுரை மாநகர் காவல் துணை ஆணையர்கள் சீனிவாச பெருமாள், ஆறுமுக சாமி மற்றும் சுகாதாரத்துறை வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்...
தமிழகம்

சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு, தீவிர கண்காணிப்பு

திருமங்கலம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் மற்றும் மேலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் இணைந்து , சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு, தீவிர ரோந்து செய்ததில், சட்டவிரோதமாக சுய லாப நோக்கம் கருதி பல்வேறு இடங்களில் மது விற்பனைக்கு வைத்திருந்த 4 பெண்கள் உட்பட 23 நபர்களை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். மேற்படி கைது செய்த நபர்களிடமிருந்து 180 மில்லி அளவு கொண்ட 2325 மது பாட்டில்கள், 650 மில்லி அளவு கொண்ட பீர் பாட்டில்கள் - 11, பணம் ரூ. 2790/- பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி கைது செய்யப்பட்ட நபர்கள் மீது மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, சட்டத்துக்குப் புறம்பாக மது விற்பனை செய்த நபர்கள் மீது மேல் நடவடிக்கை எடுத்தனர். செய்தியாளர் : வி...
தமிழகம்

குற்றம்

மதுரை மாவட்டத்தில் இன்று நடந்த தற்கொலை மற்றும் குற்ற சம்பவங்கள் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி புதூர் அழகர் கோவில் மெயின் ரோட்டில் அடையாளம் தெரியாத வாகனம் போது நடந்து சென்ற முதியவர் பலியானார். கே. புதூர் ஸ்ரீ மீனாட்சி அம்மன் நகர் தெற்கு நான்காவது தெருவை சேர்ந்தவர் சித்திரவேலு 77. இவர் அழகர் கோவில் மெயின் ரோட்டில் நடந்து சென்றார்.அப்போது அடையாளம் தெரியாத வாகனம் போது மயங்கி கிடந்தார் . அவரை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மகன் செந்தில்குமார் கொடுத்த புகாரில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாட்டுத்தாவணி விறகு மண்டி அருகே ஓடும் வேனில்...
தமிழகம்

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில், 24 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள, பிரசித்திபெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள், இந்து அறநிலையத்துறை கோவில் நகைகள் சரிபார்ப்பு துணை ஆணையர் பொன்.சாமிநாதன், இருக்கன்குடி கோவில் உதவி ஆணையர் கருணாகரன், கோவில் அறங்காவலர் ராமமூர்த்தி பூசாரி மேற்பார்வையில் நடைபெற்றது. கோவிலில் உள்ள 12 உண்டியல்களும் திறக்கப்பட்டு, சாத்தூர் மற்றும் துலுக்கப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஓம்சக்தி பக்தர்கள் குழு மற்றும் கோவில் தன்னார்வலர்கள் மூலம் எண்ணப்பட்டது. உண்டியல் காணிக்கையாக 24 லட்சத்து, ஆயிரத்து 265 ரூபாய் பணமும், 83 கிராம் தங்கமும், 490 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்திருப்பதாக அதிகாரிகள் கூறினர். செய்தியாளர்: வி காளமேகம்  ...
1 449 450 451 452 453 545
Page 451 of 545

Right Click & View Source is disabled.

error: Content is protected !!