தமிழகம்

தமிழகம்

தடுப்பூசி போடாதவர்கள் வெளியே நடமாட தடை.. புதுச்சேரி அரசு உத்தரவு

புதுச்சேரியில் கொரோனாவை தடுக்கும் வகையில் கட்டாய தடுப்பூசி சட்டம் உடனடியாக அமல்படுத்தப்படுகிறது என சுகாதார துறை இயக்குனர் ஸ்ரீராமலு அறிவித்துள்ளார். கோவிட் பற்றிய அனைத்து லேட்டஸ்ட் அப்டேட்களை இங்கே படியுங்கள் கொரோனா நோய் தொற்று குறைந்துள்ளதை தொடர்ந்து புதுச்சேரியில் ஊரடங்கில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்றை தடுக்கவும் 100 சதவித தடுப்பூசி போட்ட யூனியன் பிரதேசமாக மாற்ற அரசு பல்வேறு முகாம்களை நடத்தி நடவடிக்கைக எடுத்து வருகிறது. இதன் பயனாக முதல் தவணை ஊசியை 7,70,000 பேரும் இரண்டாவது தவணை ஊசியை 4,48,000 பேரும் செலுத்தி கொண்டுள்ளனர். புதுச்சேரியில் 77 சதவிதத்தினர் தடுப்பூசி போட்டு கொண்டுள்ள நிலையில்விடுப்பட்டவர்கள் சிறப்பு முகாம்களில் செலுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் சிலர் முன்வராத காரணத்தினால் கட்டாயம் கொரோனா தடுப்பூசி சட்டம் புதுச்சேரியில் அமல்படுத்தப்பட்டுள்ளது.புதுச்சேரி பொது சுகாதார சட்டம் 1973ன் பிரிவு...
தமிழகம்

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் புகுந்து கலகம் உருவாக்க சதி: போலீஸ் கமிஷனரிடம் ஜெயக்குமார் மனு

அ.தி.மு.க., தலைமை அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஜெயக்குமார் மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக தலைமைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 3-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதையடுத்து அலுவலகத்திற்கு வெளியே சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. ஏற்கெனவே அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, மற்ற அதிமுக தொண்டர்கள் புகழேந்தியை தாக்கினார்கள். இதனால் அலுவலகம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அதிமுகவினருக்கு முறையான போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார், ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். அதில், கழகத்தில் அடிப்படை உறுப்பினராக இல்லாதவர்கள், கழகத்திலிருந்து நீக்கப்பட்டவர்கள், மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் மனு தாக்கல் செய்ய வேண்டுமெனக் கலவரத்தை ஏற்படுத்துவதாகவும் இதனால் முறையான நடவடிக்கை எடுத்து...
தமிழகம்

கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற ரூ.2,756 கோடி கடன் ரத்து: அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற ரூ.2,756 கோடி கடன் ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. 2021 மார்ச் 31-ம் தேதி வரை நிலுவையில் இருக்கும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது....
தமிழகம்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது; வங்கக்கடலில் உருவானது ‘ஜோவத்’ புயல்: வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா இடையே இன்று கரையை நெருங்குகிறது

வங்கக் கடலில் உருவாகியுள்ள 'ஜோவத்' புயல், வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா இடையே இன்று கரையை நெருங்க உள்ளது. இதன் காரணமாக வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடலோரப் பகுதியில் பெரும்பாலான இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழை அல்லது அதிகனமழையும் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்,'ஜோவத்' புயலாக வலுப்பெற்றுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடலோரப் பகுதியை 4-ம் தேதி (இன்று) காலை நெருங்கக் கூடும். அதைத் தொடர்ந்து வடக்கு - வடகிழக்கு திசையில் ஒடிசா கடற்கரை ஒட்டி நகரும்....
தமிழகம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல்:ஓபிஎஸ்,ஈபிஎஸ் இன்று வேட்புமனு தாக்கல்!

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கான வேட்புமனுவை ஓபிஎஸ்,ஈபிஎஸ் இன்று தாக்கல் செய்கின்றனர். அதிமுகவின் செயற்குழு கூட்டம் கடந்த டிச.1 ஆம் தேதி நடைபெற்றது.இந்த கூட்டத்தில்,கட்சியின் சட்ட விதி 20(அ) பிரிவு திருத்தம் மற்றும் 11 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.அதன்படி,அதிமுக ஒருங்கிணைப் பாளர்களை கட்சியின் தொண்டர்களே நேரடியாக தேர்வு செய்யும் விதமாக சட்ட விதிகள் மாற்றப்பட்டுள்ளது.மேலும்,பொதுச்செயலாளர் அதிகாரம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப் பாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து,அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் வருகின்ற டிசம்பர் 7 ஆம் தேதியன்று நடைபெறும் என்றும்,8 ஆம் தேதியன்று அதன் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அதிமுக தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து,அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கி நடைபெற்றது.ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் தேர்தல் ஆணையர்கள் பொன்னையன் மற்றும் பொள்ளாட்சி ஜெயராமன் அவர்கள் முன்னிலையில்...
தமிழகம்

அங்கன்வாடி உதவியாளர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு

அங்கன்வாடி உதவியாளர்களின் ஓய்வு பெறும் வயதை 58ல் இருந்து 60 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு தமிழ்நாடு சட்டபேரவையில் சட்டமன்றப் பேரவை விதி 110-ன்...
தமிழகம்

அ.தி.மு.க., கூட்டணி தொடரும்: அண்ணாமலை அறிவிப்பு

'அ.தி.மு.க.,வுடன் சிறிய கருத்து வேறுபாடு இருந்தாலும் கொள்கை அடிப்படையில் ஒன்றாக உள்ளோம். கூட்டணி தொடரும்' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:தி.மு.க., அரசு திட்டமிட்டு அ.தி.மு.க.,-- பா.ஜ., நிர்வாகிகள் மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்ய முயற்சிக்கிறது, சமீபத்தில் பா.ஜ.,வை சேர்ந்த அகோரம் என்பவரை கைது செய்ய, 250 போலீசாரை அனுப்பி மிரட்டல் விடுத்தது.குற்றச்சாட்டுகளை கண்டு தி.மு.க., அஞ்சுகிறது. தேர்தல் அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக கூறி விட்டு, தற்போது தி.மு.க., ஏமாற்றுகிறது. பொய் சொல்லி ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த தி.மு.க., வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறி விட்டது. வேளாண் சட்டங்கள் குறித்து காங்., உள்ளிட்ட சில கட்சிகள் தவறாக பிரசாரம் செய்து, விவசாயிகளை நம்ப வைத்து விட்டன. ஒரு காலம் வரும். அப்போது, 'வேளாண் சட்டம் வேண்டும்'...
தமிழகம்

ஓபிஎஸ் – இபிஎஸ்க்கு அதிக அதிகாரம்; அதிமுக அமைப்பு விதியில் முக்கிய திருத்தம்

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. அந்த வகையில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி நடைபெற்றது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தநிலையில், அதிமுக செயற்குழு கூட்டம் 2-வது முறையாக இன்று கூடியது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் காலை 10 மணிக்கு இந்த கூட்டம் தொடங்கியது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், செயற்குழு உறுப்பினர்கள் என சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டத்தில் அதிமுக தற்காலிக...
தமிழகம்

திண்டுக்கல், தூத்துக்குடி, நாமக்கல்லில் அறநிலையத் துறை சார்பில் 3 கலை, அறிவியல் கல்லூரிகள்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

திண்டுக்கல், தூத்துக்குடி, நாமக்கல் மாவட்டங்களில் அறநிலையத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள 3 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையின்போது, துறையின் சார்பில் 10 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை கொளத்தூர், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஆகிய நான்கு இடங்களில் பி.காம், பிபிஏ, பிசிஏ, பிஎஸ்சி கணினி அறிவியல் ஆகிய நான்கு பாடப் பிரிவுகளுடன் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க உயர் கல்வித்துறை அனுமதி அளித்து அரசாணையும் வெளியிடப்பட்டது. சென்னை கொளத்தூரில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சார்பில் சோமநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் கல்லூரி தொடங்க திட்டமிடப்பட்டது. நடப்பு...
தமிழகம்

டிச.15 வரை கரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு; கேரளாவுக்கு இன்று முதல் அரசு பேருந்துகள் இயக்கம்: பொதுப் போக்குவரத்துக்கு முதல்வர் அனுமதி

கரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் டிச.15-ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் கேரளாவுக்கு பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ள தைத் தொடர்ந்து இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய அவசியம் கருதியும் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து, தொடர் மழை பொழிந்து வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும் பொதுமக்கள் நலன் கருதி நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் டிச.15 வரை நீட்டித்து உத்தர விடப்படுகிறது. ஏற்கெனவே ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கிடையே போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளதைப் போல கேரள மாநிலத்துக்கும் பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது. ஏற் கெனவே செயல்பட அனுமதிக்கப் பட்டுள்ள அனைத்துக் கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்ற...
1 446 447 448 449 450 498
Page 448 of 498

Right Click & View Source is disabled.

error: Content is protected !!