தமிழகம்

தமிழகம்

மாணவர்கள் விருப்பப்பட்டால் மூன்றாவது மொழியை கற்கலாம் – உயர்கல்வித்துறை அமைச்சர்

இருமொழிக்கொள்கைக்கு ஆளுநர் ஆதரவு அளிக்க வேண்டும். அதேசமயம் மாணவர்கள் விருப்பப்பட்டால் அவர்கள் விரும்பும் மூன்றாவது மொழியை கற்கலாம் ஆனால், கட்டாயப்படுத்தக்கூடாது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 37-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் நடைமுறையில் உள்ளார். இருமொழிக்கொள்கைக்கு ஆளுநர் ஆதரவு அளிக்க வேண்டும். அதேசமயம் மாணவர்கள் விருப்பப்பட்டால் அவர்கள் விரும்பும் மூன்றாவது மொழியை கற்கலாம். ஆனால், கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் ஆளுநருக்கு கோரிக்கை வைத்தார். மேலும், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏதாவது ஒரு மொழியை கற்கலாம். சர்வதேச அளவில் ஆங்கிலமும், மாநில அளவில் தமிழும் உள்ளன என தெரிவித்துள்ளார்....
தமிழகம்

தேசிய கல்வி கொள்கையில் உள்ள திட்டங்களில் நல்லதை மட்டும் எடுத்துக் கொள்வோம்: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

தேசியக் கல்வி கொள்கையில் உள்ள திட்டங்களில் நல்லவைகள் மட்டும் எடுத்துக் கொள்ளப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 174 மாணவர்களுக்கு தனியார் நிறுவனம் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கணபதி அரசுப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கினார். தொடர்ந்து விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேசும்போது, ''ஒரு பெண் குழந்தையை படிக்க வைத்துவிட்டால் அந்த குடும்பமே படித்துவிடும். அந்தவகையில் தமிழகத்தில் 70 சதவீத பெண்கள் எழுத்தறிவுடன் நடைபோடுவதற்கு பெரியார் செய்த சமூகப் பணிகள் முக்கிய காரணமாகும். எனினும், கிராமப்புறங்களில் பெண்களை படிக்க வைக்க பெற்றோருக்கு இன்றும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. அதற்கான பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். ஆசிரியர்கள் கண்டிப்பது தங்களின்...
தமிழகம்

சென்னை – விளாடிவோஸ்க் கடல்வழி போக்குவரத்தால் தமிழகம் உட்பட தென்னிந்திய மாநிலங்கள் பலன்பெறும்: ரஷ்ய துணைத்தூதர் ஒலெக் அவ்தீவ் தகவல்

சென்னை - விளாடிவோஸ்க் (ரஷ்யா) கடல்வழி வர்த்தக போக்குவரத்து திட்டத்தின் மூலம் தமிழகம் உட்பட தென்னிந்திய மாநிலங்கள் பலனடையும் என்று ரஷ்ய துணைத் தூதர் ஒலெக் அவ்தீவ் தெரிவித்துள்ளார். இந்தியா - ரஷ்யா இடையிலான 21-வது உச்சி மாநாடு டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கலந்துகொண்டார். இந்த மாநாட்டின் பலன்கள் குறித்து 'இந்தியா- ரஷ்யா இடையேயான சிறப்பு கூட்டாண்மை' என்ற தலைப்பிலான கருத்தரங்கம் ரஷ்ய துணைத் தூதரகம் சார்பில் சென்னையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தென்னிந்தியாவுக்கான ரஷ்ய துணைத் தூதர் ஒலெக் அவ்தீவ் பேசியதாவது: ரஷ்யாவுக்கு மிகவும் நம்பகமான நாடாக இந்தியா திகழ்கிறது. இதன் ஒரு அம்சமாக நடத்தப்பட்ட உச்சி மாநாடு வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதில் கல்வி, வர்த்தகம், எரிசக்தி, கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு...
தமிழகம்

பேரறிவாளன் வழக்கு.. கவர்னர் காலம் தாழ்த்தியதை ஏற்க முடியாது: சுப்ரீம் கோர்ட்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தன் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பதால் தன்னை வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வேறு தேதிக்கு வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என கோரினார். அப்போது இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், நெடு நாட்களாக பேரறிவாளன் விவகரத்தில் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை எனவும், பேரறிவாளன் வழக்கு தொடர்பான கோப்புகள் மீது முடிவெடுக்காமல், கவர்னர் காலம் தாழ்த்தியதை எந்த வகையிலும் ஏற்க முடியாது எனவும் தெரிவித்தனர். மேலும், மாநில அரசின் தீர்மானத்தின் மீது கவர்னர் முடிவு எடுக்க வேண்டும். மீண்டும் இவ் வழக்கை ஒத்திவைக்க கோரக்கூடாது என நீதிபதிகள்...
தமிழகம்

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 3வது முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையின் காரணமாக தாம்பரத்தை அடுத்த வரதராஜபுரம், முடிச்சூர் பகுதிகளில் அதிக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அந்த பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரம்பி வழிந்ததால் வரதராஜபுரம் பி.டி.சி.குடியிருப்பு பகுதிகள் மகாலட்சுமி நகர், இரும்புலியூர் டி.டி.கே.நகர், வன்னியன்குளம், முடிச்சூர் அமுதம் நகர் பகுதிகளில் ஏரித்தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே நேரில் சென்று பார்வையிட்டு வெள்ளத்தை வடிய வைக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதனை தொடர்ந்து மழைநீரை வடிய வைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. இதைத் தொடர்ந்து அந்த பகுதிகளில் எந்த அளவுக்கு மழைநீர் வடிந்துள்ளது. இந்நிலையில், என்னென்ன வெள்ளத்தடுப்பு பணிகள் நடைபெற்றுள்ளன என்பதை கண்டறிய முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் அங்கு சென்று...
தமிழகம்

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்களா? அமைச்சர் விளக்கம்

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருள் வழங்கப் படும் என்று சமூக வலைதளங்களில் பரவிய செய்தி தவறானது என்று உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே இனி, ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று சமூக வலைதளங்களில் பரவிய செய்தி பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், திருவாரூர் அருகே இளவங்கார்குடியில் புதிய ரேஷன் கடையினை உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மானிய விலையில் பொதுமக்களுக்கு சிலிண்டர் வழங்கும் பணியை துவக்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கல்லணையை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பயிர்களுக்கு தேவையான நீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரேஷன்...
தமிழகம்

ஓபிஎஸ், இபிஎஸ் போட்டியின்றித் தேர்வு

அதி­முக கட்­சி­யின் ஒருங்­கி­ணைப்­பா­ளர், இணை ஒருங்­கி­ணைப்­பா­ளர் பத­விக்கு ஓ. பன்­னீர்­செல்­வ­மும் எடப்­பாடி பழ­னி­சா­மி­யும் போட்­டி­யின்றித் தேர்வு செய்­யப்­பட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதி­முக தேர்­தல் ஆணை­யர்­கள் பொன்­னை­யன், பொள்­ளாச்சி ஜெய­ரா­மன் ஆகி­யோர் இந்த அறிவிப்பை நேற்று வெளி­யிட்­ட­னர். இந்நிலையில், “அதி­மு­க­வில் இனி இரட்­டைத் தலை­மை­தான். சசி­கலா டிடி­வியை கட்­சி­யில் இணைப்­பது குறித்த கேள்­விக்கே இட­மில்லை. அதி­மு­க­வில் நிரந்­தர பொதுச்­செ­ய­லா­ளர் ஜெய­ல­லிதா மட்­டும்தான்,” என முன்­னாள் அமைச்­சர் கடம்­பூர் ராஜு தெரி­வித்­துள்­ளார். இதற்­கி­டையே, பெரம்­பூ­ரில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் அதி­முக முன்­னாள் அமைச்­சர் ஜெயக்­கு­மார் கூறுகையில், ஜெயல­லிதா நினை­வி­டத்­துக்கு சசி­கலா தொண்­டர் படை­யு­டன் வர­வில்லை; குண்­டர்­கள் படை­யு­டன் வந்­தார். தொண்டர்களுக்காக சசி­கலா அறிக்கை விடு­வது கொம்பு சீவி விட்டு, அதற்­காக முத­லைக் கண்­ணீர் வடிப்­பதைப் போன்­ற­தா­கும் என்று ஜெயக்­கு­மார் விமர்­சித்­துள்­ளார்....
தமிழகம்

இபிஎஸ் கார் தாக்கப்பட்ட விவகாரம்; வன்முறையில் எங்களுக்கு நம்பிக்கையில்லை என டிடிவி தினகரன் விளக்கம்

ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் காரை வழிமறித்து அமமுகவினர் கோஷமிட்ட நிலையில், அமமுக ஜனநாயக ரீதியாகவே அரசியலை எதிர்கொள்ளுமே தவிர, வன்முறையில் எங்களுக்கு எப்போதும் நம்பிக்கை கிடையாது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான அதிமுகவினர், அமமுகவினர், சசிகலா ஆதரவாளர்கள் இன்று காலை முதலே குவிந்தனர். இந்தநிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்.எல்.ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள், அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் 'அம்மா உணவகம், அம்மா மருந்தகம் திட்டங்களை நிறுத்துவோரின் கொட்டங்கள் அடக்கப்படும், 'நீட்...
தமிழகம்

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய தென்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தருமபுரியில் மிதமான மழையும் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும், இதனால் வடமேற்கு வங்கக்கடல், அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வங்க கடலில் நிலை கொண்டிருந்த 'ஜாவத்' புயல் காற்றழுத்த தாழ்வு...
தமிழகம்

சிங்காரச் சென்னை 2.0 திட்டம்: 1,010 சாலைகளை சீரமைக்க ரூ.147.18 கோடி ஒதுக்கீடு

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 147 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் ஆயிரத்து 10 சாலைகளை சீரமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியால் 387 கிலோ மீட்டர் நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும், 5 ஆயிரத்து 270 கிலோ மீட்டர் நீளமுள்ள 34 ஆயிரத்து 640 உட்புற சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் 622 உட்புற தார் சாலைகள், 307 கான்கிரீட் சாலைகள் உள்ளிட்டவை சீரமைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளதாக திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதனடிப்படையில் 147 கோடியே 18 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான ஒப்பந்தமும் கோரப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளிகள் அனைத்தும் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுவதை உறுதிசெய்ய, இணையவழி ஒப்பந்தங்களாக இ-டெண்டர் முறையில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  ...
1 445 446 447 448 449 498
Page 447 of 498

Right Click & View Source is disabled.

error: Content is protected !!