காணிக்கை நகைகளை உருக்க விதித்த தடை உத்தரவு மேலும் ஆறு வாரங்களுக்கு நீட்டிப்பு
கோவில்களுக்கு காணிக்கையாக வந்த நகைகளை உருக்குவது தொடர்பாக முடிவெடுக்கக் கூடாது என்ற உத்தரவை, மேலும் ஆறு வாரங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.சென்னையைச் சேர்ந்த, 'இண்டிக் கலெக்டிவ்' அறக்கட்டளை தலைவர் டி.ஆர்.ரமேஷ் தாக்கல் செய்த மனு:கோவில்களில் உள்ள நகைகளை உருக்குவது தொடர்பாக, அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவில் நிர்வாகம் தொடர்பாக, அறங்காவலர்கள் குழு தான் முடிவெடுக்க வேண்டும்.கடந்த 10 ஆண்டுகளாக கோவில்களுக்கு வந்த நகைகளை உருக்கி, கட்டிகளாக மாற்றி, வங்கிகளில் டிபாசிட் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.நகைகளை பாதுகாக்கும்படி, அறங்காவலர்களுக்கு ஆணையர் அறிவுறுத்தலாம். நகைகளை உருக்கும்படி உத்தரவிட முடியாது.தமிழகத்தில், ஏராளமான கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. அறநிலையத் துறை ஊழியர்கள், தக்காராக பணியாற்றுகின்றனர். அவர்களால் கொள்கை முடிவு எடுக்க முடியாது. எனவே, அறநிலையத் துறை கமிஷனரின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்; ரத்து செய்ய வேண்டும். நகைகளை உருக்குவதற்கு...