ஒமைக்ரான் பரவல், மருத்துவ கட்டமைப்பு குறித்து சென்னையில் மத்திய குழு 2-வது நாளாக ஆய்வு
ஒமைக்ரான் தொற்று பரவல் மற்றும் மருத்துவ கட்டமைப்பு குறித்து சென்னையில் 2-வது நாளாக மத்திய குழுவினர் ஆய்வு நடத்தினர். தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் கரோனா வைரஸ் தொற்று பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. தமிழகத்தில் 45 பேர் உட்படநாடு முழுவதும் 650-க்கும் மேற்பட்டோர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ஒமைக்ரான் பரவல் அதிகம் உள்ள தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், மிசோரம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு மத்திய குழுவினர் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக, மருத்துவர்கள் வினிதா, பர்பசா, எஸ்.சந்தோஷ்குமார், தினேஷ்பாபு ஆகியோர் கொண்ட மத்திய குழுவினர் கடந்த 26-ம் தேதி இரவு சென்னை வந்தனர். சென்னை...