‘ஸ்டெர்லைட் ஆலையில் விரைவில் உற்பத்தி துவங்கும்’
''ஸ்டெர்லைட் ஆலையில் விரைவில் தாமிர உற்பத்தியை துவக்குவோம்,'' என, ஆலையின் தலைமை இயக்கக அதிகாரி ஏ.சுமதி தெரிவித்தார்.நேற்று அவர் அளித்த பேட்டி: துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யக்கூடிய திறனுடையது. இதை, எட்டு லட்சம் டன்னாக விரிவாக்கம் செய்ய முடிவு செய்தபோது, மக்கள் எதிர்ப்பால் 2018ல்ஆலைமூடப்பட்டது. ஆலைக்கு துாத்துக்குடி மக்களிடம் எந்த எதிர்ப்பும் இல்லை; அவர்கள் ஆலைக்கு ஆதரவாகவே உள்ளனர். அப்பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், கட்டமைப்புகள், குடிநீர், வேலை வாய்ப்பு, கல்வி வசதி, சுகாதாரம் ஆகியவற்றை, தற்போது வரை ஸ்டெர்லைட் ஆலை செய்து வருகிறது. இதுதவிர, அப்பகுதி மக்களின் திறனை மேம்படுத்தும் திட்டங்களையும் செயல்படுத்தி, அதன் வாயிலாகவும் வேலைவாய்ப்பை, ஸ்டெர்லைட் ஆலை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. வறுமை கோட்டுக்கு கீழேயுள்ள, 10 ஆயிரம் மாணவர்களுக்கு, 10 கோடி ரூபாய்...