தமிழகத்தில் துவங்கியது தென்மேற்கு பருவமழை; நீலகிரி, கோவையில் கனமழை
இரண்டு வாரங்களுக்கு முன்பே பருவமழை துவங்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் உதகை மற்றும் நீலகிரியின் மற்ற பகுதிகளில் நேற்று தென்மேற்கு பருவமழை துவங்கியது. மே மாத மத்திய பகுதியில் நல்ல மழைப்பொழிவு விவசாயிகளுக்கு நம்பிக்கையை அளித்தது. நேற்று உதகையில் 3.6 மி.மீ மழை பதிவானது. நடுவட்டம் பகுதியில் 10 மி.மீ மழையும், அப்பர் பவானியில் 42 மி.மீ மழையும், அவலாஞ்சியில் 35 மி.மீ மழையும், பந்தலூர் பகுதியில் 25 மி.மீ மழையும் பெய்தது. அதிகபட்சமாக 15 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. கோத்தகிரி மற்றும் குன்னூர் பகுதிகளிலும் கனமழை காரணமாக விளைநிலங்கள் பாதித்துள்ளது. அதே போன்று தமிழகத்தில் அதிக மழைப் பொழிவை பெறும் பகுதியான கோவை மாவட்டம், வால்பாறையின் சின்னக்கல்லார் பகுதியில் நேற்று 50 மி.மீ மழைபொழிவு பதிவாகியுள்ளது. சென்னையில் இன்று மற்றும் நாளை வானம் மேகமூட்டத்துடன்...