தமிழகம்

சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில் ஆராட்டு விழா நடைபெற்றது

255views
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையில் ஐயப்ப பக்தர்கள் கடந்த கார்த்திகை மாதம்1ம் தேதி மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். தொடர்ந்து தினந்தோறும் மாலை ஐயப்பன் கோவிலில் பஜனை பாடல்களை பாடி தங்களது வழிபாட்டினை மேற்கொண்டு வருகின்றனர். இன்று நடைபெற்ற ஆராட்டு விழாவில் தென்கரை.பாலம் அருகே வைகை ஆற்றில் ஐயப்பன் நீராடி சிறப்பு அலங்காரத்தில் கஜமுக வாகனத்துடன் தென்கரை பிரதான சாலை வழியாக செண்டை மேளம் அதிர்வேட்டுகள் முழங்க ஊர்வலமாக வந்து திருக்கோவிலிலை அடைந்து ஆராட்டு விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் ஐயப்பன் கோவிலில் அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை அனைத்து ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!