தமிழகம்

தமிழகம்

மதுரை விமான நிலைய விரிவாக்கம் செய்ய நிலம் கையகப்படுத்துவதில் தமிழக அரசு இரண்டு நீர் பிடிப்பு இடங்களை உச்ச நீதிமன்ற ஆணையின்படி வகை மாற்றம் செய்ய வேண்டிய தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லை. எம்.பி சு. வெங்கடேசன் பேட்டி

சென்னையில் இருந்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்தார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்திப்பில். மதுரை விமான நிலைய விரிவாக்கம் குறித்த கேள்விக்கு.. கடந்த நான்கு மாதங்களில் ஆறு முறை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் மதுரை வந்து சென்றுள்ளார். இத்தனை முறை வந்து சென்றாலும் மதுரை விமான நிலையம் குறித்து கேட்க மறுக்கிறாரா? அல்லது திசை திருப்புகிறாரா? என்பது ஒரு கேள்வியாகவே இருக்கிறது கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் மதுரை விமான நிலையம் 24 மணி நேரம் செயல்படும் விமான நிலையமாக மாற்றப்பட வேண்டும் என கேள்வி எழுப்பினேன் அதற்கு விமான போக்குவரத்து துறை அமைச்சர் திசை திருப்பக் கூடிய பதிலாகவே அளித்துள்ளார். இரவு நேரங்களில் விமானங்கள் இயங்கவில்லை என கேட்டால் விமான நிலையம் இரவு நேரங்களில் இயங்கவில்லை...
தமிழகம்

மதுரை மாநகராட்சிக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு – மேலக்கால் அருகே ரோட்டில் வீணாகும் குடிநீர்

மேலக்கால் வைகை ஆற்றில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் மதுரை மக்களுக்கு தண்ணீர் கொண்டு செ மதுரை மாநகர் மக்களின் தேவைக்கேற்பல்லப்படுகிறது. இக்குழாயானது மேளக்காடு அருகே காராபட்டி குடிமங்கலம் கீழமாத்தூர் கவரிமான் என பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீர் ஆறாக ஓடுகிறது. குறிப்பாக.துவரிமான் மேலக்கால் ரோட்டில் உள்ள மேலமாத்தூர் கொடிமங்கலம் பகுதிகளில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சேதமடைந்துள்ளது.  கடந்த இரண்டு மாதங்களாக இதனை சரி செய்யாததால் ஏராளமான குடிநீர் வீணாகிறது.  இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது குடிநீர் குழாயின் உடைப்பு ஏற்பட்டு 24 மணி நேரமும் தண்ணீர் வீணாக ஆற்றில் கலக்கிறது தற்போது நீரை காசு கொடுத்து வாங்கி குடிக்கும் நிலைமை உள்ள நிலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நாள் முழுவதும் குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது...
தமிழகம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அய்யப்பன் நாயக்கன்பட்டி கல்லாங்காடு கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளை தயார் படுத்தும் பட்டதாரி இளைஞர்கள்

உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் பாலமேடு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 15 16 17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நிலையில் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளை தயார்படுத்தும் வேலைகளில் காலை உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக படித்த பட்டதாரி இளைஞர்கள் பலர் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளில் தங்கள் காளைகளும் கலந்துகொண்டு வெற்றி பெற வேண்டும் என்ற ஆவலுடன் தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர்.  மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே அய்யப்பன் நாயக்கன்பட்டி கல்லாங்காடு கிராமத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பட்டதாரி இளைஞர்கள் சிலர் பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த கிராமங்களைச் சேர்ந்த பிரகாஷ் சூர்யா மணி திருவாசகம் பால்பாண்டி உள்ளிட்ட பட்டதாரி இளைஞர்கள் அனைவரும் அவரவர் தங்கள் ஜல்லிக்கட்டு காளைகளை ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக தயார் படுத்தி வருகின்றனர். இது...
தமிழகம்

சிவகாசி, வத்திராயிருப்பு பகுதிகளைச் சேர்ந்த 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது

விருதுநகர் மாவட்டத்தில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.  சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்த சுப்புராஜ், சித்துராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஜான்பீட்டர் ஆகிய இருவரும் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதுடன், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. மேலும் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள ராமசாமியாபுரம் பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்பவரும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக பல்வேறு வழக்குகள் உள்ளன. தொடர்ந்து பொது மக்களுக்கு அச்சம் விளைவிக்கும் வகையில் நடந்துகொள்ளும் இவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். எஸ்.பி. பரிந்துரையின் பேரில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில்...
தமிழகம்

சிவகாசி மாநகராட்சியின், அதிகாரிகளின் வாகனம் பழுது வண்டியை தள்ளிவிட்டு இயக்க வேண்டிய அவலம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியாக செயல்பட்டு வருகிறது. நிர்வாக வசதிகளுக்காக சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதிகள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதிக்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் திருத்தங்கல் பகுதியில் உள்ள மண்டல அலுவலகத்தில் அதிகாரிகள் பயன்படுத்தும் ஜீப் வாகனம் பழுதடைந்த நிலையில் உள்ளது. எங்காவது செல்ல வேண்டும் என்றால், இந்த வண்டியை நான்கு பேர் சேர்ந்து தள்ளிவிட்டு இயக்க வேண்டிய அவல நிலையில் உள்ளது. மேலும் தூய்மை பணியில் ஈடுபட்டு வரும் வாகனங்களும் மோசமான நிலையில் உள்ளது என்று ஊழியர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். எனவே மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள், மாநகராட்சியின் வாகனங்களை பழுது நீக்கி நல்ல நிலையில் வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைவாக செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

தென்காசி மாவட்ட பத்திரிகையாளர் சங்க கூட்டம்; பத்திரிகையாளர்கள் நலன் சார்ந்த முக்கிய தீர்மானம்

தென்காசி மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் நலன் சார்ந்து பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன், தென்காசி மாவட்ட பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை, 2023 ஆம் ஆண்டு டைரி மற்றும் மாத, தினசரி காலண்டர்கள் வழங்கப்பட்டது. தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தென்காசி மாவட்ட பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தென்காசி பத்திரிகையாளர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் சு.இராசேந்திரன் தலைமை தாங்கினார். தென்காசி பிரஸ் கிளப் தலைவர் கணபதி. பாலசுப்பிரமணியன் மற்றும் தென்காசி மாவட்ட பிரஸ் கிளப் தலைவர் பா.பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி மாவட்ட பத்திரிகையாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முத்துசாமி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பத்திரிகையாளர்...
தமிழகம்

ஜல்லிக்கட்டு காளைக்கு, ஜாதி வண்ணம் பூச வேண்டாம் – அனைத்து விவசாயிகள் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு

உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் நாள் நடைபெறுவது வழக்கம். இன்று அவனியாபுரம் கிராம மக்கள் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், பல ஆண்டுகளாக தென்கால் விவசாய பாசன சங்கம் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வந்தது. தற்போது ஜாதி ரீதியாக அமைப்பை உருவாக்கி ஒரு குடும்பத்தை சேர்ந்த நபர்கள் மட்டும் ஜல்லிக்கட்டு விழாவை நடத்த முயற்சி செய்து ஆட்சியரிடம் மனு கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், வருகின்ற 2023 ஜல்லிக்கட்டு போட்டியை ஜாதி ரீதியாக தனி அமைப்பினர் நடத்துவதற்கு அனுமதி வழங்க கூடாது எனவும்,அவனியாபுரம் பகுதி விவசாயிகள் காளை வளர்ப்போர் மாடுபிடி வீரர்கள் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்திட அனுமதி வழங்க வேண்டும் என, அவனியாபுரம் பகுதி விவசாயிகள் இன்று மதுரை மாவட்ட ஆட்சியரிடம்...
தமிழகம்

சிவகாசியில், வீடுபுகுந்து மூதாட்டியிடம் நகையை பறிக்க முயன்ற காய்கறி வியாபாரி… போலீசாரிடமிருந்து தப்ப முயன்றபோது கிழே விழுந்து காயம்

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள பாட்டக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கரத்தினம் (43). இவர் சிவகாசி பகுதியில் தலைச்சுமையாக காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.  வழக்கம் போல சிவகாசி, பழனியாண்டவர்புரம் காலனி பகுதியில் காய்கறி விற்பனை செய்து கொண்டிருந்த அவர், அந்தப்பகுதியைச் சேர்ந்த வசந்தாதேவி (73) என்ற மூதாட்டிக்கு காய்கறிகள் விற்பனை செய்தார். வாங்கிய காய்கறிகளுக்கு பணம் கொடுப்பதற்காக, வசந்தாதேவி பணத்தை எடுத்து வருவதற்காக வீட்டிற்குள் சென்றார். அவர் தனியாக இருப்பதை அறிந்த தங்கரத்தினம், குபீரென்று வீட்டுக்குள் புகுந்து மூதாட்டியை தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையை பறிக்க முயன்றார். இதனால் பயந்துபோன வசந்தாதேவி பயங்கரமாக கத்தி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு அருகிலிருந்தவர்கள் விரைந்து வந்து, நகை பறிப்பில் ஈடுபட்ட தங்கரத்தினத்தை மடக்கிப்பிடித்தனர். இது குறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்....
தமிழகம்

மதுரையில் கல்லூரி மாணவர்கள் இளைஞர்களை குறி வைத்து போதை மாத்திரை விற்பனை செய்த கும்பல் கைது – 17ஆயிரம் போதை மாத்திரைகள் மற்றும் போதை மருந்துகள் பறிமுதல்

மதுரையில் கஞ்சா என்னும் போதை பொருளுக்கு பதிலாக இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார் வந்துள்ளது. இதனையடுத்து மதுரை மாநகர் காவல் ஆணையர் உத்தரவுப்படி தல்லாகுளம் காவல் உதவி ஆணையர் தலைமையில் போதை மாத்திரை விற்பனை கும்பலை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.  தனிப்படை காவல்துறையினர் மதுரை மாநகரில் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுவந்தனர். அதன்படி இன்று மதுரை வைகை வடகரை பகுதியில் மதிச்சியம் காவல்நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்களை சோதனை செய்ய நிறுத்தினர். அப்போது பைக்கில் வந்த இரு இளைஞர்கள் தப்பியோடிய மடக்கி பிடித்து விசாரணை செய்த போது, மதுரை மாவட்டம், வடகாடுபட்டி கிராமத்தை சேர்ந்த தமிழழகன் (19) என்பதும், தமிழழகனின் நண்பர்களான...
தமிழகம்

செங்கோட்டை அரசு நூலகத்தில் தேசிய திறனாய்வு தேர்வு (NMMS) இலவச பயிற்சி வகுப்பு; மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு

செங்கோட்டை அரசு நூலகத்தில் போட்டித் தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சிகள் கட்டணம் ஏதுமின்றி இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது.தென்காசி, செங்கோட்டை சுற்று வட்டாரத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர். தலைசிறந்த கல்வியாளர்களால் நடத்தப்படும் சிறப்பு பயிற்சிகள் மற்றும் கல்வி சார்ந்த பணிகள் அனைத்தையும் நல்நூலகர் இராமசாமி தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார். அந்த வகையில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதி அரசு பொது நூலகத்தில் தேசிய திறனாய்வு (NMMS) தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு டிச.26 திங்கட்கிழமை துவங்கியது. இதன் தொடக்க விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் சுடலை கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார். ஜே.பி கல்வியியல் கல்லூரி மாணவிகள் பயிற்சி வகுப்பை நடத்தினர். எல்.என். சேரிட்ரபிள் டிரஸ்ட் இயக்குனர் நீலகண்டன், ஆகாஷ் அகாடமி இயக்குனர் மாரியப்பன், ஆசிரியர் சித்தாய், ஜே.பி கல்லூரி முதல்வர் ஜான்...
1 343 344 345 346 347 546
Page 345 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!