தமிழகம்

தமிழகம்

சாத்தூரில், அடுத்தடுத்து 2 கடைகளின் மேற்கூரையை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள படந்தால் பகுதியைச் சேர்ந்தவர் சமுத்திரராஜ் (58). இவர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகில் இரும்புப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருக்கிறார். இவரது கடையின் அருகில், வெங்கடாசலபுரம் பகுதியைச் சேர்ந்த அழகுராஜ் (50), இருசக்கர வாகனங்கள் உதிரிபாகங்கள் விற்பனை கடை வைத்துள்ளார். நேற்று இரவு இருவரும் வழக்கம் போல வியாபாரம் முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்று விட்டனர். இன்று காலையில் சமுத்திரராஜ் கடையை திறந்தபோது, அவரது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டு கடையின் மேஜையில் வைக்கப்பட்டிருந்த பணம் திருட்டு போனதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார். சற்று நேரத்தில் அழகுராஜ் தனது கடைக்கு வந்து கடையை திறந்தபோது, அவரது கடையின் கூரையும் உடைக்கப்பட்டு கடையில் வைத்திருந்த பணம் மற்றும் பொருட்கள் திருடு போனதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து இருவரும் சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்....
தமிழகம்

பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் தெரு நாய்களை பிடிக்க சென்ற மாநகராட்சி ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்ட வாலிபர்; சமூக வலைதளங்களில் வீடியோ காட்சி வெளியானதால் பரபரப்பு

மதுரையில் கடந்த 3 ஆண்டுகள் கொரோனா தொற்று பரவல் காரணமாக தெரு நாய்கள் மாநகராட்சி சார்பாக பிடிக்கப்படவில்லை. இதன் காரணமாக மாவட்ட அளவில் தெரு நாய்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து உள்ளது.  குறிப்பாக தெரு நாய்கள் முதியோர்- சிறுமிகள் உள்பட பலரையும் கடித்து வருகிறது. மதுரை மாநகராட்சி அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டுமே பெரும்பாலும் வெறி நாய் கடி தடுப்பூசி மருந்துகள் உள்ளன. எனவே பொதுமக்கள் பாதிக்கப்பட்டவரை அழைத்துக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு அலைந்து திரிய வேண்டி உள்ளது. இந்த நிலையில் மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள தைக்கால் தெருவில் சுற்றித் திரியும் தெரு நாய்கள், இரண்டு சிறுமிகளை கடித்து குதறி விட்டன. எனவே அந்தப் பகுதியில் வசிக்கும் கார்த்திக் என்பவர், இது தொடர்பாக மதுரை மாநகராட்சி வாட்ஸ்ஆப் புகார் எண்ணுக்கு புகார்...
தமிழகம்

அலங்காநல்லூர் ஜல்லிகட்டு போட்டிக்காக 8க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கும் திருநங்கைகள்

தமிழர்களின் பாரம்பரியத்தை காக்கும் வகையில் ஜல்லிகட்டு போட்டியிலும் தடம் பதிக்கும் எண்ணத்தில் காளை வளர்ப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ளனர். தமிழர்களின் வீரத்தை ஆண்களும், பெண்களும் மட்டுமல்ல மூன்றாம் பாலித்தவரான நாங்களும் பிரதிபலிப்போம் என்பதை நிருபிக்கும் வகையில் இளைஞர்களுக்கு நிகராக ஜல்லிக்கட்டு காளைகளை போட்டிக்கு பார்த்து பார்த்து தயார் செய்து வருகின்றனர் மூன்று திருநங்கைகள். தமிழர்களின் வீர விளையாட்டு போட்டியான ஜல்லிகட்டு போட்டியில் கலந்து கொள்வதற்கான காளைகளை வளர்ப்பதில் மதுரை மாவட்டத்தில் குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வம்காட்டி தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகளும் ஜல்லிகட்டு காளைகளை ஆர்வமுடன் வளர்க்க தொடங்கியுள்ளனர். அந்தவகையில் மதுரை மதிச்சியம் பகுதியை சேர்ந்த கீர்த்தனா, அக்சயா, பிரியாமணி உள்ளிட்ட திருநங்கைகள் 8க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகின்றனர். இதில் நான்கடவுள், அவன்இவன்,...
தமிழகம்

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாராகும் மாடுபிடி வீரர்கள் – இலவச மாடுபிடி பயிற்சி மையம் மூலம் பயிற்சி வழங்கும் மாடுபிடி வீரர்

மதுரையில் உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு 16ஆம் தேதியும், அலங்காநல்லூரில் 17ஆம் தேதியும் நடைபெறவுள்ள நிலையில் மாடுபிடி வீரர்களும் மாடுபிடிப்பதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர். தற்காலிக வாடிவாசல் அமைப்பை உருவாக்கி அதில் ஜல்லிக்கட்டு மாடுகளை அவிழ்த்துவிட்டு மாடுபிடி வீரர்கள் அடக்கி பயிற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். மதுரை கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்த முடக்காத்தான் மணி என்ற மாடுபிடி வீரர் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பயிற்சி மையம் என்ற உருவாக்கி அதன் மூலமாக கட்டணமின்றி பயிற்சிகள் வழங்கப்படுகிறது. செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

மதுரை நாகமலைபுதுக்கோட்டை பகுதியில் பிரபல ரவுடி ஜெயகுமார்(எ) கொக்கிகுமார் என்பவரது தலையில் கல்லைப் போட்டு கொலை மர்ம நபர்கள் வெறிச்செயல் நாகமலைபுதுக்கோட்டை போலீசார் விசாரணை

மதுரை நாகமலைபுதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடியான ஜெயகுமார்(எ) கொக்கிகுமார் இவர் மீது பல்வேறு வழக்கு உள்ளது.  இந்நிலையில் இன்று மாலை ரவுடி ஜெயகுமார் மீது தலையில் கல்லை போட்டு கொலை செய்து மர்ம நபர்கள் தப்பியோட்டம். தகவலறிந்து வந்த நாகமலைபுதுக்கோட்டை போலீசார் வழக்குபதிவு விசாரணை செய்தனர்.  மேலும் இறந்த கொக்கி குமார் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸாரின்முதல் கட்ட விசாரணையில் கொக்கி குமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும் நாகமலைபுதுக்கோட்டை அரசு மாணவர் விடுதி காலியிடத்தில் நேற்று குடி போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கொக்கி குமார் அப்பகுதி இளைஞர்களின் செல்போனை எடுத்ததாக கூறப்படுகிறது.  தனை தொடர்ந்து இன்று மாலை அதே இடத்தில் ஏற்பட்ட வாய்தகராறில் கைகலப்பாக மாறியது இதில் 5 பேர் கொண்ட கும்பல்...
தமிழகம்

மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை.சமயநல்லூரில் லாரி மோதியதில் சம்பவ இடத்தில்.லோடுமேன் பலி

மதுரை செல்லூரைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பவரது மகன் அஜித்குமார்(22) லோடுமேன் வேலைக்காக மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையான சமயநல்லூரில் வாகனங்களை மறித்து அதில் ஏறி தினசரி லோடுமேன் வேலை பார்ப்பது வழக்கம் இன்று மதியம் லோடுமேன் வேலை பார்ப்பதற்காக மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையான சமயநல்லூரில் வாகனங்களை மறித்து வேலை கேட்டுக் கொண்டிருந்தார்.  அப்போது எதிர்பாராத விதமாக எதிர் திசையில் இருந்து வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்தில் பலியானார். வாகனங்களை மறிக்கும் போது லாரியின் டயரில் சிக்கி பலியான விஜயகுமாரின்.உடலை பார்க்கும்போது மிகவும் பரிதாபமாக இருந்தது ஏற்கனவே இன்று அதிகாலை பெங்களூரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சென்ற தனியார் வாகனம் தடுப்பு சுவரில் மோதியதில் பாட்டியும் பேரனும் பலியான நிலையில் அதே இடத்தில் அடுத்தடுத்து விபத்து நடந்தது பொது மக்களை அதிர்ச்சிக்கு ள்ளாக்கியுள்ளது. மேலும், இந்த...
தமிழகம்

மதுரை – திருப்பரங்குன்றம் தேசிய நெடுஞ்சாலையில் 70க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் – விளர்ச்சேரி அருகே கலைஞர் நகர் குடியிருப்பு வாசிகளுக்கு பொதுப் பாதை இல்லாமல், தனி நபர் ஆக்கிரமித்துள்ளதற்கு எதிர்ப்பு.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே கலைஞர் நகர் குடியிருப்பு பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது . பல ஆண்டுகளாக வசித்து வரும் குடியிருப்பு வாசிகளுக்கு , கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனி நபர் அக்குடியிருப்பவாசிகள் செல்லும் பொது பாதையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்ட முயற்சி செய்ததால், இது குறித்து காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினருக்கு கலைஞர் நகர் குடியிருப்பு வாசிகள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல், அலட்சியப்படுத்தியதால்,  மதுரை - திருப்பரங்குன்றம் தேசிய நெடுஞ்சாலையில் மூலக்கரை என்ற இடத்தில் , 70க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தங்களுக்கு உரிய பாதை அமைத்து தரக்கோரி போராட்டத்தில் குரல் எழுப்பினர் .  இதனை தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததற்கு பின் போராட்டத்தை கைவிட்டனர். இப் போராட்டத்தினால் அங்கு...
தமிழகம்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக கிராம கமிட்டி உறுப்பினர்கள் அவனியாபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகை

மதுரை தெற்கு தாசில்தார் முத்துப்பாண்டி முன்னிலையில் அவனியாபுரம் காவல் ஆய்வாளர் சந்திரன் கிராம கமிட்டி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படாதால் தொடர்ந் து கிராம நிர்வாக அலுவலக வாயிலில் கிராம கமிட்டியினர் அமர்ந்துள்ளனர். தைப்பொங்கல் அன்று நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் அமைதி கூட்டம் நாளை (30.12.227 மேலூர் வருவாய் கோட்டாச்சியர் அலுவலத்தில் நடைபெறுகிறது.  இந்த அமைதி கூட்டத்தில் அவனியாபுரம் பகுதியில் இல்லாத நபர்களுக்கும், இறந்தவர்களும் உள்ளதால் அவர்களை நீக்கி புதிய கிராம கமிட்டி அமைக்க வலியுறுத்தி  முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர் இது தொடர்ந்து மதுரை தெற்கு தாசில்தார் முத்துப்பாண்டி,அவனியாபுரம் கிராம வருவாய் ஆய்வாளர் பிருந்தா மற்றும் காவல் ஆய்வாளர் சந்திரன் ஆகியோர் கிராம கமிட்டி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறனர். இது குறித்து அவனியாபுரம் கிராம கமிட்டி சட்ட ஆலோசகர் அன்பரசு கூறுகையில்அவனியாபுரம்...
தமிழகம்

மதுரை மாநகராட்சி வைகை ஆற்று கரைப் பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்

மதுரை மாநகராட்சி 100 வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலைகள், தெருக்கள், பேருந்து நிலையங்கள், பூங்காக்கள், வைகை ஆற்றுக் கரைப் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகள் நகரமைப்பு பிரிவின் அலுவலர்களால் குழு அமைக்கப்பட்டு, தினந்தோறும் ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  மேலும், மாநகராட்சி சுகாதார பிரிவின் மூலம் சாலைகளில் இடையூறாக சுற்றி திரியும் கால்நடைகள், குதிரைகள், நாய்கள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு மற்றும் மாநகராட்சி செல்லூர் பணிமனையில் உள்ள காப்பகத்தில் தொடர்ந்து ஒப்படைக்கப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சி வார்டு எண்.43 மற்றும் 49க்கு உட்பட்ட வைகை தென்கரை சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வைகை ஆற்றின் இரு கரைகளிலும் சாலைகள் அமைக்கப் பட்டுள்ளது (ஒபுளாப்படித்துறை சந்திப்பு முதல் குருவிக்காரன் சாலை சந்திப்பு வரை) புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலைகளில்...
தமிழகம்

கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட 14 வது வார்டில் வலசக்கல்பட்டி மெயின் ரோட்டில் இருந்தும் கிருஷ்ணமூர்த்தி காடு முதல் ராமராஜ் காடு வரை சுமார் 21 அடி அகலம் 700 மீட்டர் நீளம் உள்ள மண் சாலையை நில உரிமையாளர்கள் கெங்கவல்லி பேரூராட்சி நிர்வாகத்திற்கு தானமாக ஒப்படைத்தனர்

கெங்கவல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட 14 வது வார்டில் வலசக்கல்பட்டி மெயின் ரோட்டில் இருந்தும் கிருஷ்ணமூர்த்தி காடு முதல் ராமராஜ் காடு வரை சுமார் 21 அடி அகலம் 700 மீட்டர் நீளம் உள்ள மண் சாலையை நில உரிமையாளர்கள் கெங்கவல்லி பேரூராட்சி நிர்வாகத்திற்கு தானமாக ஒப்படைத்தனர் உடன் பேரூர் கழக செயலாளர் சு.பாலமுருகன் பேரூராட்சி மன்ற தலைவர் லோகாம்பாள் துணைத் தலைவர் மருதாம்பாள் நாகராஜ் கவுன்சிலர்கள் முருகேசன் அருண்குமார் தங்கபாண்டியன் சையது, அம்சவர்தனி குமார், லதா,சத்யா செந்தில், கவிதா சேகர் மற்றும் கழக நிர்வாகிகள் பாலசுப்பிரமணியம்,செல்வகிளிண்டன், ராஜேந்திரன், ஆரோக்கியசாமி, மணிகண்டன் கலந்து கொண்டனர். செய்தியாளர்: ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம் - கெங்கவல்லி...
1 338 339 340 341 342 546
Page 340 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!