தமிழகம்

தமிழகம்

சிவகங்கையில் விளையாட்டுப் போட்டி

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையின் சார்பில், மாநில அளவிலான பாரதியார் தின, குடியரசு தின குத்துச்சண்டை விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.  கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், மாநில அளவிலான பாரதியார் தின, குடியரசு தின குத்துச்சண்டை விளையாட்டு போட்டியை சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்களின் போது, கூட்டுறவுத்துறை அமைச்சர், தெரிவிக்கையில், சிவகங்கை மாவட்டத்தில் சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் வெற்றி பெற்ற சுமார் 1000 மாணவிகள் 1600 மாணவர்கள் என மொத்தம் 2600 மாணவ மாணவிகள் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் மாநில அளவிலான பாரதியார் தின, குடியரசு தின குத்துச்சண்டை விளையாட்டு போட்டியில் கலந்து கொள்கிறார்கள். இப்போட்டியில், முதல் இரண்டு நாட்கள் மாணவிகளும், அடுத்த இரண்டு நாட்கள்...
தமிழகம்

மண் காப்போம் இயக்கத்திற்காக பிரான்ஸ் முதல் கோவை வரை விழிப்புணர்வு சைக்கிள் பயணம் – 50 வயதில் 7,000 கி.மீ சைக்கிள் ஓட்டிய சாதனை பெண்மணி

மண் காப்போம் இயக்கம் குறித்து உலகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 50 வயதான நதாலி மாஸ் அவர்கள் பிரான்ஸ் முதல் கோவை வரை 7 ஆயிரம் கி.மீ சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார். கடந்தாண்டு ஜூன் 21-ம் தேதி தனது சொந்த ஊரான பிரான்சின் டூலோன் நகரில் இருந்து புறப்பட்ட அவர் இத்தாலி, ஸ்லோவேனியா, குரோஷியா, செர்பியா, பல்கேரியா, துருக்கி, ஐக்கிய அமீரக நாடுகள் மற்றும் ஓமன் வழியாக சைக்கிள் ஓட்டி, டிசம்பர் 1-ம் தேதி இந்தியாவுக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து பல்வேறு மாநிலங்கள் வழியாக பயணித்த அவர் கோவை ஈஷா யோகா மையத்திற்கு இன்று (ஜனவரி 29) வருகை தந்தார். உளவியலாளரான நதாலி அவர்கள் ‘மண் காப்போம்’ இயக்கத்திற்காக சத்குரு அவர்கள் தனிநபராக மேற்கொண்ட 30,000 கிலோமீட்டர் மோட்டார் சைக்கிள் பயணம் தான்...
தமிழகம்

சிவகாசி மாநகராட்சி கருத்து கேட்பு கூட்டத்தில் கடும் வாக்குவாதம் – திமுக கவுன்சிலர் மீது, மதிமுக கவுன்சிலர் காவல் நிலையத்தில் புகார்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் கடந்த 2 மாதங்களாக நடைபெறவில்லை. இந்த நிலையில் மாநகராட்சி கூட்டம் நடத்துவது குறித்து கருத்து கேட்பு கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா தலைமையில், சிவகாசி பகுதியைச் சேர்ந்த 24 கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கருத்து கேட்பு கூட்டத்தில் காரசாரமாக விவாதம் நடந்தது. அப்போது பாஜக கவுன்சிலர் குமரி பாஸ்கருக்கும், மதிமுக கவுன்சிலர் ராஜேஷிற்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டத்தில் பாஜக கவுன்சிலருக்கு ஆதரவாக, திமுக கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் வெயில்ராஜ், மதிமுக கவுன்சிலர் ராஜேஷை கடுமையாக தாக்கி பேசினார். அப்போது கருத்து கேட்பு கூட்டத்திலிருந்து வெளியேறிய ராஷேஸை, வெயில்ராஜ் தாக்க முயன்றார். இதனால் கருத்து கேட்பு கூட்டத்தில் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. இதனையடுத்து தனக்கு கொலை...
தமிழகம்

ஈரோடு இடைத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ், மகத்தான வெற்றி பெறும். சாத்தூர் திருமண விழாவில், கனிமொழி எம்.பி பேட்டி

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில், திமுக கட்சியின் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெறும் என்று எம்.பி. கனிமொழி கூறினார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள மேட்டமலை பகுதியில், தர்மதுரை திரைப்பட புகழ், தப்பாட்ட கலைஞர் வேலு ஆசான் இல்லத் திருமண விழா நடைபெற்றது. இந்த திருமண விழாவில் திமுக கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்.பி கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி பேசும்போது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி என்பது நிச்சயமாக திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு தான் என்று உறுதியான ஒன்றாகியுள்ளது. பெருவாரியான வாக்குகளை பெற்று காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகத்தான வெற்றி பெறுவார். அதிமுக கட்சியில் தலைவர்களுக்கிடையே...
தமிழகம்

புளியங்குடியில் இரண்டாம் நிலை காவலர் மாதிரி தேர்வு

தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் இரண்டாம் நிலை காவலர் உடல் தகுதி மாதிரி தேர்வு நடந்தது. இதில் அதிகமான மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர். புளியங்குடி பார்ட் கல்வி அறக்கட்டளையின் TNPSC பயிற்சி மையம், புளியங்குடி மருதம் பயிற்சி மையம் மற்றும் புளியங்குடி போதி பயிற்சி மையம் இணைந்து புளியங்குடி காவல் துணை ஆய்வாளர் செல்வம் மாணிக்கம் தலைமையில் இரண்டாம் நிலை காவலர் உடல் தகுதி மாதிரி தேர்வு நடைபெற்றது. புளியங்குடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் சனிக்கிழமை நடந்த இத்தேர்வில் மாணவ, மாணவியர்கள் அதிகமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சியில் பார்ட் கல்வி அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் முஹைதீன், செயலாளர் அப்துல் பாஸித், பொருளாளர் சேக் அப்துல் கரீம், பார்ட் உடற் பயிற்சி ஆசிரியர் பால்கனி, செயற்குழு...
தமிழகம்

வேலூருக்கு வரும் 1-ம் தேதி முதல்வர் வருகையொட்டி ஆய்வு பணியை மேற்கொண்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

வேலூர் மாவட்டத்திற்கு வரும் பிப்ரவரி 1-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். காட்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ள விழா அமைய உள்ள இடத்தினை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு மேற்கொண்டார். அருகில் வேலூர் எம்.பி.கதிர்ஆனந், ஆட்சியர் குமாரவேல்பாண்டியன், அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார், மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு உள்ளிட்ட பலர் உள்ளனர். செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்...
தமிழகம்

இந்தியாவின் செய்திதாள் தினம்

இந்தியாவில் முதன்முதலாக கொல்கத்தாவிலிருந்து ஆங்கிலேயரான ஜேம்ஸ் அகஸ்டல் ஹிக்கி 1780-ம் ஆண்டு ஹிக்கிஸ் பெங்கால்கெ ஜெட் என்ற வார இதழை ஆங்கிலத்தில் துவக்கினார். அரசியல் மற்றும் வர்த்தக சம்மந்தப்பட்ட செய்திகள் வெளியாகியது. அப்போது நடந்த போரை பற்றி செய்தி வெளியிட மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்...
தமிழகம்

குடியரசு தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் குவைத் நாட்டு தமிழக சார்பில் நடைபெற்ற முகாம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் ஒன்றான குவைத் தமிழ் மக்கள் சேவை மையம் இந்திய 74 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு இரத்த தானம் முகம் குவைத் ஜெயபிரியா மத்திய ரத்த வங்கியில் 500க்கும் மேற்பட்ட நபர்கள் மத்தியில் 152 நபர்கள் இரத்த தானம் செய்தார்கள் இதனை குவைத் இந்திய தூதரக அதிகாரி முதல் செகரட்டரி தொழில் அதிபர் டிவிஎஸ் குரூப் சேர்மன் எம்ஏ ஹைதர் அலி ஏர் இந்தியா மேனேஜர் ராஜேந்திரன் மற்றும் அரசியல் பிரமுகர்கள் குவைத் தமிழ் மக்கள் சேவை மையத்தின் உறுப்பினர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
தமிழகம்

மதுரை சோழவந்தானில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மாநில அளவிலான கூடை பந்தாட்ட போட்டியை இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஜி .பி. ராஜா துவக்கி வைத்தார்.

மதுரை மாவட்டம் சோழவந்தானில் இளைஞர் நலன் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி ஜேஜே ஸ்போர்ட்ஸ் அகடமி சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியினை மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜி. பி. ராஜா துவக்கி வைத்தார். மதுரை,சேலம் திண்டுக்கல், திருநெல்வேலி தூத்துக்குடி தஞ்சாவூர் கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 18க்கும் மேற்பட்ட கூடைப்பந்தாட்ட அணியினர் கலந்து கொண்டனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வெற்றிச்செல்வன், பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் காளி, தெற்கு ஒன்றிய அமைப்பாளர் பால் கண்ணன், வடக்கு ஒன்றிய அமைப்பாளர் நல்லதம்பி, வாடிப்பட்டி பேரூர் இளைஞர் அணி பிரபு, சோழவந்தான் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், திமுக பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், பேரூராட்சி துணைத் தலைவர் லதா கண்ணன், திமுக நிர்வாகிகள் சி....
Uncategorizedதமிழகம்

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் தூய்மை பணி முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் எனும் தூய்மை இந்தியா திட்டம் 2.0 திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நகரத்தினையும் தூய்மையான நகரமாக மாற்றிட மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் தீவிர தூய்மை பணி முகாம் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது அதன்படி 28.01.2023 ம் தேதி நான்காவது சனிக்கிழமை சோழவந்தான் பேரூராட்சி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டு சைக்கிள் பேரணி மூலம் பொது மக்களுக்கு.கழிவுகளை தரம் பிரித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுஇந்நிகழ்வில் சோழவந்தான் பேரூராட்சி மன்ற தலைவர் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் தன்னார்வலர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டு தூய்மை பணிகள் செய்து மரக்கன்றுகள் நடவு செய்தனர். செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்...
1 294 295 296 297 298 546
Page 296 of 546

Right Click & View Source is disabled.

error: Content is protected !!