உலகம்

உலகம்உலகம்

ஜப்பான் நாடாளுமன்ற தேர்தலில் சுட்டுக்கொல்லப்பட்ட ஷின்ஜோ அபேயின் கட்சி அமோக வெற்றி

ஜப்பான் நாடாளுமன்ற மேலவைக்கான தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அந்த வகையில் நாடாளுமன்ற மேலவை தேர்தல் ஜூலை 10-ந் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, பிரதமர் புமியோ கிஷிடா தலைமையிலான ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தது. அக்கட்சியின் மூத்த நிர்வாகியும், முன்னாள் பிரதமருமான ஷின்ஜோ அபே பல நகரங்களுக்கு சென்று ஆளும் கட்சிக்கு வாக்கு சேகரித்து வந்தார். அந்த வகையில்...
உலகம்உலகம்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா? முன்கூட்டியே கையெழுத்திட்டதாக தகவல்

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அத்தியாவசிய பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. அரிசி, பெட்ரோல், டீசல் மற்றும் மருந்து பொருட்கள் இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மார்ச் மாதம் முதல் தெருக்களில் இறங்கி போராட தொடங்கினார்கள். போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே கடிதம் ஒன்றை பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவுக்கு அனுப்பி வைத்தார். அதில் அவர், "ஏற்கனவே...
உலகம்உலகம்

ஜப்பான் மேல்சபை தேர்தல்: சோகத்துடன் ஓட்டு போட்ட மக்கள்

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இரு தினங்களுக்கு முன் சுட்டுக் கொல்லப்பட்ட சூழலில், ஏற்கனவே அறிவித்தபடி நேற்று அந்நாட்டின் மேல்சபை தேர்தல் நடந்தது. பல இடங்களில் மக்கள் சோகத்துடன் ஓட்டு போட்டதை காண முடிந்தது. ஜப்பான் மேல்சபையின், 124 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில் மறைந்த ஷின்சோ அபேயின் ஆளும் சுதந்திர ஜனநாயக கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி வெற்றி பெறும் என, ஓட்டுப் பதிவுக்கு...
உலகம்உலகம்

இலங்கை அதிபர் மாளிகையில் குவிந்த குப்பைகள்; மூட்டைகளாக சேகரிப்பு

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விலைவாசி உயர்வு ஒருபுறம், உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை ஆகியவை மறுபுறம் என அந்நாட்டு மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதனிடையே, ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று முன்தினம் இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின்னர்,...
உலகம்உலகம்

இலங்கை பொருளாதார நெருக்கடி: “மற்ற ஆசிய நாடுகளுக்கான பாடம்” – மகாதீர் மொஹம்மத்

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது மற்ற ஆசிய நாடுகளுக்கான எச்சரிக்கை மணி என மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹம்மத் தெரிவித்துள்ளார். ஆசிய நாடுகள் பொறுப்பான நிதிக்கொள்கைகளைக் கையாள வேண்டும் என்றும், அவ்வாறு செயல்படவில்லை எனில் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிடியில் சிக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும் அந்நாட்டின் கடன் சுமையும் ஆசிய நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், மகாதீர்...
உலகம்உலகம்

தலைகீழாக மாறிய பிரிட்டன் அரசு.. ரிஷி சுனக் உட்பட 5 அமைச்சர்கள் ராஜினாமா

உலகின் முன்னணி வல்லரசு நாடுகளில் ஒன்றான பிரிட்டன் பணவீக்கம், பொருளாதாரச் சரிவு மத்தியிலும் ரெசிஷன் பயத்தில் நடுங்கி இயங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சான் தலைமையிலான நிர்வாகக் குழு அடுத்தடுத்து பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வந்த நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியினர் அதிகப்படியான நெருக்கடியை உருவாக்கினர். 2 பிஎச்கே வீடு ரூ 64 லட்சம் முதல்* பெருங்களத்தூரில், 7 லட்சத்திற்கு பதிவு செய்யுங்க இதனால் ஒரே நாளில் பிரிட்டன்...
உலகம்உலகம்

சிங்கப்பூர் மலேசியா: 60 ஆண்டுகாலமாக நீடிக்கும் தண்ணீர் பிரச்னை – வரலாறு என்ன?

மலேசியாவில் இருந்து தண்ணீர் பெறுகிறது சிங்கப்பூர். தினந்தோறும் 250 மில்லியன் கேலன் (1000 கேலன் = 3,780 லிட்டர்) தண்ணீரை மலேசியாவின் எல்லை மாநிலமான ஜோகூரிலுள்ள நதியில் இருந்து சிங்கப்பூர் பெற்றுக்கொள்கிறது. இந்த தண்ணீர் பகிர்வுக்காக மலேசியா, சிங்கப்பூர் இடையே 1961ஆம் ஆண்டு ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. பின்னர் அதில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், புதிய ஒப்பந்தங்களாக மாறின. எனினும் நாள்களின் போக்கில் சில பிரச்னைகள் தலைதூக்கின. தண்ணீர் பகிர்வு தொடர்பாக...
உலகம்உலகம்

இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவில் “அரபாத் உரை” இனி தமிழிலும் மொழிபெயர்க்கப்படும்!

உலகெங்கிலும் இருந்து வரும் இஸ்லாமியர்கள் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் மெக்காவில் அரபாத் பிரசங்கம் 14 மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் இனி தமிழிலும் அரபாத் உரை வாசிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மெக்காவின் தலைவர் அப்துல்ரஹ்மான் அல்-சுதைஸ் கூறும்போது, "அரபாத் உரை மொழிபெயர்ப்பு முயற்சியானது, இப்போது ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நிலையில், இத்திட்டம் 14 மொழிகளை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது....
உலகம்உலகம்

சூடானில் பேரணி சென்றவர்கள் மீது துப்பாக்கி சூடு- 8 பேர் பலி

சூடானில் கடந்த 2019-ஆம் ஆண்டு உமர் அல் பஷிர் ஆட்சி அகற்றப்பட்டு ராணுவ ஆட்சி அமைந்தது. அன்று முதல் ராணுவ ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடந்து வருகிறது. சூடான் தலைநகர் கார்ட்டமின் இரட்டை நகரமான ஓம்குர் மாரில் இருந்து நேற்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் கையில் அந்தநாட்டு கொடிகளை ஏந்தி பேரணியாக சென்றனர். அப்போது அவர்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள்,...
உலகம்உலகம்

இலங்கையில் கடுமையான உணவு தட்டுப்பாடு: பொருட்கள் இல்லாததால் கடைகள் மூடப்படும் அவலம்

இலங்கையில் உச்சத்தை எட்டியுள்ள பொருளாதார நெருக்கடியால் எரிபொருள் தட்டுப்பாடு நீடித்து வருகிறது. தேவையான எரிபொருள் கிடைக்காததால் வாகனங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கியமாக, நாடு முழுவதும் உணவு தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. வாகன இயக்கம் இல்லாததால் கடைகள் மற்றும் சந்தைகளுக்கு பொருட்கள் வரத்து குறைந்து விட்டது. ஒரு வாரமாக இந்த நிலை நீடிப்பதால் சிறிய கடைகள் முதல் பெரிய சூப்பர் மார்க்கெட் வரை அனைத்து வர்த்தக நிறுவனங்களிலும் உணவு...
1 7 8 9 10 11 42
Page 9 of 42

Right Click & View Source is disabled.

error: Content is protected !!