ஆப்கனில் துப்பாக்கி முனையில் அரசு அமைந்தால் ஏற்பதில்லை: 12 நாடுகள் அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் உள்ள மாகாணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தலிபான்கள் வசம் வீழ்ந்து கொண்டிருக்கின்றன. அந்நாட்டில் துப்பாக்கி முனையில் அமைக்கப்படும் அரசை அங்கீகரிக்கப் போவதில்லை என இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட 12 நாடுகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளன. ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறிவரும் நிலையில் அங்கு ஆட்சியைக் கைப்பற்ற தலிபான்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். அரசுப் படைகளுடன் ஆக்ரோஷமாக சண்டையிட்டு வரும் தலிபான் படைகள், ஆப்கானிஸ்தானில் உள்ள 34 மாகாணங்களில்...