இந்தியா

இந்தியா

ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் மருந்துகளுக்கு பற்றாக்குறை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி!

ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் மருந்துகளுக்கு பற்றாக்குறை தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் தானாக முன் வந்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், இனி இந்த விவகாரங்களை தாங்களே விசாரிப்பதாக அறிவித்திருந்து. இந்நிலையில், நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணை வந்தது. அப்போது, தமிழகம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் ஆக்சிஜன் கையிருப்பை வெற்றிகரமாக...
இந்தியா

கொரோனா பரவல் எதிரொலி..! இந்தியாவிலிருந்து தனி விமானம் மூலம் தப்பிச் செல்லும் பணக்காரர்கள்..!

கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு கிட்டத்தட்ட 3,50,000-த்தினை எட்டியுள்ளது.இதன்காரனமாக,இந்தியாவில் உள்ள பணக்காரர்கள் தனியார் ஜெட் விமானங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது.இதனால்,மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுகிறது.இந்த காரணத்தினால்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை அளிக்க முடியாமல் நோயாளிகள் இறக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் உள்ள பணக்காரர்கள்...
இந்தியா

இந்தியாவின் நிலை மனதை பதறவைக்கிறது: உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் உருக்கம்!

இந்தியாவில் தற்போதுள்ள சூழ்நிலை மனதை பதறவைக்கிறது என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரஸ் அதானோம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் தற்போதைய நிலை குறித்து உலக சுகாதார நிறுவனம் சார்பில் நேற்றைய தினத்தில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அப்போது பேசிய டெட்ரஸ் அதானோம்' இந்தியாவின் தற்போதைய சூழ்நிலை மனதை பதறவைக்கிறது. எங்களால் முடிந்த எல்லா உதவிகளைச் செய்யத் தயாராக இருக்கிறோம். இந்தியாவிற்குத் தேவையான உபகரணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது' என்று கூறினார் மேலும்...
இந்தியா

இந்தியாவில் 3.5 லட்சத்தைக் கடந்த தினசரி கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 3,52,991 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா இரண்டாம் அலை கோரதாண்டவமாடி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாகுறை காரணமாக பலரும் பாதிப்படைந்து உயிரிழந்துள்ளனர். மேலும ஆக்சிஜன் பற்றாகுறையை நீக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன் நடவடிக்கையாக...
இந்தியா

12 மணி நேர வேலை, 15 நிமிடத்திற்கு அதிகமாக பணியாற்றினால் ஓவர் டைம் – புதிய ஊதிய குறியீடு மசோதா!

தற்போது 15 நிமிடத்திற்கு பின் ஒரு நிமிடம் அதிகமாக பணியாற்றினாலும் அது ஓவர்டைம் வேலையாக கணக்கிடப்பட்டு ஊதியம் அளிக்கப்பட்ட வேண்டும் என புதிய ஊதிய குறியீடு மசோதாவில் கூறப்பட்டுள்ளது. வேலை நேரம், ஊதிய அமைப்பு, வீட்டுக்கு செல்ல கூடிய நேரம், சம்பளம், வருங்கால வைப்பு நிதி என ஊதிய குறியீடு மசோதாவில் அவ்வப்போது ஊழியர்களுக்கான பல மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்பொழுது மோடி தலைமையிலான மத்திய அரசு நாடாளுமன்றத்தில்...
இந்தியா

மத்திய அரசின் காலில் விழத் தயார்.. அமைச்சர் உருக்கம்

ஆக்சிஜன் தேவைக்காக மத்திய அரசின் காலிலும் விழத் தயார் என்று மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ்தோபே தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவலில் 2வது அலை மிகத் தீவிரமாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தேசிய அளவில் மகாராஷ்டிரா மாநிலம் அதிகம் பாதிக்கப்பட்டு முதலிடத்தில் உள்ளது. அதேசமயம் சிகிச்சை அளிக்க தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறையால் அம்மாநில அரசு திணறி வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் பலரின்...
இந்தியா

அதிகரிக்கும் கொரோனா தொற்று…! புதுச்சேரியில் மத்திய பல்கலைக்கழகம் மூடல்…!

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் இன்று முதல், வரும் 27ம் தேதி வரை மூடப்படுவதாக என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது அரசு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில், புதுச்சேரியில், கொரோனா...
இந்தியா

இந்தியாவில் கொத்து கொத்தாக பரவும் கொரோனா: 3.14 லட்சம் பேர் பாதிப்பு; ஒரே நாளில் 2104 பேர் பலி.. கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு!!

நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.84 லட்சத்தை தாண்டியுள்ளது. அதே போல், இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1. 59கோடியாக உயர்ந்துள்ளது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:  புதிதாக 3,14,835 பேர் பாதித்துள்ளனர்.  ...
இந்தியா

மேற்கு வங்கத்தில் இன்று தொடங்கிய 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு…!

மேற்கு வங்கத்தில் 43 தொகுதிகளுக்கான 6 ஆம் கட்டத் தேர்தல் வாக்குபதிவானது இன்று தொடங்கிய நிலையில் மக்கள் அனைவரும் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளில் மொத்தம் 8 கட்டங்களாக வாக்குபதிவு நடைபெறுகிறது.இதில் முதல் 5 கட்டங்களாக 180 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில்,இன்று காலை 6 ஆம் கட்டத் தேர்தல் வாக்குபதிவானது தொடங்கியுள்ளது. இந்த 6 ஆம் கட்டத் தேர்தலில் 306 வேட்பாளர்கள்...
இந்தியா

முழு ஊரடங்குக்கு இப்போது அவசியமில்லை.. அது கடைசிக் கட்டம்தான்.. மோடி அறிவிப்பு

நாட்டு  மக்கள் அனைவரும் இணைந்தால் கொரோனா பரவலைத் தடுக்க முடியும் என்றும் சரியான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் மீண்டும் லாக்டவுன் வருவதைத் தடுக்கலாம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாகவே மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 2 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்நிலையில், நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கொரோனா தடுப்பூசிகள் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு...
1 79 80 81 82
Page 81 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!