இந்தியா

இந்தியாசெய்திகள்

புதுச்சேரி ஊரடங்கு தளர்வில் அனுமதி அளித்தும் இயங்காத தனியார் பேருந்துகள்: நகருக்குள் வேலைக்கு வருவோர் கடும் திண்டாட்டம்

ஊரடங்கு தளர்வில் அனுமதி அளித்தும் புதுச்சேரியில் இயங்காத தனியார் பேருந்துகளால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். கிராமங்களில் இருந்து புதுச்சேரி நகரப்பகுதிக்கு பணிக்கு வருவோர் இதனால் கடும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். புதுச்சேரியில் கரோனா பரவலைத் தடுக்க தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 8-ம் தேதி கூடுதல்தளர்வுகளை அரசு அறிவித்தது. இதில், அனைத்து தொழிற்கூடங்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகளை மாலை 5 மணி வரை திறக்கவும் பேருந்துகளை இயக்கவும் அனுமதிக்கப்பட்டது....
இந்தியாசெய்திகள்

திரிணமூலில் இணைந்த பாஜக எம்எல்ஏ முகுல் ராய்: தகுதி நீக்கம் செய்ய மனு அளிப்பு

பாஜகவிலிருந்து விலகிய எம்.எல்.ஏ. முகுல் ராயை தகுதி நீக்கம் செய்ய பேரவைத் தலைவரிடம் பாஜக பேரவைத் தலைவர் சுவேந்து அதிகாரி இன்று மனு அளித்தார். கடந்த மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த முகுல் ராய், கிருஷ்ணாநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், தேர்தலில் மம்தா தலைமையிலான திரிணமூல் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து பாஜகவிலிருந்து விலகி மீண்டும் திரிணமூல் காங்கிரஸில்...
இந்தியாசெய்திகள்

ஸ்டாலின் சந்திப்பு குறித்து ராகுல் ட்வீட்..!

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக டில்லி சென்ற முதல்வர் மு.க ஸ்டாலின், நேற்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது, தடுப்பூசி தட்டுப்பாடு, நீட்தேர்வு, ஹைட்ரோகார்பன், ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, எழுவர் விடுதலை உள்ளிட்ட பல விவகாரங்கள் பற்றி மோடியுடன் பேசியதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அரை மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையின்போது, அமைச்சர் துரைமுருகன் உடன் இருந்தார். சந்திப்புக்குப் பிறகு தமிழ்நாடு இல்லம் திரும்பிய...
இந்தியாசெய்திகள்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ விபத்து!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் ஒன்பதாவது தளத்தில் நேற்று நள்ளிரவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த, தீ விபத்து ஏற்பட்ட தளத்தில் மருத்துவ பரிசோதனை ஆய்வாகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், தாங்கள் வந்த 20 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை...
இந்தியாசெய்திகள்

கருப்பு பூஞ்சை நோய்க்கு மருந்து ஒதுக்கீட்டில் பாரபட்சம் இல்லை: மும்பை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

மகாராஷ்டிராவில் கரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் அதுதொடர்புடைய கருப்பு பூஞ்சை நோய் உட்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பான பொதுநல வழக்குகளை மும்பை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதில் மகாராஷ்டிரா மற்றும் பிற மாநிலங்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் மருந்தை மத்திய அரசு சமமாக விநியோகிக்கிறதா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கு மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங் நேற்று நீதிமன்றத்தில் கூறியதாவது: மியூகோர்மைகோசிஸ் எனப்படும்...
இந்தியாசெய்திகள்

பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் அகிலேஷ் யாதவுடன் சந்திப்பு!: கட்சி உடையும் சூழலால் மாயாவதி அதிர்ச்சி..!!

உத்திரப்பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கு 9 மாதங்களே இருக்கும் நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி உடையும் சூழல் உருவாகியிருப்பது அக்கட்சியின் தலைவர் மாயாவதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏக்கள் 6 பேர் சமாஜ் வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்து பேசி இருப்பது பல்வேறு யூகங்களை கிளப்பி உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியில் தனி அணியாக செயல்பட இருப்பதாக அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ஒருவரான அஸ்லம் ரெய்னி கூறியிருக்கிறார்....
இந்தியாசெய்திகள்

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவராக பாஜக எம்.எல்.ஏ. செல்வம் பதவியேற்பு

புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவராக பாஜக பொதுச் செயலாளர் ஆர்.செல்வம் பதவி ஏற்றுக்கொண்டார். புதுவை சட்டப்பேரவை தலைவர் தேர்தல் ஜூன் 12 -ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்றைய தினமே வேட்புமனு தாக்கலும் தொடங்கியது. என்ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணியில், புதுச்சேரி மணவெளி தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏ ஆர்.செல்வம் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனை அடுத்து செல்வம் 14-ஆம் தேதி தனது வேட்புமனுவை சட்டப்பேரவை செயலர் முனிசாமியிடம் தாக்கல் செய்தார். முதல்வர்...
இந்தியாசெய்திகள்

இந்திய எல்லையை மூடிய வங்கதேசம். ஜூன் 30 வரை நீட்டிப்பு.!!!

இந்திய எல்லையில் கொரோனா தீவிரமடைந்து வருவதால் எல்லைகளை மூடும் உத்தரவை வங்கதேசம் ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தோற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வந்ததால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பல மாநிலங்களின் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வந்த காரணத்தினால் சில தளர்வுகளை அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் அறிவித்து வருகின்றன. இருப்பினும் சில மாநிலங்களில் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்...
இந்தியாசெய்திகள்

ஆந்திரத்தில் அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை: இதுவரை 2,303 பேர் பாதிப்பு

ஆந்திரத்தில் இதுவரை 2,303 பேர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 157 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் அனில் குமார் சிங்கால் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆந்திரத்தில் 2,303 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 1,328 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 157 பேர் கருப்பு பூஞ்சையால் இறந்துள்ளனர். மாநிலம் முழுவதும் ஆம்போடெரிசின் ஊசி மற்றும் போசகோனசோல் மாத்திரைகள்...
இந்தியாசெய்திகள்

புதுச்சேரி சபாநாயகராக பாஜக செல்வம் தேர்வு…!

புதுச்சேரி சபாநாயகராக பாஜகவை சேர்ந்த செல்வம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணியின் முதல்வராக கடந்த 7-ம் தேதி ரங்கசாமி பதவியேற்றார். பின்னர்,என்ஆர்.காங்கிரஸ் -பாஜக இடையே சபாநாயகர் ஒதுக்கீடு மற்றும் அமைச்சர் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் கடந்த ஒரு மாதமாக இழுபறி நீடித்தது.இதனையடுத்து, பாஜகவுக்கு சபாநாயகர் மற்றும் 2 அமைச்சர்...
1 67 68 69 70 71 82
Page 69 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!