இந்தியா

இந்தியாசெய்திகள்

கனமழை வெள்ளம் எதிரொலி: ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் 6000 பயணிகள் தவிப்பு!

கடந்த சில நாட்களாக ஒரு சில மாநிலங்களில் வரலாறு காணாத கனமழை பெய்து வருவதால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து ரயில்கள் ஆங்காங்கே நின்று சுமார் 6 ஆயிரம் பயணிகள் தவித்துக்கொண்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, தெலுங்கானா மாநிலம் மற்றும் கோவா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு...
இந்தியாசெய்திகள்

பாஜக தலைமைக்கு எதிராக யாரும் போராட வேண்டாம்!: ஆதரவாளர்களுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா சூசகம்..!!

பாரதிய ஜனதா கட்சி தலைமைக்கு எதிராக யாரும் போராட வேண்டாம் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா சூசகமாக கூறியிருப்பதால் அம்மாநில அரசியலில் பரபரப்பு அதிகரித்துள்ளது. கர்நாடக பாஜக-வில் நிலவி வரும் உட்கட்சி பிரச்சனையால் முதலமைச்சர் எடியூரப்பா விரைவில் பதவி விலகுவார் என்று தகவல் வெளியானது. லிங்காயத்து சமூக தலைவரான எடியூரப்பாவை பதவியில் இருந்து நீக்கினால் கர்நாடகத்தில் பாரதிய ஜனதா கட்சி கடும் பின்னடைவை சந்திக்கும் என்று அந்த சமுதாய மடாதிபதிகள்...
இந்தியாசெய்திகள்

இரண்டாவது நாளாக ராஜஸ்தான் மாநிலம் பிகானிரியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 4.8-ஆக பதிவு

ராஜஸ்தான் மாநிலம் பிகானிரியில் கடந்த இரண்டு நாட்களில் இரண்டாவது முறையாக இன்று காலை 7.42 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 4.8-ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் தொடர்பான பாதிப்புகள் குறித்து உறுதியான தகவல் ஏதுவும் வெளியாகவில்லை, கடந்த சில வாரங்களாக வடமாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ராஜஸ்தான் மாநிலம் பிகானிரியில் நேற்று முன்தினம் அதிகாலை 5.24 மணிக்கு திடீரென...
இந்தியாசெய்திகள்

கர்நாடகாவில் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பில் பெகாசஸ்..? – காங்கிரஸ் மூத்த தலைவர் குற்றச்சாட்டு!

இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனத்தின் பெகாசஸ் சாஃப்ட்வேர் மூலம் இந்திய அரசியல் தலைமைகள், பத்திரிகையாளர்கள் ஆகியோரது செல்ஃபோன் உரையாடல்கள் கண்காணிக்கப்பட்டதாக அண்மையில் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்தியா மட்டுமில்லாது பல்வேறு நாட்டு தலைவர்களின் உரையாடல்களும் இவ்வாறு கண்காணிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. அதில் இந்தியாவில் மட்டும் 300 பேர் உளவு பார்க்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியது. உளவு பார்க்கப்பட்டவர்கள் பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அரசியல் ஆலோசகர் பிரசாந்த்...
இந்தியாசெய்திகள்

பயங்கரவாத அச்சுறுத்தல்! செங்கோட்டைக்குள் பொதுமக்கள் நுழையத் தடை!!

பயங்கரவாத அச்சுறுத்தலை அடுத்து டெல்லி செங்கோட்டையில் இன்று முதல் வரும் 15ஆம் தேதி வரை பொதுமக்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக டெல்லி செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பு டெல்லியில் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை எச்சரித்துள்ளது. குறிப்பாக ஜம்மு...
இந்தியாசெய்திகள்

‘நாட்டின் வளர்ச்சியை பாஜக தான் தடுத்துள்ளது’: மல்லிகாா்ஜுன காா்கே

நாட்டின் வளர்சியை யாரும் தடுக்கவில்லை, பாஜக தான் தடுத்துள்ளது என காங்கிரஸ் மாநிலங்களவைத் தலைவர் மல்லிகாா்ஜுன காா்கே செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். பெகாசஸ் விவகாரம் குறித்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அறிக்கைக்கு பதிலளித்த மல்லிகாா்ஜுன காா்கே செய்தியாளர்களிடம் பேசியதாவது, பெகாசஸ் பிரச்சினை குறித்த கேள்வியை நாங்கள் நாடாளுமன்றத்தில் எழுப்புவோம். நாட்டின் வளர்ச்சியை யாரும் தடுக்கவில்லை, பாஜக தான் அதைத் தடுத்துள்ளனர். செஸ் விதித்தல், எரிபொருள் விலையை உயர்த்துவது, தேவையில்லாத திட்டங்களுக்கு...
இந்தியாசெய்திகள்

செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்ட புகார் ஆதாரமற்றது: மத்திய அமைச்சர் விளக்கம்

முக்கிய பிரமுகர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் ஆதாரமற்றது என மக்களவையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார். இஸ்ரேல் நாட்டு செயலியை பயன்படுத்தி ஊடகவியலாளர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் செல்போன்களை மத்திய அரசு ஒட்டுக்கேட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து மக்களவையில் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்தார். மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, மத்திய அரசின் மீது இந்த...
இந்தியாசெய்திகள்

‘காவிமயமாக்கப்பட்டு வருகிறது கல்வி’: மேற்குவங்க கல்வி அமைச்சர் குற்றச்சாட்டு

பாஜக ஆளும் மாநிலங்களில் கல்வி காவிமயமாக்கப்பட்டு வருவதாக மேற்கு வங்க கல்வி அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் இருந்து ரவீந்திரநாத் தாகூர் குறித்த பாடப்பகுதி நீக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மேற்குவங்க கல்வியமைச்சர் பரத்யா பாசு, பாஜக ஆளும் மாநிலங்களில் மதச்சார்பின்மை குறித்த பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார். மேலும், "பாஜக கல்வியில் காவியை புகுத்த திட்டமிட்டு செயல்பட்டு...
இந்தியாசெய்திகள்

உச்சத்தில் உட்கட்சி பூசல்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் ஆகிறார் சித்து?: முதல்வர் அம்ரீந்தர் சிங் சோனியா காந்திக்கு அதிருப்தி கடிதம்

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நவஜீத் சித்து நியமிக்கப்படுவதாக தகவல் வெளியான நிலையில், அம்மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் வெடித்துள்ளது.பாஜகவில் இருந்து கடந்த 2017ம் ஆண்டு காங்கிரசில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள்...
இந்தியாசெய்திகள்

நாளை முதல் சபரிமலை கோயில் நடைதிறப்பு..!

கொரோனா பொதுமுடக்கத்தால் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டு இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, மாதாந்திர பூஜைகளுக்காக இன்று மாலை திறக்கப்படுகிறது. இதுகுறித்து, சபரிமலை ஐயப்பன் கோயிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் தெரிவித்துள்ளதாவது; 'கேரளாவில் கொரோனா பெருந்தொற்று பரவல் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், ஆடி மாதப் பிறப்பையொட்டி இன்று (16ம் தேதி) மாலை சன்னிதானம் நடை...
1 62 63 64 65 66 82
Page 64 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!