இந்தியா

இந்தியாசெய்திகள்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியாது – நிர்மலா சீதாராமன்

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை இப்போதைக்குக் குறைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) ஆட்சியின்போது வெளியிடப்பட்ட எண்ணெய் கடன் பத்திரங்களுக்கு வட்டி வழங்க வேண்டியுள்ளது. இது அரசுக்கு பெரும் நிதிச் சுமையாகும். இந்நிலையில், எரிபொருள் மீதான உற்பத்தி வரியைக் குறைப்பது சாத்தியமில்லாதது என்று அவர் குறிப்பிட்டார். இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள்...
இந்தியாசெய்திகள்

ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் முன்பாக டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்

டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் தமிழகத்தின் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தினரும் கலந்துகொண்டனர். இப்பிரச்சினையில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டி நேற்று அவர்கள் டெல்லி ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தினர். மத்திய அரசின் முக்கிய மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு மாநிலங்களிலிருந்து விவசாய சங்கத்தினர் வந்து கலந்து கொண்டு ஆதரவளித்து வருகின்றனர். இந்தவகையில், கடந்த...
இந்தியாசெய்திகள்

விஜய் மல்லையாவுக்கு சொந்தமான மும்பையில் உள்ள கிங்பிஷர் பங்களா ரூ.52 கோடிக்கு ஏலத்தில் விற்பனை

விஜய் மல்லையாவின் கிங்பிஷர்நிறுவனத்துக்குச் சொந்தமான பங்களா ரூ.52.25 கோடிக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து 8 முறை ஏல விற்பனை தோல்வி அடைந்த நிலையில் 9-வது ஏலத்தில் மூன்றில் ஒரு பங்கு விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்திய வங்கிகளில் ரூ.9,000 கோடி அளவுக்கு கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு, இங்கிலாந்து தப்பிய தொழிலதிபர் விஜய் மல்லையாவிடமிருந்து கடனை மீட்க அவரது சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவ்வாறு கைப்பற்றப்பட்ட மும்பை விமான...
இந்தியாசெய்திகள்

எத்தகைய சவாலையும் எதிர்கொள்ள ராணுவம் தயார்: முப்படை தளபதி பிபின் ராவத் தகவல்

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முப்படை தளபதி பிபின் ராவத்பேசியதாவது: நமக்கு பிரதமர் மோடி சிலவழிகாட்டுதல்களை வழங்கிஉள்ளார். நாட்டின் பொருளாதாரம் மீது நாம் கவனம் செலுத்துவதுடன் மனிதவள மேம்பாடுகுறித்து சிந்திக்க வேண்டும், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிக்க வேண்டும்.பாதுகாப்புத் துறையில் சீர்திருத்தங்களை நோக்கி முன்னேற வேண்டும். ஆயுதப் படைகளை நவீனப்படுத்த பிரதமர் மோடிஉத்தரவிட்டுள்ளார். அவற்றின் போர்த்திறனை மேலும் அதிகரிப்பது மிகவும் அவசியம். காஷ்மீரில்...
இந்தியாசெய்திகள்

மேகதாதுவில் அணையை கட்டியே தீருவோம் – பசவராஜ் பொம்மை சூளுரை

மக்களின் நலனுக்காக ஆட்சி நடத்துவதுதான் பாஜக-வின் நோக்கம் என்றும், தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தாலும் மேகதாதுவில் புதிய அணையைக் கட்டியே தீருவோம் எனவும் சுதந்திர தின விழா உரையில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறினார். பெங்களூரு மாநகராட்சி சார்பில் சுதந்திர தின விழா கப்பன் பார்க் ரோட்டில் உள்ள மானேக்‌ஷா அணிவகுப்பு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. காலை 9 மணிக்கு முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தேசிய கொடி ஏற்றி மரியாதை...
இந்தியாசெய்திகள்

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு.. நாடு முழுவதும் தடை.. மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் தயாரிப்பு, பயன்பாடு ஆகியவற்றுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. பிளாஸ்டிக் பயன்பாடு காரணமாக சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் இறுதியாக கடலை அடைந்து நீர்வாழ் உயிரினங்களின் வாழ்வுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், இந்தியாவில் 2022ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தத்தக்க பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின்...
இந்தியாசெய்திகள்

ஹெலிகாப்டர் தயாரித்து இயக்கிய இளைஞர் இறக்கை வெட்டி உயிரிழப்பு

மகாராஷ்டிர மாநிலம், யவத்மால் மாவட்டம் புல்சவாங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷேக் இஸ்மாயில் ஷேக் இப்ராஹிம் (24). 8-ம் வகுப்புடன் பள்ளி செல்வதை நிறுத்தியுள்ளார், தனது மூத்த சகோதரரின் காஸ் வெல்டிங் கடையில் வேலை செய்து வந்தார். ஸ்டீல் மற்றும் அலுமினியம் தகடுகளைக் கொண்டு அலமாரி, கூலர்கள் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்க கற்றுக் கொண்டார். இதுகுறித்து அவரது நண்பர் சச்சின் உபாலே கூறும்போது, '3 இடியட்ஸ் திரைப்படத்தில் வரும் ராஞ்ச்சோ கதாபாத்திரத்தால்...
இந்தியாசெய்திகள்

பெங்களூருவில் 10 நாட்களில் 500 குழந்தைகளுக்கு கரோனா

கடந்த ஒரு வாரமாக பெங்களூருவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதில் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளே அதிகம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கரோனா 3-வது அலை தொடங்கிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவியுள்ளது. இந்நிலையில், சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதியில் இருந்து 10-ம் தேதிக்குள் பெங்களூருவில் 18 வயதுக்கும் குறைவான 499 குழந்தைகளுக்கு கரோனா வைரஸ் தொற்று...
இந்தியாசெய்திகள்

உ.பி.வெள்ளத்தில் மூழ்கிய 604 கிராமங்கள்: மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ராணுவம்

உ.பி.யில் இந்த ஆண்டு மிக அதிக அளவில் மழை பெய்து வருகிறது. கங்கை, யமுனை ஆகிய இரு நதிகளும் பாயும் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் வழக்கத்தை விட 12 மடங்கு மழை பெய்துள்ளது. உ.பி. முழுவதிலும் 154 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. வறட்சிப் பகுதியான புந்தேல்கண்டின் ஜலோன், பாந்தா, ஹமீர்பூர் ஆகிய மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய உ.பி.யின் எட்டவா மாவட்டத்தில் மிக அதிக...
இந்தியாசெய்திகள்

ஏடிஎம் மெஷின்களில் பணம் இல்லையா… வங்கிகளுக்கு அபராதம்.. ரிசர்வ் வங்கி அதிரடி..!!

வங்கிகளில் காத்திராமல் மக்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்தவகையில் கடந்த ஜூன் இறுதி நிலவரப்படி நாடு முழுவதும் 2,13,766 ஏடிஎம் மையங்கள் உள்ளன. ஆனால் இந்த மையங்களிலும் சில நேரம் பணம் இல்லாததால் மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இந்த சிரமங்களை களையும் வகையில், ஏடிஎம் மையங்களில் எப்போதும் பணம் இருக்கும் வகையில் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து உள்ளது. அதன்படி...
1 57 58 59 60 61 82
Page 59 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!