இந்தியா

இந்தியா

நீட் தேர்வை தள்ளி வைக்க முடியாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீட் நுழைவுத் தேர்வை தள்ளி வைக்க கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. எனினும் பொதுத்தேர்வை எழுத விருப்பமுள்ள மாணவர்கள், தனித்தேர்வர்களுக்காக கடந்த 25-ம் தேதி தேர்வு தொடங்கியது. வரும் 15-ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. இதனிடையே மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 12-ம் தேதி நடைபெறும் என்று...
இந்தியா

மேற்குவங்கத்தில் நாளை முதல் தேர்தல் பிரசாரத்தை துவங்கும் மம்தா பானர்ஜி..

மேற்கு வங்காள இடைத்தேர்தலில் போட்டியிடும் மம்தா பானர்ஜி நாளை முதல் பிரசாரத்தை துவங்க உள்ளார். மேற்கு வங்காள மாநிலத்தில் பவானிபூர், ஜாங்கிபூர், சாம்செர்காஞ்ச் ஆகிய 3 தொகுதிகளுக்கு வரும் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. கடந்த மே மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த மம்தா பானர்ஜி, தற்போது பபானிப்பூரில் போட்டியிடுகிறார். இந்தத்...
இந்தியா

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆளுநர் பன்வாரிலால் சந்திப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று சந்தித்துப் பேசினார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பஞ்சாப் மாநிலஆளுநர் பொறுப்பும், சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமான சண்டிகரின் நிர்வாகப் பொறுப்பும் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தலைநகர் டெல்லி சென்றுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த...
இந்தியா

அமெரிக்கா செல்ல பிரதமர் மோடி திட்டம்! வெளியானது உத்தேச தேதி!!

இந்த மாத இறுதியில் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி செல்ல உள்ளார். பிரதமரின் இந்த பயணம் இரண்டு நாட்கள் கொண்டதாக இருக்கும் என்றும், தேதிகள் இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், செப்டம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பிரதமர் அமெரிக்க செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவர் வாஷிங்டன் மற்றும்...
இந்தியா

பிராமணர்கள் குறித்து சர்ச்சை கருத்து- சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலின் 86 வயது தந்தை மீது எப்ஐஆர் பதிவு

பிராமணர்கள் குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்ட, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலின் தந்தை மீது போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். அதற்கு, ''சட்டம் அனைவருக்கும் மேலானது'' என்று முதல்வர் பாகல் கூறியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. முதல்வராக பூபேஷ் பாகல் பதவி வகிக்கிறார். இவரது தந்தை 86 வயதான நந்தகுமார் பாகல், சமீபத்தில் உத்தர பிரதேச மாநிலம் சென்றிருந்தார். அங்கு நடந்த கிராம மக்கள் கூட்டத்தில்...
இந்தியா

உலக தலைவர்களில் பிரதமர் மோடியே மிகப் பிரபலம்..! ஆய்வில் வெளியான தகவல்

உலக நாடுகளின் தலைவர்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மிகவும் பிரபலமான தலைவராக தேர்வாகியுள்ளார். உலகெங்கிலும் உள்ள தலைவர்களின் புகழ் குறித்து தி மார்னிங் கன்சல்ட் நடத்திய ஆய்வில் உலகின் 13 உலகத் தலைவர்கள் சேர்க்கப்பட்டனர். ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், இந்தியா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, தென்கொரியா, ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் அரசியல் தலைவர்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்தனர். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஜெர்மன்...
இந்தியா

உத்திரபிரதேசம்: டெங்கு காய்ச்சலுக்கு 30 குழந்தைகள் உட்பட 50 பேர் உயிரிழப்பு

உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 30 குழந்தைகள் உட்பட 50 பேர் உயிரிழந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இங்குள்ள அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மருத்துவமனையில் உள்ள 400 படுக்கைகளும் நிரம்பிவிட்டதால், சமையல் கூடம், மருந்து சேமிப்பு கூடங்கள் என கிடைத்த இடங்களில் படுக்கைகளை வைத்து சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்....
இந்தியா

ஜாதிவாரி கணக்கெடுப்பு: கமிட்டி அமைத்தது காங்கிரஸ்

ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான விபரங்களை ஆய்வு செய்ய, ஏழு உறுப்பினர்கள் அடங்கிய கமிட்டியை காங்கிரஸ் தலைவர் சோனியா அமைத்துள்ளார். இதில், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு இடம் அளிக்கப்படவில்லை. ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்படி, நாடு முழுதும் பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான விபரங்களை ஆய்வு செய்ய, காங்கிரசில் ஏழு உறுப்பினர்கள் அடங்கிய கமிட்டி ஒன்றை அந்த கட்சி தலைவர் சோனியா அமைத்துஉள்ளார்....
இந்தியா

நாடு முழுவதும் 68 உயர் நீதிமன்ற நீதிபதிகள் தேர்வு – கொலிஜியம் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 4 வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்க, உச்சநீதிமன்ற கொலிஜியம் குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. சுந்தரம் ஸ்ரீமதி, டி.பரத சக்ரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது ஷஃபிக் ஆகியோர் நீதிபதிகளாகின்றனர். நாடு முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களுக்கு 68 நீதிபதிகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலிஜியம் குழு, கடந்த ஒன்றாம் தேதி கூடி உயர்நீதிமன்ற நீதிபதிகள் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தியது. இதில் 112 பேரின்...
இந்தியா

5 முதல் 18 வயதிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி பரிசோதனை : ‘பயாலஜிக்கல்-இ’ நிறுவனத்திற்கு அனுமதி

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த 'பயாலஜிக்கல்-இ' நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை, 5 முதல் 18 வயதிலான சிறுவர்களுக்கு செலுத்தி (மனிதர்களுக்கு செலுத்தி) பரிசோதிக்க இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது. பயாலஜிக்கல்-இ மருந்து நிறுவனம், கொரோனாவுக்கு எதிராக ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசியை இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது. இந்த...
1 53 54 55 56 57 82
Page 55 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!