இந்தியா

இந்தியா

கோவாவுக்கு தகுதியான தலைமை தேவை: ராகுல் காந்தி

'கோவாவுக்குத் தகுதியான தலைமை தேவை' என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளாா். அந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப் பேரவைத் தோதல் நடைபெறவுள்ள நிலையில், தோதல் களம் சூடுபிடித்துள்ளது. தெற்கு கோவாவில் ராகுல் காந்தி கடந்த சனிக்கிழமை தோதல் பிரசாரத்தை தொடங்கினாா். அப்போது மக்களுடன் கலந்துரையாடிய விடியோவை ராகுல் காந்தி தனது ட்விட்டா் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்டாா். அத்துடன், 'கோவாவுக்குத் தகுதியான தலைமை தேவை. கோவாவுக்கு கலாசார பாதுகாப்பும்,...
இந்தியா

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் நள்ளிரவில் கைது

சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில், மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அனில் தேஷ்முக் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். மகாராஷ்டிராவில் உள்துறை அமைச்சராக இருந்தவர், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அனில் தேஷ்முக். மும்பை ஓட்டல்கள், மதுபான விடுதி உரிமையாளர்களிடம் இருந்து மாதம்,100 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுத் தர இவர் நெருக்கடி கொடுத்ததாக, மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்வீர் சிங் குற்றம்சாட்டி...
இந்தியா

கார் விபத்து: பிரபல மாடல்கள் பரிதாப பலி

கார் விபத்தில் பிரபல இளம் மாடல்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் பிரபல இளம் மாடல்கள் ஆன்சி கபீர் (26) மற்றும் அஞ்சனா சாஜன் (24). ஆன்சி கபீர் கடந்த 2019 ஆம் ஆண்டில் மிஸ் கேரளா பட்டத்தை வென்றவர். அந்த ஆண்டு அவரிடம் பட்டத்தை இழந்தவர் அஞ்சனா சாஜன் . இருவரும் தோழிகள். ஆன்சி கபீர் திருவனந்தபுரம் அருகிலுள்ள ஆற்றங்கல்லை சேர்ந்தவர். அஞ்சனா திருச்சூரை சேர்ந்தவர்....
இந்தியா

சபரிமலை பக்தர்கள் பம்பையில் நீராட தடை

'மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்கு சபரிமலைக்கு வரும் பக்தர்கள், பம்பை நதியில் நீராட அனுமதி இல்லை' என, தேவசம் போர்டு அறிவித்து உள்ளது.கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.இங்குள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், இந்த ஆண்டிற்கான மண்டல மற்றும் மகர விளக்கு சீசன் துவங்கவுள்ளது. இந்த பூஜைகளில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று...
இந்தியா

காஷ்மீரில் 21-வது நாளாக அடர்ந்த காட்டில் தீவிரவாதிகளை தேடும் பணி தொடர்கிறது: மூடப்பட்ட தேசிய நெடுஞ்சாலை திறப்பு

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம் சூரன்கோட் அருகே பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய தீவிரவாதிகளுடன் கடந்த அக்டோபர் 11-ம் தேதி என்கவுன்ட்டர் நடைபெற்றது. அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 பாதுகாப்புப் படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் சூரன்கோட் அருகே உள்ள அடர்ந்த வனப் பகுதிக்கும் ரஜவுரி மாவட்டம் தானமண்டி பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிக்கும் தப்பியோடினர். அந்தப் பகுதிகளில் தீவிரவாதி களை...
இந்தியா

உ.பி.யில் திடீர் பரபரப்பு: பாஜக, மாயாவதி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் அகிலேஷ் கட்சியில் ஐக்கியம்!

உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்ட 6 எம்.எல்.ஏக்கள் மற்றும் பாஜக எம்.எல்.ஏ. ராகேஷ் ரத்தோர் என மொத்தம் 7 எம்.எல்.ஏக்கள் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச சட்டசபைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் ஆளும் பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் படுதீவிரம் காட்டி வருகின்றன. மத்திய அமைச்சர்கள் படையையே பாஜக உ.பி....
இந்தியா

500 கோடி கொரோனா தடுப்பூசிகளை இந்தியா 2022 இறுதிக்குள் உற்பத்தி செய்யும்: ஜி20 மாநாட்டில் மோடி

2022-ம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியா 500 கோடி கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் என்று ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உறுதியளித்தார். இத்தாலி தலைநகர் ரோம் நகரில் ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். ஜி20 கூட்டமைப்பு இத்தாலி தலைமை வகிப்பதால் ரோமில் இம்மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று தமது கருத்துகளை முன்வைத்தார். இது...
இந்தியா

விடுதலையாகிறார் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் – ஜாமின் வழங்கியது மும்பை ஹைகோர்ட்!

அக்டோபர் 2ஆம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் "ரேவ் விருந்து" நடப்பதாக மும்பை சரக போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் அதிகாரிகள் மப்டி உடையில் ரகசியமாக கப்பலில் ரோந்து சென்றனர். அப்போது, கப்பலில் ஹெராயின் உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு இருந்தவர்களில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானும் ஒருவர் என தெரியவர, அவருடன் சேர்த்து...
இந்தியா

அரசு மரியாதையுடன் புனித் ராஜ்குமார் உடல் நல்லடக்கம் – முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு

மறைந்த கன்னட திரை உலகின் பவர்ஸ்டார் புனித் ராஜ்குமார் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்திருக்கிறார். கன்னடத் திரையுலகின் மிகப் புகழ் பெற்ற நடிகரான ராஜ்குமாரின் ஐந்தாவது/கடைசி மகன் புனித் ராஜ்குமார்(46). இவர் 29 படங்களில் நடித்து கன்னட திரையுலகில் பவர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்தவர். நடிகர் மட்டுமல்லாது பாடகர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என்று பன்முகம் காட்டியவர்....
இந்தியா

பாக்., வெற்றியை கொண்டாடினால் உ.பி.,யில் தேச துரோக வழக்கு பாயும்

''இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் பெற்ற வெற்றியை கொண்டாடினால், தேசத் துரோக வழக்கு பாயும்,'' என, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார்.மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் 'டி - 20' உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் நடந்த போட்டியில், இந்தியாவை பாகிஸ்தான் வென்றது. பெரும் சர்ச்சைஇந்த வெற்றியை, ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசம் காஷ்மீரை சேர்ந்த சிலர்...
1 42 43 44 45 46 82
Page 44 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!