இந்தியா

இந்தியா

இடைத்தேர்தல்களில் தோல்வி… 5 மாநில சட்டசபை தேர்தல்கள்- டெல்லியில் இன்று கூடுகிறது பாஜக செயற்குழு

சட்டசபை இடைத்தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) படுதோல்வி அடைந்த நிலையில் இன்று டெல்லியில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் இடைத்தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வி, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல்களை எதிர்கொள்வதற்கான வியூகம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மாநில சட்டசபைகளுக்கு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டின்...
இந்தியா

12 அடி உயர ஆதிசங்கரர் சிலையை திறந்து தியானம் கேதார்புரியில் ரூ.400 கோடி திட்ட பணிகளுக்கு அடிக்கல்: பிரதமர் மோடி நாட்டினார்

உத்தரகாண்டின் கேதார்நாத்தில் மழை வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட ஆதி குரு சங்கராச்சாரியார் சிலையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். மேலும், கேதார்புரியில் ரூ.400 செலவிலான திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். உத்தரகாண்டில் கடந்த 2013ம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் கேதார்நாத் கோயில் சேதமடைந்தது. மேலும், கோயில் அருகில் இருந்த ஆதி குரு சங்கராசாரியார் சமாதி, சிலையும் அடித்து செல்லப்பட்டது. இந்த சேதங்களை சீரமைப்பதற்கான பணி, கடந்த 2019ம் ஆண்டு...
இந்தியா

இலவச அரிசி, கோதுமை வழங்கும் திட்டம் நிறுத்தம்- மத்திய அரசு அளித்த விளக்கம் !!

கொரோனா பரவலைத் தொடர்ந்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் பெரும்பாலான மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கினர். இதனால் ஏழை- எளிய மக்கள் பாதிக்கப்படும் நிலை உருவானது. எனவே ஏழைகளின் உணவு தேவையை பூர்த்தி செய்ய கடந்த ஆண்டு மார்ச் மாதம், பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இத்திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச...
இந்தியா

அக்டோபரில் 43 சதவீதம் பேருக்கு புதிதாக வேலை

கடந்த அக்டோபரில், பணியமர்த்தும் நடவடிக்கை 43 சதவீதம் அதிகரித்துள்ளது என, 'நாக்குரி ஜாப்ஸ்பீக்' நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.இது குறித்து, அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான தேவை அதிகரித்துள்ளதை அடுத்து, கடந்த அக்டோபரில் பணியமர்த்தல் நடவடிக்கை, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, 43 சதவீதம் அதிகரித்துள்ளது. தொழில்நுட்பத்துறை நன்கு வளர்ச்சி அடைந்திருப்பதை அடுத்து, தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபரில், முந்தைய ஆண்டு அக்டோபருடன் ஒப்பிடும்போது, இத்துறையானது 85 சதவீதம்...
இந்தியா

ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி

தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி, ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தின் நவ்ஷேராவில் உள்ள ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார். முதலில் பணியின் போது உயிரிழந்த ராணுவ வீரர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். நாட்டு மக்கள் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க ராணுவ வீரர்களே காரணம் என, பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். பாரத மாதாவின் பாதுகாப்பு அரணாக...
இந்தியா

நீர்மூழ்கி கப்பல் ரகசியங்களை வெளியிட்ட கடற்படை அதிகாரி உட்பட 6 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

கடற்படைக்காக நவீன நீர்மூழ்கி கப்பல் ஒன்றை வடிவமைக்கும் திட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ரகசிய ஆவணங்களை கோடிக்கணக்கில் பணத்தை பெற்றுக் கொண்டு தனியார்நிறுவனங்களுக்கு விற்கப்பட்ட தாக கடந்த ஆகஸ்ட் மாதம் புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ மேற்கொண்ட விசாரணையில், கடற்படையில் பணிபுரியும் அதிகாரிகள், ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி, மும்பை, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் சிபிஐ...
இந்தியா

குறைகிறது பெட்ரோல், டீசல் விலை: கலால் வரியை குறைத்தது மத்திய அரசு

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 10 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 1.65 டாலர் குறைந்து தற்போது 83.07 டாலராக உள்ளது. தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.106.66 காசுகளுக்கும், டீசல் விலை ரூ.102.59 காசுகளுக்கும் விற்பனையாகிறது. பெட்ரோல், டீசல் மீது மாநிலங்கள்...
இந்தியா

ஐடி பார்க்கில் பீர், ஒயின் பார்: கேரள முதல்வர் அறிவிப்பு

கேரள சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது முதல்வர் பினராய் விஜயன் கூறியதாவது: கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சி உள்ளிட்ட இடங்களில் ஐடி பார்க்குகள் உள்ளன. இங்கு புதியதாக நிறுவனம் தொடங்க வருபவர்கள், நிறுவனங்களில் பீர், ஒயின் பார்கள் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு அனுமதி இல்லாததால் பல நிறுவனங்கள் திரும்பி சென்றுவிட்டன. இதனால், ஐடி பார்க்குகளில் பீர், ஒயின் பார்கள் தொடங்க கடந்த இரு வருடங்களுக்கு முன்...
இந்தியா

இடைத் தேர்தல் முடிவுகள்: மே.வ-வில் டி.எம்.சி ஸ்வீப்; இமாச்சல் பிரதேசம், ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றி!

29 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 3 மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில், மே.வங்கத்தில் 4 சட்டமன்றத் தொகுதிகளையும் திரிணாமுல் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. இதற்கு முன்பு பாஜக வசம் இருந்த தின்ஹாடா தொகுதியில் உதயன் குஹா 1 லட்சத்து 63 ஆயிரத்து 5 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இமாச்சல் மற்றும் ராஜஸ்தான் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மாண்டி...
இந்தியா

‘உள்நாட்டில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்படும் ரூ.8,000 கோடி ராணுவ தளவாடங்களை வாங்க ஒப்புதல் வழங்கியது பாதுகாப்பு கவுன்சில்

முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்படும் ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவத் தளவாடங்களை வாங்க இந்திய பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (டிஏசி) ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்திய ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள், போர் விமானங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க மத்திய அரசு முனைப்புக் காட்டி வருகிறது. அதுமட்டுமின்றி, அவ்வாறு தயாரிக்கப்படும் தளவாடங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையிலும் அரசு ஈடுபட்டுள்ளது. மத்திய அரசின் 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் ஒரு...
1 41 42 43 44 45 82
Page 43 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!