இந்தியா

இந்தியா

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவுக்கு 24-ல் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்க முடிவு

வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவுக்கு வரும் 24-ம் தேதிநடக்கும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த ஓராண்டாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், அந்த சட்டங்களை வாபஸ்பெறுவதாக பிரதமர் மோடி கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார். நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத்தொடர் வரும் 29-ம் தேதிதொடங்குகிறது. அதற்கு முன்னதாக வரும் 24-ம் தேதி பிரதமர்...
இந்தியா

திருப்பதியில் கனமழையால் ரூ.4 கோடிக்கு மேல் சேதம்

திருப்பதியில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டி தீர்த்த கனமழையால் 4 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்படும் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது....
இந்தியா

இந்தியாவின் தூய்மையான நகரமாக இந்தூர் தேர்வு

இந்தியாவில் ஆண்டுதோறும் தூய்மையான மாநிலங்கள் மற்றும் தூய்மையான நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில் 2021-ம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த தூய்மையான மாநிலம், நகரத்தை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது. மத்திய பிரதேச தலைநகரான இந்தூர் நகரம் 'இந்தியாவின் சிறந்த நகரம்' என்ற பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்தூர் தொடர்ந்து 5-வது முறையாக சிறந்த தூய்மையான நகரமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது....
இந்தியா

ராஜஸ்தான் அமைச்சரவை மாற்றம்… 12 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு.. பைலட் ஆதரவாளர்களுக்கு பதவி

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் அமைச்சரவையில் 15 அமைச்சர்கள் ராஜினாமா செய்துவிட்ட நிலையில் புதியதாக 12 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக இன்று பதவியேற்க உள்ளனர். பஞ்சாப் மாநிலத்திற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் ஆளும் மற்றொரு மாநிலமான ராஜஸ்தான் அமைச்சரவையில் பெரிய மாற்றம் செய்யப்படுகிறது. பைலட் ஆதரவாளர்களுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கவேண்டும் என கோரிக்கை வலுத்து வரும் நிலையில் இந்த மாற்றம் செய்யப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி...
இந்தியா

சபரிமலைக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் தடை- ஆட்சியர் அறிவிப்பு

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை மாதம் பிறந்த நிலையில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறந்தது. ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் கேரளாவில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் இடுக்கி, பம்பா அணைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பெரியாறு,...
இந்தியா

கன மழை மற்றும் வெள்ளப் பெருக்கு: ஆந்திராவில் 17 பேர் உயிரிழப்பு; 30 பேர் காணவில்லை

வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை சென்னை அருகே கரையை கடந்தது. இது ஆந்திராவில் நிலை கொண்ட தால், சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல ஏரிகள் உடைந்து பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. சித்தூர் மாவட்டத்தில் நீவா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சித்தூரில் ஏராளமான கால்நடைகள் மக்களின் கண் முன்பே நீரில் அடித்துச் செல்லப்...
இந்தியா

லடாக்கில் புதுப்பிக்கப்பட்ட போர் நினைவிடம்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்

கிழக்கு லடாக்கின் ரெசாங் லா பகுதியில் 1962 நவம்பர் 18-ல் சீனாவுக்கு எதிராக ஒரு பெரிய போர் நடந்தது. 18,000 அடி உயரத்தில் நடந்த இப்போரில் இந்திய ராணுவத்தின் மேஜர் ஷைத்தான் சிங் தலைமையிலான குமாவுன் படைப் பிரிவினர் துணிவுடன் போராடினர். சீன ராணுவத்துக்கு கடும் இழப்பை ஏற்படுத்தி வெற்றி பெற்றனர். உடல் முழுவதும் குண்டு காயங்களுடன் ஷைத்தான் சிங் வீரமரணம் அடைந்தார். மறைவுக்குப் பிறகு இவருக்கு நாட்டின் மிக...
இந்தியா

2027-க்குள் போர்க்கப்பல்கள் 170 ஆக உயரும்: இந்திய கடற்படை துணைத் தளபதி தகவல்

இந்திய கடற்படை துணைத் தளபதி சதீஷ் நாம்தேவ் கோர்மடே டெல்லியில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய கடற்படையில் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிகள் உட்பட130 கப்பல்கள் உள்ளன. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் வரும் 21-ம் தேதியும் கல்வாரி பிரிவைச் சேர்ந்த ஐஎன்எஸ் வேலா நீர்மூழ்கி வரும் 25-ம் தேதியும் கடற்படையில் இணைக்கப்பட உள்ளன. வரும் 2027-ம் ஆண்டுக்குள் இந்திய கடற்படையில் போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை 170 ஆக உயர்த்தஏற்கெனவே இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது....
இந்தியா

சிறந்த ஆளுமைக்கான விருது; ஹேமமாலினிக்கு அறிவிப்பு

இந்த ஆண்டிற்கான சிறந்த இந்திய திரைப்பட ஆளுமைக்கான விருது, நடிகை ஹேமமாலினி மற்றும் பாடலாசிரியர் பிரசூன் ஜோஷிக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.ஆண்டுதோறும் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில், இந்திய திரைத் துறையில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு, சிறந்த ஆளுமைக்கான விருது வழங்கப்படுவது வழக்கம். நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோருக்கு இந்த விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான சிறந்த ஆளுமைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது...
இந்தியா

லக்கிம்பூர் கெரி வழக்கை கண்காணிக்க நீதிபதி ராகேஷ் குமார் ஜெயின் நியமனம்

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில் கடந்த அக்டோபர் 3-ம் தேதி நடந்த கார் விபத்து மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் 4 விவசாயிகள், 3 பாஜக.வினர், பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உட்பட 13 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த...
1 38 39 40 41 42 82
Page 40 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!