இந்தியா

இந்தியா

டிசம்பர் 15-ம் தேதி தொடங்க இருந்த விமான போக்குவரத்து சேவை ஒத்திவைப்பு

கொரோனா தொற்று பரவலை அடுத்து, கடந்த ஆண்டு மார்ச் முதல் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்து சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. கோவிட் பற்றிய அனைத்து லேட்டஸ்ட் அப்டேட்களை இங்கே படியுங்கள் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்து வரவும், சரக்கு போக்குவரத்துக்கும் மட்டும் விமானங்கள் இயக்கப்பட்டன. கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து சில குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் சர்வதேச விமானங்களை இயக்க நிபந்தனைகளுடன் ஒன்றிய அரசு ஒப்பந்தம்...
இந்தியா

சஸ்பெண்ட் செய்யப்பட்ட 12 மாநிலங்களவை எம்.பி.க்கள்: நாடாளுமன்ற வளாகத்தில் இன்று முதல் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் ஆன 12 எம்.பி.க்கள் இன்று முதல் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். நாடாளுமன்றக் மழைக்கால கூட்டத் தொடரின்போது மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. மேஜையின் மீது ஏறி அவர்கள் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக ஆகஸ்ட் 11-ம் தேதி மாநிலங்களவையில் பேசிய அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாக மறுநாள் அவையில் கண்ணீர்...
இந்தியா

அட்மிரல் கரம்பீர் சிங் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்: கடற்படை புதிய தளபதி ஹரி குமார் பொறுப்பேற்பு

இந்திய கடற்படையின் புதிய தளபதியாக அட்மிரல் ஆர். ஹரி குமார் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். கடற்படை தளபதியாக இருந்த அட்மிரல் கரம்பீர் சிங் பதவிக்காலம் முடிவுறுவதை அடுத்து துணை அட்மிரல் ஹரிகுமார் புதிய தளபதியாக நியமனம் செய்யப்பட்டார். 41 வருடங்களாக கடற்படை சேவையில் இருந்த அட்மிரல் கரம்பீர் சிங் நேற்று பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து அவரிடமிருந்து புதிய பொறுப்பை ஹரி குமார் ஏற்றுக் கொண்டார். டெல்லியில் உள்ள தெற்கு...
இந்தியா

சபரிமலை கோயிலில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தேவசம் போர்டு கடிதம்

சபரிமலை கோயிலில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தேவசம் போர்டு கடிதம் எழுதியுள்ளது. சன்னிதானத்தில் உள்ள பக்தர்கள் அறை, பம்பை ஆறு உள்ளிட்டவைக்கு அனுமதி கோரி கடிதம் எழுதப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் உறுதி அளித்துள்ளார்.  ...
இந்தியா

இந்தியாவுக்கு மேலும் பெருமை – ட்விட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இந்தியரான பராக் அகர்வால் நியமனம்

பிரபல சமூக வலைதள நிறுவனமான டிவிட்டர் சி.இ.ஓ. பதவியிலிருந்து ஜாக் டோர்சி விலகினார். மற்றும் நிர்வாக தலைவராக இருந்த ஜாக் டோர்சி தான் விலக்குவதற்கான சரியான நேரம் இதுதான் என அறிவித்துள்ளார். இதனையடுத்து ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய அமெரிக்கரான இவர் இந்தியாவில் மும்பை ஐஐடியில் பயின்றவர் ஆவார்....
இந்தியா

‘கொரோனா நெகட்டிவ்’ சான்றிதழ்; இணையதள பதிவு கட்டாயம்

வெளிநாட்டு பயணியர் இந்தியா வரும் முன், 'கொரோனா நெகட்டிவ்' சான்றிதழை பதிவேற்றம் செய்வது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்றின் புதிய வகை 'ஒமைக்ரான்' வைரஸ், மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், தொற்று பாதிப்பை தீவிரமாக கண்காணிக்க, மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அத்துடன், வெளிநாட்டு பயணியர், கொரோனா நெகட்டிவ் சான்றிதழை பதிவேற்றம் செய்வது கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, விமான...
இந்தியா

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி அடுத்த மாதம் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். திமுக சார்பில் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா மற்றும் மதிமுக சார்பில் வைகோ ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம்...
இந்தியா

இந்தியா வரும் தென் ஆப்ரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட 11 நாட்டு பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிப்பு

தென் ஆப்ரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட 11 நாடுகளிலிருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கமே இன்னும் குறையாத நிலையில் தென் ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது. இந்த வைரசுஸுக்கு ஓமைக்ரான் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஓமைக்ரான் வைரஸ் பல்வேறு தென் ஆப்பிரிக்க நாடுகளிலும் பரவியுள்ளது. எனவே தென் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை...
இந்தியா

32 முறை உருமாறிய ஓமிக்ரான்.. தடுப்பூசிக்கு கட்டுப்படுவது சந்தேகம்தான்.. எய்ம்ஸ் இயக்குநர்

புதிய வேரியண்ட்டான ஓமிக்ரான் 30 க்கும் மேற்பட்ட முறை உருமாற்றம் அடைந்துள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் புதியதொரு வேரியண்ட் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு ஓமிக்ரான் என உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டியது. இந்த வேரியண்ட் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வேரியண்டை விட மோசமானது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இது 32 முறை உருமாற்றம் பெற்றுள்ளது. இதுதான் மக்களின் அச்சத்திற்கு காரணமாக உள்ளது....
இந்தியா

நாட்டிலேயே ஏழைகள் அதிகம் உள்ள மாநிலம் பீகார் – அடுத்தடுத்த இடங்களில் ஜார்கண்ட், உ.பி

நாட்டில் ஏழைகள் அதிகம் உள்ள மாநிலங்கள் வரிசையில், பீகார், ஜார்கண்ட், உத்தரப்பிரதேச மாநிலங்கள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. நிதி ஆயோக்கின் ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. சுகாதாரம், கல்வி, வாழ்க்கைத்தரம் ஆகியவற்றின் அடிப்படையில் 12 முக்கிய அம்சங்களைக்கொண்டு நாடு முழுவதும், நிதி ஆயோக் ஆய்வு நடத்தியது. இதன்படி, பீகாரில் 51.91 சதவிகிதம் பேர் ஏழைகள் என்று தெரியவந்துள்ளது. ஜார்கண்ட்டில் 42.16 சதவிகிதம் பேரும், உத்தரப்பிரதேசத்தில் 37.79 சதவிகிதம் பேரும்...
1 36 37 38 39 40 82
Page 38 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!