இந்தியா

இந்தியா

ஸ்ரீநகர் லால் சவுக் மணிக்கூண்டில் 30 ஆண்டுக்கு பின் தேசியக் கொடி

ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள வரலாற்று புகழ் வாய்ந்த மணிக்கூண்டில், 30 ஆண்டுகளுக்கு பின் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகர் லால் சவுக்கில் வரலாற்றுப் புகழ் வாய்ந்த மணிக்கூண்டு உள்ளது. பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக இந்தப் பகுதி எப்போதுமே பதற்றமானதாகவே இருந்தது. நாடு சுதந்திரம் அடைந்த பின், 1992ல் பா.ஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி இந்த மணிக்கூண்டில் தேசியக் கொடி...
இந்தியா

சுதந்திரப் போராட்டம் முதல் பல்லுயிர் பெருக்கம் வரை அணிவகுப்பில் இடம்பெற்ற ஊர்திகள்

நாட்டின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜபாதையில் நேற்று நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்ச்சியில் 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திகள் இடம்பெற்றன. இவை நடனங்கள், விளையாட்டுத் திறன், பல்லுயிர் பெருக்கம், சுதந்திரப் போராட்டம், மதம் சார்ந்த இடங்கள், வளர்ச்சி ஆகியற்றை சிறப்பிக்கும் வகையில் அமைந்திருந்தன. இவை தவிர மத்திய அரசின் பல்வேறு துறைகள் சார்பில் 9 ஊர்திகளும் ஆயுதப் படைகள் மற்றும் டிஆர்டிஓ (பாதுகாப்பு ஆராய்ச்சி...
இந்தியா

நாட்டின் 73வது குடியரசு தினம் இன்று கொண்டாட்டம்.. டெல்லியில் முப்படைகள் இன்று மாபெரும் அணிவகுப்பு

நாட்டின் 73வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லியில் ராணுவ மற்றும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்புகள் நடக்க உள்ளன. குடியரசுத் தினத்தை முன்னிட்டு நாடு முழுக்க பாதுகாப்பு உயர்த்தப்பட்டு உள்ளது. டெல்லியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்தியா 1947ல் சுதந்திரம் அடைந்த நிலையில் 1950ல் குடியரசாக அறிவிக்கப்பட்டு இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்தது. இந்த நிலையில் ஜனவரி 26ம் தேதி இந்தியாவில் குடியரசுத் தினம் கொண்டாடப்படுகிறது. குடியரசுத்...
இந்தியா

பத்ம விருதை புறக்கணித்த மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா

மத்திய அரசு அறிவித்த பத்ம விருதுகளை மேற்கு வங்காள முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா உள்பட 3 பேர் புறக்கணித்துள்ளனர். நாட்டின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு 2022ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது. மொத்தமாக 107 பத்ம ஸ்ரீ, 4 பத்ம விபூஷன் மற்றும் 17 பத்ம பூஷன் விருதுகள் என 128 பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கு அதிக...
இந்தியா

அவதூறு வழக்கில் மாஜி முதல்வர் அச்சுதானந்தனுக்கு ரூ. 10 லட்சம் அபராதம்

அவதூறு வழக்கில் கேரளா முன்னாள் அச்சுதானந்தனுக்கு ரூ. 10 லட்சம் அபாரதம் விதித்து தீர்ப்பளித்தது நீதிமன்றம். கேரளாவில், 'சோலார் பேனல்' எனப்படும், சூரிய ஒளி மின் தகடு அமைப்பதற்கான உரிமம் பெற்றுத் தருவதாக கூறி, பண மோசடி செய்ததாக, சரிதா நாயர் என்பவர் மீது வழக்கு தொடரப்பட்டது. கைது செய்யப்பட்ட சரிதா நாயர், அப்போதைய கேரள முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, உம்மன் சாண்டி உட்பட பல அமைச்சர்கள் மீதும்,...
இந்தியா

பஞ்சாப் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதி

பஞ்சாபில் 117 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 20-ம் நாள் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட்டுகிறது. இந்நிலையில், டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பஞ்சாப் லோக் காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் ஆகியோர் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்தனர். பாஜக 65 தொகுதிகளிலும், பஞ்சாப் லோக் காங்கிரஸ் 37 தொகுதிகளிலும்,...
இந்தியா

பஞ்சாப் மாநிலத்தை காப்பாற்ற பேரவை தேர்தலில் போட்டி: விவசாயிகள் அமைப்பு கருத்து

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்திய சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் ஒரு அங்கமாக இருந்த சுமார் 22 விவசாயிகள் சங்கங்கள், ஒன்றாக இணைந்து சம்யுக்த சமாஜ் மோர்ச்சா என்ற பெயரில் கடந்த மாதம் அரசியல் கட்சி தொடங்கின. இக்கட்சிக்கு பல்பீர் சிங் ராஜே வால் (80) என்பவர் தலைமை தாங்குகிறார். பஞ்சாபில் பிப்ரவரி 20-ம் தேதி நடைபெறும் தேர்தலில் சம்யுக்த சமாஜ் மோர்ச்சா போட்டியிடுகிறது. இதுகுறித்து பல்பீர் சிங் கூறியதாவது:...
இந்தியா

நேரம் மற்றும் இடப் பற்றாக்குறையால் குடியரசு தின விழாவில் 12 ஊர்திக்கு மட்டும் அனுமதி: பாதுகாப்புத் துறை தகவல்

நேரம் மற்றும் இடப்பற்றாகுறை காரணமாகவே குடியரசு தின விழா அணிவகுப்பில் 12 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதிவழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இந்தியக் குடியரசு தின விழாவை ஒட்டி டெல்லியில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இந்த கலை நிகழ்ச்சியின் போது ஒவ்வொரு மாநிலத்தின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விதமான அலங்கார ஊர்திகள் இடம்பெறும். இந்நிலையில், வரும் 26-ம் தேதி டெல்லியில் நடைபெறும் குடியரசு...
இந்தியா

கின்னஸ் உலக சாதனை படைத்த நபர் அகிலேஷ் கட்சியில் இணைந்தார்.. பாஜகவுக்கு நெருக்கடி

நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 10ஆம் தேதி முதல் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. உத்தர பிரதேசத்தில் ஆளும் பாஜகவுக்கு அகிலேஷ் யாதவ் தலைமையிலான கூட்டணி கடும் சவால் அளித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியும் களத்தில் உள்ளதால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. ஆனால் கடந்த தேர்தலைவிட தற்போது அகிலேஷ் யாதவின் கை ஓங்கியுள்ளது. அதாவது, தேர்தலுக்கு...
இந்தியா

ஜம்மு காஷ்மீரில் பதற்றம்.. 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை- ஒருவர் அதிரடி கைது

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டம் கில்பால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் ராணுவ வீரர்கள், உள்ளூர் போலீசார் குவிக்கப்பட்டனர். அங்கு தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டப்போது, தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனையடுத்து சுதாகரித்துக்கொண்ட இந்திய படையினரும் பதிலடி கொடுத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காஷ்மீர்...
1 26 27 28 29 30 82
Page 28 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!