இந்தியா

இந்தியா

இந்தியர்கள் நாடு திரும்பும் செலவை மத்திய அரசு ஏற்கிறது

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா விமானம் நேற்று முன்தினம் கீவ் நோக்கி சென்றது. ஆனால் ரஷ்ய படையெடுப்பை தொடர்ந்து உக்ரைன் தனது வான்வெளியை மூடியதால் அந்த விமானம் பாதி வழியில் திரும்ப நேரிட்டது. இதையடுத்து உக்ரைன் அண்டை நாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வரும் வழிகளை ஆராய்ந்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் கூறியது. இதுகுறித்து ஹங்கேரி, ஸ்லாவேகியா வெளியுறவு அமைச்சர்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் பேசினார்....
இந்தியா

இந்தியாவில் தொற்று குறைந்ததால் கரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தலாம்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை

''நாடு முழுவதும் கரோனா தொற்று குறைந்துள்ளதால், கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து பரிசீலனை செய்யலாம்'' என்று மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவில் கரோனா பரவலை தடுக்க அவ்வப்போது வழிகாட்டி நெறிமுறைகளை மத்தியஉள்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி வரும்மார்ச் மாதத்துக்கான வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை செயலர் அஜய் பல்லா அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு...
இந்தியா

ரஷ்யா-உக்ரைன் விவகாரம்- பாதுகாப்பு அமைச்சரவை குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை

ரஷ்யா-உக்ரைன் போர் பதற்றம் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்காக மத்திய பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மத்திய அமைச்சர்கள் பியுஷ் கோயல் மற்றும் ஹர்தீப் சிங் புரி உள்ளிட்டோர் அமைச்சரவைக்...
இந்தியா

கர்நாடக மாநிலம் முழுவதும் இந்துத்துவ அமைப்பினர் எஸ்டிபிஐ, பிஎப்ஐ-க்கு தடை கோரி போராட்டம்

கர்நாடகாவில் எஸ்டிபிஐ, பிஎப்ஐ அமைப்புகளுக்கு தடை விதிக்க கோரி இந்துத்துவ அமைப்பினர் போராட்டம் நடத்தினர். கர்நாடக மாநிலம் ஷிமோகா வில் உள்ள சீகேஹ‌ட்டியில் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த ஹர்ஷா (26) கடந்த 20ம் தேதி மர்ம நபர்களால் வெட்டி கொல்லப் பட்டார். இதன் பின்னணியில் முஸ்லிம் அமைப்பினர் இருப்பதாக மூத்த அமைச்சர் ஈஸ்வரப்பா பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திராவும் எஸ்டிபிஐ, பிஎப்ஐ ஆகிய‌...
இந்தியா

கிராமப்புற மேம்பாட்டுக்கு நிதிப்பற்றாக்குறை கிடையாது: பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டம்

கிராமப்புற மேம்பாட்டு திட்டங்களுக்கு நிதிப் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கிராமப்புற பொருளாதாரத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பாக காணொலி மூலம் நேற்று நடைபெற்ற விவாதத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: கிராமப்புறங்களை உள்ளடக்கிய திட்ட செயல்பாட்டுக்கென புதிய உத்திகள் வகுக்கப்பட்டுள்ளன. வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் கிராமப்புற மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மேம்பாட்டுக்கு தேவையான...
இந்தியா

ராமர் பாலம் தொடர்பான சுப்பிரமணியன் சுவாமி மனு மீது மார்ச் 9-ம் தேதி விசாரணை: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரி கடந்த 2020-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இதை 3 மாதங்களுக்குப் பின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில், "பல மாதங் களாக தனது மனு விசாரணைக்கு வரவில்லை. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கோரி நினை வூட்டினேன்....
இந்தியா

பீகாரின் முன்னாள் முதல்வருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை..!

5-ஆவது கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிகாா் மாநிலத்தின் பல்வேறு மாவட்ட கருவூலங்களிலிருந்து கால்நடைத் தீவனத்தைக் கொள்முதல் செய்வதற்காக சுமாா் ரூ.950 கோடி ஊழல் நடந்தது வெளிச்சத்திற்கு வந்தது. இந்த நிலையில், 5-ஆவது கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு...
இந்தியா

இன்று உ.பி 4ஆம் கட்டத் தேர்தல்

உத்தரபிரதேசத்தில் இன்று 4ம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. இதன் காரணமாக, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மூன்று கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், நான்காவது கட்டமாக 9 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 624 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர்....
இந்தியா

மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தின் கீழ் கரோனாவுக்கு முந்தைய காலத்தைவிட அதிக நிதியை செலவிட்ட 5 மாநிலங்கள்

மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தின் கீழ் கரோனாவுக்கு முந்தைய காலத்தைவிட அதிக நிதியை தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்கள் செலவிட்டுள்ளன. மத்திய அரசின் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கிராமப்புற மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்களுக்கு வேலை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கடந்த கரோனா பாதிப்புக்கு முந்தைய 2019-20 நிதியாண்டில் பிஹார் மாநிலம் 3,371 கோடி செலவிட்டது. ஆனால் கரோனா பாதிப்புக்கு பிறகு...
இந்தியா

கடற்படையின் வலிமையை பறைசாற்றும் அணிவகுப்பு: குடியரசுத் தலைவர் பார்வையிட்டார்

ஆந்திராவின் விசாகப் பட்டினத்தில் "கடற்படை ஆய்வு 2022" நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய கடற்படையின் 63 போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிகள் மற்றும் 50 விமானங்கள் அணிவகுத்தன. சுமார் 10,000 வீரர்கள் கடற்படை யின் வலிமையை பறைசாற்றினர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஐஎன்எஸ் சுமித்ரா கப்பலில் சென்று அணிவகுப்பை பார்வையிட்ட அவருக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத்...
1 21 22 23 24 25 82
Page 23 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!