இந்தியா

இந்தியா

மானிய ஒதுக்கீடு மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம்

வரும் 2022 – 2023ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் துறைகளுக்கான மானிய ஒதுக்கீடு மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. பிப்., 1ம் தேதி பா.ஜ.,வைச்சேர்ந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2022 – 2023ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். துறை ரீதியான மானிய கோரிக்கைகள் குறித்த விவாதம் நடந்து வந்தது. மத்திய பட்ஜெட் இரண்டு பிரிவுகளை உள்ளடக்கியது. துறைகளுக்கான மானிய...
இந்தியா

2 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வருகிறது கொரோனா கட்டுப்பாடுகள் – மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கொண்டுவந்த அனைத்து கட்டுப்பாடுகளும் மார்ச் 31ம் தேதிக்குள் முடிவுக்கு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகளின் பலனாக கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்திருக்கிறது. அதனைக் கருத்தில் கொண்டு இதுவரை நடைமுறையில் இருந்து வந்த கொரோனா கட்டுப்பாடுகளை இனியும் பின்பற்ற...
இந்தியா

கட்டாய மதமாற்ற தடை சட்டம்.. சட்டப்பேரவை ஒப்புதல்

ஹரியானா சட்டப்பேரவையில் மதமாற்றத்திற்கு எதிரான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டப்பேரவை வாக்கெடுப்பின் போது காங்கிரஸ் தலைவர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த மசோதாவின் படி, கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் குறைந்த பட்சம் 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். 2022 மதமாற்ற தடுப்பு மசோதாவுக்கு ஹரியானா அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 25, 26, 27 மற்றும்...
இந்தியா

கொரோனா தடுப்பூசி கட்டாயமல்ல: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை கட்டாயமாக்கவில்லை என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளது. கொரோனா தடுப்பூசி தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணையின்போது, அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டதாக தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்டது. இதற்கு மத்திய அரசு சார்பாக சொலிசிடர் ஜெனரல், துஷார் மேத்தா விளக்கம் அளித்தார். அதாவது, 100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் ஆனால் அது கட்டாயமல்ல...
இந்தியா

மேகதாது அணை விவகாரம்: தமிழகத்துக்கு எதிராக கர்நாடக பேரவையில் இன்று தீர்மானம்

மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து கர்நாடக பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட கர்நாடகா அரசு முயற்சித்து வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கிடைக்கும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்துவிடும் எனக் கூறி இத்திட்டத்துக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எதிர்ப்பை முன்னிறுத்தி, கர்நாடகாவின்...
இந்தியா

மணிப்பூர் முதல்வராக மீண்டும் பதவியேற்றார் பிரேன் சிங்

மணிப்பூர் மாநில முதல்வராக மீண்டும் என் பிரேன் சிங் திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார். மணிப்பூர் உள்பட உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்கு மார்ச் 10ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் மணிப்பூர் மாநிலத்தில் பாஜக பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றியடைந்தது. இதனைத்தொடர்ந்து முதல்வரைத் தேர்வு செய்வது தொடர்பாக மணிப்பூர் தலைநகர் இம்பாலில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று (மார்ச் 20) நடைபெற்றது....
இந்தியா

மாநிலங்களவை தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் களமிறங்கும் ஹர்பஜன் சிங்

பஞ்சாப் சார்பில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் போட்டியிடுகிறார். மாநிலங்களவையில் இமாச்சல பிரதேசம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களில் தலா 1 எம்.பி -யும், அஸ்ஸாமில் 2 எம்.பி.-யும், கேரளாவில் 3, பஞ்சாபில் 5 என எம்.பி பதவிகள் காலியாக உள்ளன. மூத்த காங்கிரஸ் தலைவர் ஏ.கே அந்தோணி, ஆனந்த் சர்மா, சிரோமணி அகாலி தள மூத்த தலைவர் நரேஷ்...
இந்தியா

இந்தியாவில் கரோனா பரவல் 4-வது அலைக்கு வாய்ப்பு: நிபுணர்கள் கருத்து

தென் கொரியா, பிரிட்டன் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் துணை திரிபான பிஏ2 என்ற வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிர சுகாதார சேவைகள் முன்னாள் இயக்குநரும் மாநில அரசின் தொழில்நுட்ப ஆலோசகருமான டாக்டர் சுபாஷ் சாலுங்கே கூறும்போது, 'உலகின் மற்ற நாடுகளில் நடந்தது போல் இந்தி யாவில் கரோனா நான்காவது அலை விரைவில் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நாம் பாதுகாப்பை குறைத்துக் கொள்ள முடியாது. நான்காவது...
இந்தியா

4 முன்பதிவில்லாத தினசரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கம்

இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ரயில்களில் பயணிகளின் தேவைகளை பொறுத்து மட்டுமே ரயில் சேவை இயக்கப்பட்டு வந்தது. தற்போது படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் முன்பு போல முன்பதிவில்லாத பெட்டிகளை இணைக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஒரு எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 அல்லது 5 பெட்டிகள் முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். கொரோனா காலத்தில் இந்த...
இந்தியா

தென் கிழக்கு ஆசியாவில் கரோனா பரவல் அதிகரிப்பதால் காய்ச்சல், சுவாச பிரச்சினையை கண்காணியுங்கள்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

தென் கிழக்கு ஆசியாவில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் காய்ச்சல், தீவிர சுவாசபிரச்சினை பரவல் உள்ளதா என்பதை கண்காணிக்கவேண்டும் என்று மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் வேகமெடுத்த கரோனா பரவல் தற்போது ஐரோப்பிய நாடுகளிலும் வேகமாக பரவி வருகிறது. ஒமைக்ரான் வைரஸ் தான் அதிகமாக பரவுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கரோனா வைரஸ் முதலில் உருவான சீனாவின் வூஹான்...
1 16 17 18 19 20 82
Page 18 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!