இந்தியா

இந்தியா

அரசுக்கு ஆண்டுக்கு ரூ.9,545 கோடி கூடுதல் செலவு; மத்திய அரசு ஊழியருக்கு 3% அகவிலைப்படி உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதார்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த உயர்வு, கடந்த ஜனவரி முதல் கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது. விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு வழங் கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்கள் தற்போது தங்கள் அடிப்படை ஊதியத்தில் 31 சதவீத தொகையை அகவிலைப்படியாக பெற்று வருகின்றனர். இதுபோல், ஓய்வூதியதாரர்கள்...
இந்தியா

3 மின் திட்டப் பணிகளில் இந்தியாவுடன் இலங்கை அரசு ஒப்பந்தம்: சீன நிறுவனத்துக்கு வழங்கிய பணிகள் ரத்து

இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள 3 தீவுகளில் மரபுசாரா மின்னுற்பத்தி திட்டங்கள் மேற்கொள்ள சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில் அதனை ரத்து செய்த இலங்கை அரசு, அப்பணிகளை இந்திய நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் முன்னிலையில் கையெழுத் தாகின. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்தில் உள்ள நைனா தீவு, நெடுந்தீவு மற்றும்...
இந்தியா

ஆளுங்கட்சி மூத்த தலைவர் சுட்டு கொலை..!! பீகாரில் பதற்றம்..!!

பீகாரில் முதல்வர் நிதீஷ் குமார் பக்தியார்பூர் நகரில் ஷீல்பத்ரா யாஜி என்ற சுதந்திர போராட்ட வீரரருக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கடந்த 2 நாட்களுக்கு முன் சென்றார். அவருடன் பாதுகாவலர்களும் இருந்தனர். அவர் மேடையேறி மலரஞ்சலி செலுத்தி கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவர் மேடை ஏறி சென்று, முதல்வரின் தோளில் ஒரு குத்து விட்டுள்ளார். இதனை கண்டவுடன் அருகேயிருந்த பாதுகாவலர்கள் உடனடியாக இளைஞரை சூழ்ந்து கொண்டு தள்ளி சென்றனர்....
இந்தியா

பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரம்: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு

பெட்ரோல் விலை உயர்வு குறித்துவிவாதிக்க அனுமதி மறுத்ததால்எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். இதனால் மாநிலங் களவை ஒத்திவைக்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்கக்கூடாது, பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மத்திய தொழிற்சங்கங்கள், நேற்றுகாலை 6 மணி முதல் மார்ச் 30-ம் தேதி காலை 6 மணி வரை (திங்கள், செவ்வாய்) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், நேற்று காலையில் மாநிலங்களவை கூடியவுடன்,...
இந்தியா

கர்நாடகா | ஹிஜாப் அணிந்த தேர்வு பார்வையாளர் சஸ்பெண்ட்: 100+ மாணவிகள் எஸ்எஸ்எல்சி தேர்வு புறக்கணிப்பு

கர்நாடகாவில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு பணியின் போது ஹிஜாப் அணிந்திருந்ததாக பார் வையாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். கர்நாடகாவில் ஹிஜாப் தடைக்கு பிறகு, நேற்று எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. எட்டு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்நிலையில் நேற்று ஷிமோகாவில் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுந்த வந்த முஸ்லிம் மாணவிகளை, ஹிஜாபை அகற்றுமாறு பள்ளி நிர்வாகம் வலியு றுத்தியது. இதனை ஏற்று பெரும் பாலான மாணவிகள்...
இந்தியா

முக்கிய மாநாடு: இலங்கை சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறை பயணமாக இலங்கை சென்றுள்ளார். கொழும்பில் இன்று தொடங்கவிருக்கும் பிம்ஸ்டெக் அமைப்பு மாநாட்டில் கலந்துகொண்டு அவர் உரையாற்ற உள்ளார். இதனை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழ், ஆங்கிலம், சிங்கள மொழிகளில் பதிவிட்டுள்ளார். அவரை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் சந்தித்து பேச உள்ளனர். இதனிடையே, இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டிமுடிக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் திறப்பு விழா இன்று நடைபெறவுள்ளது. இலங்கை...
இந்தியா

மத்திய அரசுக்கு எதிராக நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது : பொதுமக்கள் அவதி

நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது. இதன் காரணமாக சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் குறைந்த அளவே பேருந்துகள் இயங்கி வருகின்றனர். சென்னையில் பந்த் காரணமாக 90 சதவீத பேருந்துகள் சரிவர ஓடாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். முன்னதாக, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது, தொழிலாளர்களுக்கு விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வை...
இந்தியா

2 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் மீண்டும் இந்திய – சீன அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

இரு நாட்டு எல்லை பிரச்சினைகள் குறித்து இந்திய - சீன வெளியுறவுத் துறை அமைச்சர்கள் 2 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் நேற்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல்,மே மாதங்களில் லடாக் எல்லைப் பகுதிகளில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். இதன்காரணமாக கடந்த 2020 மே 5-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு வீரர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இருதரப்பிலும் உயிரிழப்புகள்...
இந்தியா

உத்தர பிரதேச மாநில அரசியலில் துறவியின் புரட்சி: 2-வது முறை முதல்வராக பதவி ஏற்ற ஆதித்யநாத்தின் நீளும் சாதனை பட்டியல்

உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிந்த உத்தராகண்டின் மலைப் பிரதேசத்தின் கர்வால் மாவட்டத்தின் பஞ்சூரில் ஜூன் 5, 1972-ல் பிறந்தவர் அஜய்சிங் பிஷ்த். வன இலாகா அதிகாரியான அனந்த்சிங் பிஷ்த் மற்றும்சாவித்ரி தேவியின் மகனாகப் பிறந்த அஜய்சிங் தற்போது யோகி ஆதித்யநாத் என்றழைக் கப்படுகிறார். தான் பிறந்த பவுரி மற்றும் ரிஷிகேஷில் பள்ளிப் படிப்பை முடித்தார். உத்தராகண்டின் பிரபலமான எச்.என்.பகுகுணா கர்வால் பல்கலை.யில் பிஎஸ்சி கணிதப் பிரிவில் பட்டம் பெற்றார்....
இந்தியா

மேற்கு வங்க வன்முறை சம்பவம்.. மிக பெரிய சதி நடந்திருப்பதாக முதல்வர் மம்தா குற்றச்சாட்டு..

மேற்கு வங்க வன்முறையில் மிக பெரிய சதி நடந்திருப்பதாக குற்றச்சாட்டிய அம்மாநில முதல்வர் மம்தா பனர்ஜி, காவல்துறையினர் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் பீர்பூம் மாவட்டம் ராம்புராட் பகுதியில் பர்ஷால் கிராம ஊராட்சி துணைத்தலைவர் பாது ஷேக் என்பவரை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் நாட்டு வெடிக்குண்டுகளை வீசி திங்கள்கிழமை இரவு தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனை கொண்டு செல்லும்...
1 15 16 17 18 19 82
Page 17 of 82

Right Click & View Source is disabled.

error: Content is protected !!